பெரிய யாகப்பர் சந்தியாகப்பர் ஆக மாறிய வரலாறு!

நம் தரங்கம்பாடி ட்ரங்க்பார் ஆன கதை தான். செயின்ட் ஜேம்ஸ் என்பது ஆங்கிலத்தில் அவருடைய பெயர். யேசுநதருடைய சகோதரர் என்று அழைக்கப்பேறு பெற்ற  சின்ன யாகப்பரிடமிருந்து அவரை வேறு படுத்திக்காட்டவே அவரை பெரிய யாகப்பர் என்று அழைத்தனர். எனவே இவரை பெரிய யாகப்பர் என்றும் ST.JAMES THE GREAT என்றும் சின்ன யாகப்பரை ST JAMES THE LESS அழைத்தனர்.

யாகப்பர் என்பது அரபியில் யாகூப் என்று அழைக்கப்படும். இவர் வேதம் போதிக்க ஸ்பெயின் தேசம் சென்று மீண்டும்   இஸ்ராயேல் தேசம் வந்தபோது ஏரோது மன்னனால் சிரச்சேதம் செய்யபட்டு வேத சாட்சியாய் மரித்தார், பல ஆண்டுகளுக்குப்பின்னர் ஸ்பெயின் தேசத்திலிருந்து வந்திருந்த அவருடைய சீடர்கள் அவருடைய கல்லரையைத்தோண்டி அவருடைய எலும்புகளை தங்களுடைய நாட்டிற்கு எடுத்துச்சென்றனர். அங்கு உலகப்புகழ் பெற்ற ஒரு ஆலயத்தை அவருடைய கல்லறை  மேலேயே கட்டினர். அது SANTIAGO DE COMPOSTALA என்று அழைக்கப்படுகிறது.

ஸ்பெயின் மக்களுக்கு நம் தமிழில் வல்லினம் போல் இருக்குமோ என்னமோ  தெரியவில்லை. அதனால் செயின்ட் என்பதை சந்த் என்றும் யாக்கோபு என்பதை யாஹூ என்றும் மொத்ததில் சந்த் யாஹூ என்று அழைத்தனர். அதுவும் பிற்காலத்தில் சந்தியாஹூ என்றுமாறியது. பிறகு நம் தமிழில்     சந்தியாகப்பர் என்று மாறியது.

இயேசுநாதருடைய பன்னிரண்டு சீடர்களும் வேத சாட்சிகளாய் பல்வேறு இடங்களில் மரித்திருந்தாலும் அவர்களுடைய கல்லரைகளில் நினைவுச்சின்னங்கள் எழுப்பப்பட்டிருந்தாலும்  அவர்களுள் மூன்று சீடர்களின் கல்லரைகள் மீதே ஆலயம் அமைக்கப்பட்டிருப்பது தனி சிறப்பாகும்.

அவைகள் ரோமில் வத்திக்கானில் புனித  இராயப்பர்  ஆலயமும் நம் இந்தியாவில் நம் சென்னையில் மயிலப்பூரில் அமைந்துள்ள புனித  தோமையார்  ஆலயமும் ஸ்பெயின் தேசத்திலுள்ள புனித சந்தியாகப்பர் ஆலயமும் ஆகும். இயேசு நாதருக்கு தன் பன்னிரெண்டு சீடர்களின் மீதும் பாசம் உண்டு என்றாலும் நம் புனித  சந்தியாகப்பர் மீது சற்று அதிகம் பாசம் கொண்டிருந்தார். இதைப்புறிந்துகொண்ட அவரது தாயார் சலோமி ஆண்டவரிடம் வந்து தன் இரு பிள்ளகளான புனித சந்தியாகப்பரையும் அவரது சகோதரர்  புனித அருளப்பரையும் இயேசுநாதர் மாட்சிமையில் வரும்போது அவருடைய வலப்பக்கத்தில் ஒருவரையும் இடப்பக்கத்தில் ஒருவரையும் அமர்த்திக்கொள்ள வேண்டிக்கொண்டார்.

அந்த சலோமிதான் எவ்வளவு பேராசைக்காரி.. இந்த சலோமி என்னும் பெண் இயேசு நாதருக்கு என்ன உறவின் முறை என்றாள்.....சலோமியின் கணவர் செபதேயு  சலோமியின் தாய் சோபி. தந்தை சாலமோன்... இந்த சோபியின் தாயார் இஸ்மேரியா தந்தை எலியுத். இந்த இஸ்மேரியாவுக்கு இரண்டாவது மகளாக சோபியின் தங்கையாக பிறந்தவர்தான் புனித அன்னம்மாள்.

புனித அன்னம்மாளின் மகள் தான் தேவதாயார். தேவ தாயாரின் ஒரே மகன் தான் இயேசு நாதர்.ஆக இயேசுநாதரும் புனித சந்தியாகப்பரும் அவர் சகோதரர்  சுவிசேஷகரான புனித அருளப்பரும் சகோதர உறவின் முறையினரே. இவர்கள் மீது இயேசு நாதர் வைத்த பேரன்பினால் தான் வல்ல செயல்கள் செய்யும்போதெல்லாம்  நம் புனித சந்தியாகப்பரை தன்னோடே வைத்துக்கொண்டார்.

நம் புனித சந்தியாகப்பருக்கு ஆண்டவருடைய வல்லமை அதிகமாகவே இருந்தது. ஏனெனில் அவர் நம் ஆண்டவர் மீது கொண்ட அன்பும் விசுவாசமும் மிகவும் அதிகம். இதனால் அவருடைய வாக்கின் வல்லமையும் அதிகமாயிற்று. இடியும் அவருக்கு கீழ்படியும். இயேசுநாதருக்கு நம் சந்தியாகப்பரைவிட  அவரது சகோதரர் அருளப்பரின்மீது பாசம் அதிகம் கொண்டார்.

அதினாலேதான் தன் இராப்போஜனத்தின் போது அருளப்பரை தன் வலப்பக்கத்தில் அமர்த்தி தன் மார்பின் மீது சாய்த்துக்கொள்ளவும் செய்தார்.        மேலும் தன் சிலுவைச்சாவின் போது தன் நேசமிகு தேவ தாயாரை தன் அன்பான சீடர் அருளப்பரிடம் இதோ உன் தாயார் என்றும் தன் தாயாரிடம் தனக்கு பதில் இதோ உன் மகன் என்றும் ஒப்படைத்தார் என்றால் இயேசு சுவாமி இவர்களிடம் எவ்வளவு அன்பும் நம்பிக்கையும் கொண்டிருந்தார் என்பது எளிதில் விளங்கும்.

இயேசுநாதர் இறந்த பின்பு நம் பன்னிரண்டு அப்போஸ்த்தலர்களும் ஒன்று கூடி இயேசுவின் நற்செய்தியை உலகம் அனைத்திற்க்கும் அறிவிக்க யார் யார் எந்தெந்த நாட்டிற்குப்போக   வேண்டும் என்று தங்களுக்குள்ளே சீட்டுப்போட்டுக்கொண்டார்கள். நம் சந்தியாகப்பருக்கு இஸ்பானியா [ஸ்பெய்ன்] தேசம் என்று வந்தது. இது தனக்கு ஆண்டவரின்  கட்டளை என்று உணர்ந்த புனித சந்தியாகப்பர் ஸ்பெய்ன் தேசம் புறப்பட்டார். தன்னோடு தன்னுடைய எட்டு சீடர்களை தெரிந்துகொண்டு ஸ்பெய்ன் தேசம் புறப்பட்டுவிட்டார்.

தூண் மாதா

ஸ்பெய்ன் தேசத்தில் பல இடங்களில் நம் புனித  சந்தியாகப்பர் வேதம் போதித்திருந்தாலும் அன்றைய கால கட்டத்தில் அவர் எதிர்ப்பார்த்தது போல மக்கள் உடனடியாக மனம் திருந்திவிட வில்லை. நாம் நினைத்தது போல் எல்லாம் நடந்து விட்டால் அப்புறம் தெய்வம் எதற்க்கு ?...புனித சந்தியாகப்பர் எவ்வளவோ புத்தி கூறினாலும்.....அற்புதங்களும் அருங்குறிகள் பல புரிந்தாலும் மக்கள் இயேசுநாதரை ஏற்றுக்கொள்ள மனதில்லாமல் இருந்தார்கள்.

" புனிதரை நோக்கி ...ஏதோ வெளி நாட்டிலிருந்து வந்திருகின்றாய்...நாலு நல்ல காரியமும் பண்ணுகின்றாய்... அதர்காக மனம் மாறு...மதம் மாறு...இயேசுவை ஏற்றுக்கொள்..என்றெல்லாம் சொன்னால் நமக்கு சரிப்பட்டுவறாது....புறிஞ்சி நடந்துக்கோ ... என்று சொல்லி கடகடவென்று சிரித்தான் ஒரு பயங்கர நாத்திகன் .

இப்படிப்பட்ட நிந்தைகளாள் நம் புனிதர்  சந்தியாகப்பர் மனம் வெறுத்து....என்ன மக்கள் இவர்கள்...வணங்காக்கழுத்துள்ள மக்கள்..இவர்கள் எல்லாம் என்னை என்ன வென்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் ?.....பேசாமல் இவர்கள் மேல் இடியை இறக்கிவிடவேண்டியது தான்.அப்போது தான் இவர்களுக்கு புத்தி வரும்  என்று நினைத்து சற்றே கண் மூடி இயேசுவை நினைத்தார்.

இயேசுநாதரும் அவர் முன்னே தோன்றினார்...யாகப்பா...ஏன் உனக்கு இவ்வளவு உக்கிரம்.. அன்று..நாம் உன்னை   சமாரியாவுக்கு நற்செய்தி அறிவிக்க அனுப்பியபோது கூறியவற்றை  மறந்துவிட்டாயா..... ஓநாய்களுக்கிடையே ஆட்டுக்குட்டியை அனுப்புவது போல் நான் உங்களை அனுப்புகிறேன்.... என் பெயரால் நற்செய்தியை அறிவியுங்கள்....நோய்களை தொட்டு குணமாக்குங்கள்...அசுத்த ஆவிகளை ஓட்டுங்கள்...

என் பெயரால் அனைத்தும் நடக்கும்.... அனைத்தும் உங்களுக்கு  கீழ்படியும்..என் நற்செய்தியை கேட்க்க செவியுள்ளவன் கேட்க்கக்கடவான்....தீயோரை அழிப்பது நம் தந்தையின் நோக்கமல்ல...தீயோர் மனம் திரும்பி மீண்டும் நம்மிடம் வருவதே நம் விருப்பம்.....ஆகவே சினம் தனிவாயாக....சினம் தன்னையும் அழித்து மற்றவரையும் அழிக்கும் ஒரு கொடும் ஆயுதம்...படை கொண்டிருப்பவனுக்கு அதை நடத்தவும் தெரியவேண்டும்....அடக்கவும் தெரிந்திருக்க வேண்டும்....இல்லை என்றால் அவனுக்கு அழிவு நிச்சயம்...இந்த மக்களை மீட்க்கத்தானே நாம் அனுப்பபட்டோம்...நீ சினம் கொண்டால் எப்படி... எனவே சினம் தனிவாயாக...பொறுமையைகடைபிடி என்றார்...

இவ்வளவு காட்சிகளும் நினைவுகளும் தான் அமர்ந்திருந்த எப்ரோ நதிக்கரையில் அவருக்கு தோன்றி   மறைந்தது. இந்த எப்ரோ நதியின் குளிர்ந்த காற்றின் இன்பத்தில் சுய நினைவுபெற்றார் நம் சந்தியாகப்பர்.. அப்போது ஒரு பேரதிசயம் அங்கு நடந்தது...அவருக்கு முன்பே இருந்த  ஒரு பெரிய பாறையின் மீது தேவ தாயார் தோன்றினார்கள்...அப்போது தேவ தாயார் உயிரோடுதான் இருந்தார்கள்...ஜெருசலேமில் சீயோன் பட்டணத்தில் தான் தங்கி இருந்தார்கள்

   ஒரே நேரத்தில் ஜெருசலேமிலும் இங்கே ஸ்பயின் தேசத்தில் எப்ரோ நதிக்கரையில் அமர்ந்திருந்த சந்தியாகப்பருடனும் தோன்றினார்கள். " மகனே சந்தியாகு..அமைதியாக இரு..  இந்த சாரகோசா என்னும் நகரில் எப்ரோ நதிக்கரையில் நாம் தோன்றியுள்ள இந்த பாறையின் மீது நமக்காக நம் பெயரில் ஒரு ஆலயம் அமைப்பாயாக..இந்த நாட்டு மக்களை நாம் இனி எம் மக்களாக ஏற்றுக்கொள்வோம்...இங்கு இனிமேல் பேரதிசயங்கள் நடக்கும் ...அனைவரையும் நாம் எம்பால் ஈர்த்துக்கொள்வோம்..

நம் பெயரில் ஆலயம் அமைத்த பிறகு மீண்டும்  ஜெருசலேம் பட்டிணம் வருவாயாக.. அங்கு உமக்காக வேத சாட்சி முடி காத்துக்கொண்டிருக்கிறது. .இதோ நம் வடிவம் இதை நீர் எம்பெயரில் கட்டப்போகும் அந்தக்கோவிலில் வைப்பாயாக" என்று ஒன்றேகால் அடி உயரமே உள்ள ஒரு திரு சுரூபத்தை  அவருக்கு கொடுத்தார். அந்த திரு சுரூபம்  தேவதாயாரும் அவர் திரு மகன் குழந்தையேசுவும் அவரது வலது கையில் ஒரு புறா இருப்பதுபோல் அமைக்கப்பட்டிருந்தது... இந்த திரு சுரூபம்  தாங்கும் பீடம் ஆறு அடி உயரம் கொண்டது.. இங்கு  தேவ தாயார் தூண் மாதா [OUR LADY OF PILLARS] என்று இன்றளவும் அழைக்கப்படுகின்றார்.

கி.பி. 44

   ஆக மாதா உயிரோடு இருந்த காலத்திலேயே அவருக்காக நம் சந்தியாகப்பர் தேவமாதாவின் பெயரில் ஒரு சிற்றாலயம் அமைத்தார். அது பிற்காலத்தில் மிகப்பெரும் ஆலயமாக ஸ்பெயின் தேசத்தில் சாரகோசா பட்டிணத்தில் விளங்குகின்றது. ஏராளமான பக்தர்களை தன்பால் ஈர்க்கிறாது. இந்த தூண் மாதா சுரூபமானது சம்மனசுகளாள் பரலோகத்திலிருந்து  கொண்டுவரப்பட்டாதக கூறப்படுகின்றது. சந்தியாகப்பர் தேவமாதா தனக்கு கட்டளையிட்டபடியே ஒரு சிற்றாலயம் அமைத்து அந்த தூண் மாதா திரு சுரூபத்தையும்  நிறுவி தன் கடமை   முடிந்தது என்று மீண்டும் தன் தாய்நாடான பாலஸ்தீனத்தில் ஜெருசலேம் வந்தார்.

    அப்போது அங்கு வேத கலாபனை ஆரம்பித்திருந்தது. இயேசுநாதரின் மறைவுக்குப்பின் யூத குருமார்களின் செல்வாக்கும் கெளரவமும் மிகவும் குறைந்துபோயிற்று. தங்கள்   அதிகாரத்தை மீண்டும் நிலை நாட்டவும் மோயீசனின் திருச்சட்டத்தை நிலை நாட்டவும் மிகவும் கடுமையான சட்டங்களை பிறப்பித்தார்கள். இயேசு நாதரின் பெயரைகூட பொதுவில் உச்சரிக்கக்கூடாது என்று கடுமையாக உத்திரவிட்டார்கள்.அப்போது அந்த நாட்டு அரசனாக இருந்தவன் ஏரோது அகரிப்பா. அவன் தன் பதவியைகாப்பாற்றி  கொள்ள யூத மதத்தலைவர்கள் சொல்வதர்கெல்லாம் ஆமாம் சாமி... ஆமாம் சாமி என்று நம் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை போலே தலையாட்டிகொண்டிருந்தான்.

    இந்த சூழ்நிலையில் நம் புனித சந்தியகப்பர் ஜெருசலேம் பட்டணத்தில் பிரவேசித்து அதனாரவாரமிக்க தெருக்களிள் வல்லமையாக பிரசங்கித்துக்கொண்டிருந்தர். இவரது தைரியமான மற்றும் வல்லமையான பிரசங்கத்தைக்கேட்ட மக்கள் மலைத்துப்போயினர். அதே நேரத்தில் ஏரோதன் தன் பரிவாரங்களோடு வந்து சந்தியாகப்பரை கைது செய்தான்.

ஜெருசலேம் நீதி மன்றத்தில் விசாரணையின் போது புனித சந்தியாகப்பர் இயேசுநாதரைப்பற்றி கூறிய விளக்கங்களும் ஆதாரங்களுக்கும் வல்லமையான பதில்களுக்கும் அங்கு கூடியிருந்த  யூத மத குருமார்களுக்கு பெரும் பயத்தை ஏற்படுத்தியது. இந்த விளக்கங்களைக்கேட்ட நீதிபதி அப்போதே தன் பதவியை ராஜினாமா செய்து தான் இயேசுநாதரை தன் இரட்சகராக ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார். இதனால் மிரண்டுபோன அரசன் ஏரோது அகரிப்பா உடனே நம் புனித சந்தியாகப்பருக்கும் அந்த நல்ல நீதிபதிக்கும் சிரச்சேதம் கட்டளை இட்டான்.

அந்த இருவருக்கும் உடனே சிரச்சேதம் நிறைவேற்றப்பட்டது. இவ்விதமாக தேவ தாயார் அன்று சாரகோசா பட்டினத்தில் நம் சந்தியாகப்பருக்கு கூறிய தீர்க்கதரிசனம் நிறைவேறியது.

மேலும் இயேசுநாதருக்காக் தன் உயித்தியாகம் செய்த முதல் அப்போஸ்தலர் என்றபட்டமும் பெற்றார்.

மீண்டும் சில காலம் கழிந்தபிறகு சந்தியாகப்பர்  சகோதர முறையினர் ஆன சின்ன யாக்கோபும் வேத சாட்சியாக மரித்தார். இருவரது கல்லறையும் அருகருகே இருந்தது. சுமார் இரண்டு நூற்றாண்டுகள் அளவாக இந்த கல்லறைகள் உள் நாட்டு புரட்சிகளாலும்,போர்களாலும் பலப்பல வேத கலாபனைகளாலும் கவனிப்பார் இன்றி கிடந்தன.

   அதர்க்குள் ஸ்பெயின் தேசத்தில் நம் புனித சந்தியாகப்பரால் தோற்றுவிக்கப்பட்ட கிறிஸ்தவம் வேகமாக பரவ ஆரம்பித்தது. பலப்பல கிறிஸ்தவ ராஜ்ஜியங்களும் தோன்றின. துரதிஸ்டவசமாக அவர்களுக்குள்ளே சமாதானம் இல்லாததால் ஒரு ஒன்றுபட்ட கிறிஸ்தவ ராஜ்ஜியம் ஏற்படவில்லை.

இந்த நிலையில் புனித  சந்தியாகப்பரின் சீடர்கள் நம் புனிதருக்கு  என்ன நேர்ந்தது என்று அறிய ஆவல் கொண்டு இஸ்ரேயல் தேசத்திற்கு வந்தனர். அவருக்கு ஏற்பட்ட முடிவைக்கண்டு மிகவும் வருந்தினர். சரி.. அவரது எலும்புகலையாவது எடுத்துச் செல்லலாம் என்று பார்த்தால் அவரது சமாதி இருந்த இடத்தில் நூற்றுக்கணக்கான சமாதிகள் இருந்தது கண்டு திகைத்துப்போயினர்.

சந்தியாகப்பர் அய்யா  இதோ உம்மை நாடி வந்துள்ளோம். உமது சமாதியை எங்களுக்கு காண்பிப்பீறாக என்று மனம் உருகி வேண்டினர். அப்போது அந்த அதிசயம் நடந்தது. அவர் வல்லமையான இடியின் மைந்தர் என்று இயேசு சுவாமி யாலேயே கூறப்பட்டவர் அல்லவா..... இதோ வானினின்று ஒரு இடி டமார் என்று இறங்கியது. அது புனித  சந்தியாகப்பரின் சமாதியை குழிபறித்து அடையாளம் காட்டியது.

அங்கும் சோதனை மிஞ்சியது. அந்தக்குழிக்குள் பல எலும்புகூடுகள் இருந்தன. யார் யாரோ எவ்விதமானவர்களோ...இதனால் கலக்கமுற்ற புனித  சந்தியாகப்பரின் சீடர்கள் மீண்டும் வேண்டுதல் வைத்து அவரது எலும்புகூட்டை அடையாளம் காட்ட வேண்டினர். அப்போது மீண்டும் அந்த அதிசயம் நடந்தது. மீண்டும் ஒரு இடியை இறக்கினார் புனித சந்தியாகப்பர்..

அந்த இடியின் வல்லமையால் இரண்டு எலும்புக்கூடுகள் மின்னின. அவைகள் மட்டும் தனியே பிறிக்கப்பட்டன. புனித சந்தியாகப்பரே இதில் உம்முடைய எலும்புக்கூடு எது என்று மீண்டும் வேண்டுதல் வைத்தனர். மீண்டும் அதிசயமாக ஒரு எலும்புக்கூடு மின்னியது. மற்றது அணைந்தது. மின்னிய எலும்புகூடு புனித  சந்தியாகப்பருடையது. மற்றது அவரது சகோதர உறவின் முறையான   சின்ன யாகப்பருடையது என்று கண்டார்கள்

பெரிய யாகப்பர் என்னும் புனித சந்தியாகப்பரும் சின்ன யாகப்பரும் ஒரே இடத்தில் சமாதி கண்டனர். அதாவது பெரிய யாகப்பர் தலை வெட்டப்பட்ட அதே இடத்தில்லேயே அவருக்கென்று  ஒரு ஆலயம் எழுப்பி அவரது தலையை மட்டும் அங்கேயே வைத்து சின்ன யாகப்பரின் எலும்புகளையும் அவரது தலை அருகே வைத்து ஒரே கோவிலாக எழுப்பினர்.

இன்றளவும் ஜெருசலேமில் அர்மீனியர்களின் ஆதிக்கத்தில் இந்த ஆலயம் மிகவும் பிரம்மாண்டமான ஆலயமாக உள்ளது. பிற்பாடு பெரிய யாகோபு என்னும் புனித சந்தியாகப்பரின் சீடர்கள் சந்தியாகப்பரின் மற்றைய எலும்புகளை ஸ்பெயின் தேசத்துக்கு கொண்டு போய் புதைத்தனர். நாளடைவில் சந்தியாகப்பரின் சமாதி எங்கு உள்ளது என்று கூட தெரியாமல் போய்விட்டது. இப்படியாக எட்டு நூற்றாண்டுகள் ஓடி மறைந்தன.

கி.பி..844

இந்த ஆண்டில் ஸ்பெயின் தேசத்தில் வடமேற்கில் காட்டுப்பகுதி வழியே தன்னந்தனியே பயணித்தார் ஒரு துறவி. அப்போது அந்த இரவில் ஒரு மண்மேட்டிலிருந்து ஒரு ஒளி வெள்ளம் தோண்றுவதைக்கண்டு அதிசயித்தார். அருகில் சென்று பார்த்த பொழுது வின்னகத்திலிருந்தும் ஒரு வினோதமான ஒர் ஒளி வெள்ளம் தோன்றி அந்த மண் மேட்டில் இறங்கியது கண்டு அதிசயித்தார்.

மேலும் வானோர் பாடலும் மிகத்தெளிவாக கேட்டதால் இந்த இடத்தில் ஏதோ அதிசயம் நடக்கப்போகிறது... அல்லது மறைந்துள்ளது என்று கண்டு கொண்டார். அந்த இடத்தை அடயாளம் வைத்துக்கொண்டு மேலும் பல சீடர்களை அழைத்துக்கொண்டு அந்த மண் மேட்டை தோண்டிப்பார்த்த பொழுது அங்கே நம் சந்தியாகப்பரின் எலும்புக்கூடுஒரு பெட்டியில் ஒளிர்ந்தது. மேலும் அந்த பெட்டியில் இருந்த சில பொருட்களை முன்னிட்டு அவை புனித  சந்தியாகப்பரின் எலும்புக்கூடுதான் என்று   நிச்சயித்தார்கள். அன்றிலிருந்து ஆரம்பமானது நம் புனித சந்தியாகப்பரின் அதிசயங்களும் அற்புதங்களும். இதைப்பற்றி கேள்விப்பட்ட அரசன் அல்ஃபொன்சா  ஓடோடி வந்தான்..

   புனித சந்தியாகப்பரை தெண்டனிட்டு வணங்கினான்...நம் சந்தியாகப்பரை ஸ்பெயின் தேசத்தின் பாதுகாவலர் என்று அறிவித்தான்...அவர் எலும்புகூடு கண்டுபிடிக்கப்பட்ட இடத்தின் பெயர் கம்போஸ்த்தலா என்பதாகும். எனவே இதே இடத்தில் அவர் சமாதி மீது ஒரு மிகப்பிரம்மாண்டமான கோவில் ஒன்றைகட்டினான். அவரது காலத்தில் அதற்கு இணையான ஆலயம் உலகில் எங்குமே இல்லை என்னும் அளவிற்கு அது இருந்தது. அந்த கோவிலின் முகப்பும் சரி உள்கட்டமைப்பும் சரி மிகவும்  பிரம்மாண்டம்தான்  அந்தக்காலத்திலையே இந்த ஆலயம்  இயேசுவின் திருவிலாவுக்கு ஒப்பானது என்று யாத்திரிகர்கள் அறியவந்தார்கள்.இப்போதும் இந்தக்கோவில் [ SANTIAGO DE COMPOSTALA ] என்று அழைக்கப்படுகிறது.

படைமிரட்டியார் புனித சந்தியாகப்பர்.

இந்த ஒன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆப்ரிக்கா கண்டத்தின் வடக்குப்பகுதியில் மத்திய தரைக்கடலின் பகுதிகளை தொட்டுக்கொண்டிருக்கும் நாடுகள் அனைத்தும் இஸ்லாமிய நாடுகளாயிருந்தன. அவைகள் துனிஷியா , அல்ஜீரியா, லிபியா, மொரொக்கோ, எகிப்து போன்ற நாடுகளாகும்.. இந்த ஆப்ரிக்கா கண்டத்தையும் ஐரோப்பா   கண்டத்தையும் மத்திய தரைக்கடல் பிரிக்கின்றது. இவற்றில் ஐரோப்பாவைச்சேர்ந்த ஸ்பெயின் நாட்டையும் ஆப்ரிக்காவைச்சேர்ந்த மொராக்கோவையும் ஜிப்ரால்ட்டர் ஜலசந்தி பிரிக்கிறது.

     இவ்விதமாக வடக்கே ஸ்பெயின்.... தெற்கே மொராக்கோ கிழக்கே மத்திய தரைக்கடல் மேற்கே அட்லான்டிக்கடல் ஆகிய அனைத்தையும் இந்த ஜிப்ரால்டர் ஜலசந்தி இணைக்கிறது அல்லது பிறிக்கிறது. இந்த ஸ்பெயினும் மொராக்கோவும் ஒரு காலத்தில் ஒரு பெரிய மலையாக இருந்ததாகவும் அபோது அதற்கு அட்லாண்டிஸ் மலை என்று பெயர் இருந்ததாகவும் கிரேக்க புராணங்கள் கூறுகின்றது.

அதன்படி ஹெர்குலெஸ் தன் பயணத்தின்போது இந்த அட்லாண்டிஸ் மலை தடையாக இருந்ததாகவும் அதனால் தன் கை வல்லமையால் ஒரே அடியில் பிளந்ததாகவும் அந்த மலை இரு கூறுகளாகபிறிந்துவிட்டதாகவும் வடக்கிலிருந்த ஸ்பெயின் பகுதியில் இருந்த மலை ஒரு தூண் என்றும் தெற்கில் மொரோக்கொவில் இருந்த மலை ஜாபெல் மூஸா என்றும் பெயர் வந்ததாகவும் எனவே இந்த மலையும் ஒரு தூண் என்றும் இந்த  இரண்டு தூண்களும் ஹெர்குலெஸ் தூண்கள் என்று பெயர் பெற்றதாகவும்  அட்லாஸ் மலை பிளந்துவிட்டதால் அட்லாண்டிக்கடல் மத்திய தரைக்கடலில் கலந்துவிட்டதாகவும் அது கலக்குகிடமே ஜிப்ரால்ட்டர் ஜலசந்தி என்று பெயர் வந்ததாகவும் கூறப்படுகின்றது.

     நம் புனித சந்தியாகப்பரின் எலும்புகள் தாங்கிய பெட்டியை எடுத்துச்சென்ற அவருடைய சீடர்கள்  இந்த மத்திய மத்திய தரைகடலில் பயணித்தபோது தாங்கள் பயணித்தகப்பலின்  துடுப்புகளை இழந்ததாகவும் மேகக்கூட்டம் தங்களை மறைத்துச்சென்று இந்த ஹெர்குலெஸ் தூண்கள் வழியே கொண்டு சென்றதாகவும் பிறகே கம்போஸ்தலா நகரில் இருந்ததை உணர்ந்ததாகவும் ஒரு பழைய இஸ்பானிய புராணம் கூறுகின்றது. இந்த புராணங்களை நம் திருச்சபையும் மதித்து ஏற்றுக்கொள்கிறது. இவற்றை பாம்பு என் நினைத்து தொடவும் முடியாது.... கயிறு என்று நினைத்து எடுக்கவும் முடியாது....

இத்தகைய சூழ்நிலையில் தான் திருச்சபையின் நிலையும் உள்ளது. காரணம்...கால இடைவெளி மிகவும்   அதிகம். போதிய ஆதரங்கள் இல்லை.. பாரம்பரிய செய்திகளை ஒதுக்கவும் முடியாது...அனைத்தையும் பரமபிதாவின் முடிவிற்கே விட்டுவிட வேண்டியதுதான். ஏன் எப்படி..எப்போது.. என்ற கேள்விகள் கேட்டால் பதில் கிடைக்காது.   இதைப்பற்றி ஆராய்ந்துபார்க்க நமக்கு சக்தியும் போதாது... காலமும் போதாது.. இது விஷயங்களில் திருச்சபையின் வழி காட்டுதலே உண்மையானதும் எளிதானதும் ஆகும்.

உண்மையில் இந்த ஜிப்ரால்டர் ஜலசந்தியின் அகலம் வெறும் 15 கி.மி. தான். இதனால் பழங்காலத்திலிருந்து ஸ்பெயினுக்கும் மொராக்கோவுக்கும் எளிதாக படகில்   பயணமித்துவிடமுடியும். இந்த பூலோக அமைப்பினால் இரு நாடுகளுக்குமே ஆதாயம் தான். வியாபாரம்...போக்குவரத்து போன்றவற்றால் இரு நாடுகளும் அதனதன்   வளர்ச்சிக்குத்தக்கபடி காசு பணம் சம்பாரித்துக்கொண்டன. அது மட்டுமல்ல... காசு...பணம்... வியாபாரம் என்றால் பூசல்களும் சேர்த்துதான் சம்பாரிக்கமுடியும்..

இந்த நிலையில் தெற்கே உள்ள இஸ்லாமிய நாடுகளிலிருந்து முரட்டு குணமுள்ள மூர் இன மக்கள் ஸ்பெயின் தேசத்தில் அடிக்கடி நுழைந்து அந்த மக்களைத்தாக்கி கொள்ளைஅடித்து நன்றாக  சம்பாரித்தார்கள்...பிறகு யாருக்கு அந்த எண்ணம் வந்ததோ தெரியவில்லை....ஏன் இந்த மக்களை கொள்ளை அடிக்க வேண்டும்...இவர்களை அடிமைபடுத்திவிட்டால்..... இந்த எண்ணத்தை செயல்படுத்தியதன் விளைவாகத்தான் எழுந்தது அல்ஹம்பராக்கோட்டை..

இந்த அல்ஹம்பராக்கோட்டையைப்பற்றிய ஒரு கவிதை இப்படி ஆரம்பிக்கிறது. இந்த கோட்டையைக்காணாத கண்கள் பாவப்பட்டவைகள்... இந்த ஊரில் பிறந்திருந்தும் இந்த கோட்டையைக்காணாதவனுக்கு இந்த பிறவியே வீண். என்று போகிறது கவிதை. இந்த அல்ஹம்பராக்கோட்டையில் மூன்று மாதம் தங்கியிருந்த ஒரு அமெரிக்க எழுத்தளர்  வாஷிங்க்டன் இர்விங்க் என்பவர் 1832 ஆம் ஆண்டு வெளியிட்ட அல்ஹாம்பராக் கதைகள் என்னும் புத்தகத்தில் இந்த கோட்டைபற்றி பல செய்திகளை எழுதி இருக்கின்றார்.

இந்த  கோட்டையின் நுழைவு வாயிலிலிருந்து ஆரம்பிக்கிறது இந்த மூர் மக்களின் கலா ரசனை... இந்த ரசனைகளை நாமும் ரசிக்கத்தக்க விதமாய் தங்கள். கைவேலைத்திறமைகளை காட்டி இருக்கிறார்கள். எண்களின் கணித முறைப்படி வரையப்பட்ட சலவைக்கற்கள் கண்களை மயக்குகின்றன.இந்த தங்கமயமான எழுத்துக்கள் சலவைகற்களில் வடிக்கப்பட்டவிதம் இவைகள் நிச்சயம் மனித காரியங்களே இல்லை..

தேனீக்களின்கூட்டைப்போன்று வடிக்கபட்ட ஜன்னல்கள் வளைவுகள் விதானங்கள் மஹால்கள் அடடா எதைச்சொல்ல... எதைவிட உயர்ந்த வெறும் மலைகளில் நீரில்லா பிரதேசங்களில் அனல்தெறிக்கும் பாலைவங்களில் வாழ்ந்த இந்த மூர் இன மக்களுக்கு நீரின் உபயோகமும் வெளிச்சத்தின் உபயோகமும் மற்றெல்லா மக்களைவிட நன்கு தெரியும் என்பதை அவர்கள் இந்த கோட்டையின் எல்லா இடத்திலும் காட்டி இருக்கிறார்கள். அதற்கு  இந்த 12 சிங்க மஹாலும், மீன் குளத்து மண்டபமும் சாட்சி. [ இதற்கு மேல் வேண்டுமானால் நேயர்கள் நேரில் போய்ப்பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்.]

இந்த அலஹம்பராக்கோட்டை மாட்சிமையோடு இருக்கும்போதுதான் நம் ஆண்டவரும் நம் புனித  சந்தியாகப்பரை மாட்சிமைப்படுத்த விரும்பினார். இந்த காலகட்டத்தில் தான்   கம்போஸ்தலா நகரில் நம் புனித  சந்தியாகப்பர் சமாதியும் கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கான ஆலயமும் கட்டப்பட்டது. இந்த ஆலயம் கட்டப்பட்டு சந்தியாகப்பரின் புகழ் அந்த ஐபீரிய   தீபகர்ப்பம் முழுவதும் பரவ ஆரம்பித்ததால் அடித்தது யோகம் அரசன் அல்ஃபொன்சாவுக்கு. ஸ்பெயின் நாட்டில் வடக்கிலிருந்தும் கிழக்கிலிருந்தும் தூய சந்தியாகப்பரை தரிசிக்க மக்கள்  வெள்ளம் படை எடுத்து வந்தது.

இதனால் வியாபாரம், தங்குமிடம்,போக்குவரத்து என பல வழிகளிலும் நாட்டிற்கு வருமானம் பெருகியது. சிறு சிறு குட்டி சமஸ்த்தானங்கள், குட்டி ராஜாக்கள் தங்களின் நிலைகளை உயர்த்திக்கொள்ளவும், பாது காப்பை முன்னிட்டும் ஒன்று சேர்நதனர். இது பல வல்லரசு நாடுகளான சார்சனியர்களுக்கும், துருக்கி பிற மதத்தினர்க்கும்   ஆப்ரிக்க பிற மத  நாட்டினர்களுக்கும் பிடிக்கவில்லை. எனவே ஸ்பெயின் மக்களுக்கும் பிற மத  மக்களுக்கும் அடிக்கடி சண்டை வெடித்தது.

அப்போது ஸ்பெயின் நாட்டில் அரசராக இருந்தவர் ரோமிரோ 1 . இவர் அப்போது அஸ்துரியாஸ் என்னுமிடத்தில் தன் குறைந்த படையினரோடு இந்த மிகப்பெரும் சார்செனிய படைகளுடன் மோதுவதர்க்கு தயாராக இருந்தார். என்னதான் அவருக்கு கடவுள் நம்பிக்கையும் தன் படைமீது நம்பிக்கையும் இருந்தாலும் ஏனோ மனம் கலக்கமுற்றார்..

தன் சைன்னியத்தினரை க்ளாவிஜோ என்னுடமித்தில் நிருத்தினார். அந்த இடத்தில் அன்றைய இரவில் புனித சந்தியாகப்பர் அரசன் ரோமிரோவின் கனவில் தோன்றி, " ரோமிரோ..நீ மனம் கலங்க வேண்டாம்..நாளைய போரில் இந்த சார்சனியர்களை எதிர்த்து உன் சார்பாக நான் போராடுவேன். வெற்றி உனதே...நான் ஒரு வெள்ளைக்குதிரையில் வெள்ளை ஆடையில் சிலுவை அடையாளமிட்ட வெள்ளைக்கொடியோடு இந்த பெரிய சார்செனிய சைனியத்தோடு போராடுவேன்... இதை நீயும் உன் வீரர்களும் மற்றும் சார்செனிய வீரர்களும் காண்பீர்கள்" என்று கூறி மறைந்து போனார்.

அரசன் ரோமிரோ அடைந்த சந்தோஷமும் தைரியமும் சொல்ல வார்த்தை இல்லை. அப்போதே இந்த கனவைப்பற்றி தன் படைத்தளபதிக்கும்  வீரர்களுக்கும்  அரிவித்து அந்த இரவிலேயே அந்த ஊர் வந்திக்கத்தக்க மேற்றாணியாரிடம் சென்று தன் கனவைத்தெரிவித்து வெற்றிகான ஆசீரும் அவரிடம் பெற்றான்.

நம் புனித சந்தியாகப்பர் கொடுத்த தைரியத்தினாலும் அவருடைய வாக்குறுதியினாலும் உத்வேகம் பெற்ற அரசனும் படையினரும் போர்க்களத்தில் பயங்கரமாகப்போரிட்டனர்.

போர்களத்தில் "என்ன ஆயிற்று இந்த கிறிஸ்தவர்களுக்கு " என்று ஆத்திரப்பட்டான் அந்த பிற மத  படைத்தளபதி. "இந்த சின்ன சைனியத்தை வைத்துக்கொண்டு நம்மை எதிர்க்க இந்த கி,நா.[ கிரிஸ்த்துவ நாய்கள் ]  எங்கிருந்து வந்தது இவ்வளவு தைரியம்..நம் படைக்குமுன் இந்த கிறிஸ்தவர்கள்   படை ஐந்து நிமிடங்களூக்கு கூட தாங்காது.. மார்ரே " என்று ஆணையிட்டான்...பயங்கர போர் ஆரம்பமாயிற்று.

பிற மத படையான சார்சேனியர்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது. அவர்களுள் பலர் தலை இழந்தனர். பல கிரிஸ்த்துவ படையினரும் பல பிற மத வீரர்கள்  புனித சந்தியாகப்பரை வெள்ளைக்குதிரையில் வெள்ளை உடையில் உருவிய கத்தியோடும் வெள்ளைகொடியுடனும் போர்கலத்தில் சுற்றி சுற்றி வருவதைக் கண்டார்கள்...புனித சந்தியாகப்பர் வாழ்க... புனித சந்தியாகப்பர் வாழ்க.என்று புனித  சந்தியாகப்பருக்கு ஜெயகோஷம் போட்டனர்.

அவ்வளவு தான்..பெரும் படைகொண்ட சார்செனிய சைனியம் பெரும் தோல்வி கண்டது... புனித சந்தியாகப்பரை எதிர்க்க முடியாது.. வாருங்கள் ஓடிப்போவோம் என்று குரல் கேட்டது.. அவ்வளவுதான்.. சார்சேனியப்பெரும்படை புறமுதுகு  காட்டி ஓடியது. அன்றையப்போரில் தலை இழந்தும் வெட்டப்பட்டு இறந்தவர்களும் குறைந்தது எழுபது ஆயிரம்பேர். இப்படியாக புனித சந்தியாகப்பர் போராளி அப்போஸ்த்தலர் என்றும்  படைமிரட்டி புனித சந்தியாகப்பர்  என்றும் பேர்பெற்றார்.

வேறொரு இஸ்பானிய பாரம்பரிய புராணம் புனித  சந்தியாகப்பரின் போரை இவ்வாறு வர்ணிக்கிறது. மம்மலுக்கர்கள் என்றும் மூர்கள் என்றும் பேர்பெற்ற முரட்டு இஸ்லாமிய கடற்கொள்ளை  வீரர்கள் அடிக்கடி இஸ்பானியா வந்து இம்மக்களை கொள்ளையிட்டு அம்மக்களை அடிமைப்படுத்தி சொல்லொண்ணாக் கொடுமைகளுக்கு உட்படுத்தினர். இதனால் மனம் வெறுப்புற்ற கிரிஸ்த்துவ மக்கள் புனித சந்தியாகப்பருக்கு வேண்டுதல் வைத்து இனிமேல் இப்படியொரு படை எடுப்பை தேவரீர் நிறுத்த வேண்டும் என்று அழுது மன்றாடினர்.

அந்த கால கட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நாவாய்களில் இஸ்பானிய தேசம் வந்த மூர்கள் மீண்டும் படைஎடுப்பை நிகழ்த்தினர். அப்போது வெள்ளைக்குதிரையில் வந்த புனித  சந்தியாகப்பர் அந்த முரட்டு மூர் கொள்ளையரை சங்காரம்பண்ணினார். எதிரி யார் என்று தெரியாமல் போரிட்ட பிற மத வீரர்கள்  தலை இழந்தனர்.

அப்போது புனித  சந்தியாகப்பரின் வாள் பிற மத படைத்தளபதியின் தலை மேல் நின்றது. உடனே தளபதி புனித  சந்தியாகப்பரிடம் சரண் அடைந்தான். தான் இனிமேல் மீண்டும் இந்த இஸ்பானிய மக்களுடன் போரில் ஈடுபடப்போவதில்லை  என்று உறுதி அளித்ததாகவும் அவரது திருவிழாவை சமாதானம் முன்னிட்டும் அவரது வெற்றியை முன்னிட்டும் தன் இன மக்களுடன் ஆண்டுதோரும் கொண்டடுவதாகவும் வாக்குறுதியளித்தான்.

அன்றிலிருந்து எங்கெல்லாம் புனித  சந்தியாகப்பர் கோவில் இருக்கின்றதோ அங்குள்ள முஸ்லிம்களும் சமாதானம் முன்னிட்டு புனித  சந்தியாகப்பருக்கு விழா எடுப்பதை வழக்கமாக்கிகொண்டுள்ளனர்.

" வீழ்ந்தது அல்ஹம்பராக்கோட்டை "

   இயேசுவின் அருளாலும் தூண்மாதாவின் அருளாளும் புனித சந்தியாகப்பரின்  ஆசீராலும் இந்த ஸ்பெயின் மக்கள் மிகுந்த ஆசீர்பெற்றனர். கி.பி. எட்டாம் நூற்றாண்டில் ஆரம்பித்த மூர் வம்சத்தவரின் ஆட்சி கி.பி.பதினைந்தாம் நூற்றாண்டில் அதாவது1492ல் முடிவுக்கு வந்தது. கி.பி.1526 ஆம் ஆண்டு சார்லஸ் 5 ஆம் அரசர் முழு ஸ்பெயின் தேசத்தையும் தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்து கிறிஸ்த்துவ சாம்ராஜ்ஜியத்தை ஸ்தாபித்தார்.

தன் ராஜ்ஜியத்திற்கு பாது காவலராய் புனித சந்தியாகப்பரை அறிவித்தார். இப்போதும் ஸ்பெயின் தேசத்திற்கு புனித சந்தியாகப்பரை தரிசிக்கவரும் பக்தர்கள் சாரகோசாவில் உள்ள தூண் மாதாவின் பேராலயத்தையும் கிரானடா பகுதியில் அமைந்திருக்கும் இந்த அல்ஹாம்பரா கோட்டையையும் சந்திக்காமல் செல்வதில்லை.

வாழ்க சந்தியாகப்பரின் திரு நாமம்!