சுவாமி கிருபையாயிரும்.
கிறீஸ்துவே கிருபையாயிரும்.
சுவாமி கிருபையாயிரும்.
கிறீஸ்துவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்
கிறீஸ்துவே, எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.
பரமண்டலங்களில் இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
இஸ்பிரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
அர்ச். தமத்திரித்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
அர்ச். மரியாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
சர்வேசுரனுடைய அர்ச்சயசிஷ்ட மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
கன்னியாஸ்திரீகளுக்குள் உத்தம அர்ச். கன்னிகையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
எங்கள் மகிமை பொருந்திய பிதாப்பிதாவாகிய அர்ச். சாமிநாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
சேசு கிறீஸ்து நாதரை உத்தமப் பிரமாணிக்கத்துடன் பின்பற்றியவரான அர்ச். சாமிநாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அவருடைய திரு இருதயத்தின் புண்ணியங்களை சிறந்த விதமாக அனுசரித்த அர்ச். சாமிநாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
திவ்ய சற்பிரசாதத்தின் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்த அர்ச். சாமிநாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
தேவமாதா பேரில் மிகுந்த பக்தி கொண்டிருந்த அர்ச். சாமிநாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அவர்களது மகிமையைப் பரப்பிய அர்ச். சாமிநாதரே, திருச்செபமாலை பக்தியைப் பரப்பிய அர்ச். சாமிநாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
குருக்களின் மேல்வரிச் சட்டமாகிய அர்ச். சாமிநாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
பிரசங்கிகளின் சந்நியாச சபையை ஸ்தாபித்தவரான அர்ச். சாமிநாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
பதிதக் கொள்கைகளை முறியடித்தவரான அர்ச். சாமிநாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
திருச்சபையில் கட்டுப்பாட்டைத் திரும்பக் கொணர்ந்த அர்ச். சாமிநாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
பொறுமையில் உயர்ந்து விளங்கிய அர்ச். சாமிநாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
மக்களை மோட்சம் சேர்ப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டிய அர்ச். சாமிநாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
வேதசாட்சியாக மிகுந்த ஆசையுடன் முயன்றவரான அர்ச். சாமிநாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
சுவிசே போதனைகளின்படி வாழ்ந்தவரான அர்ச். சாமிநாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
சத்தியத்தைப் போதித்த வேதசாஸ்திரியான அர்ச். சாமிநாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
கற்பை நேசித்தவரான அர்ச். சாமிநாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அப்போஸ்தலர்களின் பக்திப் பற்றுதலோடு உழைத்தவரான அர்ச். சாமிநாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
செல்வத்தின் மத்தியில் எளிய வாழ்க்கை நடத்தியவரான அர்ச். சாமிநாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
பரிசுத்த ஜீவியத்தில் சிறந்தோங்கியவரான அர்ச். சாமிநாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
ஆத்தும சேதமாக இருந்தவர்களைக் காப்பாற்ற அயராத ஆர்வம் காட்டியவரான அர்ச். சாமிநாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
சுவிசேத்தை எங்கும் போதித்தவரான அர்ச். சாமிநாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
தவத்தை நேசித்தவரான அர்ச். சாமிநாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
பரலோகக் காரியங்களைப் பூலோகத்திற்கு அறிவித்து வந்தவரான அர்ச். சாமிநாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
பூமியின் உப்பாயிருந்த அர்ச். சாமிநாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
உமது இரத்தத்தால் பூமிக்கு நீர் பாய்ச்சியவரான அர்ச். சாமிநாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
கன்னியர்களுடன் பரகதியில் வீற்றிருப்பவரான அர்ச். சாமிநாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
மிக்க தாழ்ச்சியுள்ளவரான அர்ச். சாமிநாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
மிகுந்த கீழ்ப்படிதலுள்ளவரான அர்ச். சாமிநாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
மிக உத்தம விரத்தரான அர்ச். சாமிநாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
உத்தம பிறர்சிநேகத்தைக் கொண்டிருந்தவராகிய அர்ச். சாமிநாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
சாகுந் தறுவாயில் நாங்கள் உம்முடன் பரகதியில் ஏற்றுக் கொள்ளப் படும்படி அர்ச். சாமிநாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி. எங்கள் பாவங்களை மன்னியும்.
எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி, எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.
சகல பாவத்தினின்றும், தீமையினின்றும்
பசாசின் கண்ணிகளினின்று,
நித்திய மரணத்தினின்று,
பிதாப்பிதாவான அர்ச். சாமிநாதரின் பேறுபலன்களைக் குறித்து,
அவரது உருக்கமான தேவசிநேகத்தைக் குறித்து,
அவரது அபூர்வமான உழைப்புகளைக் குறித்து,
சொல்லில் அடங்காத அவரது தவ முயற்சிகளைக் குறித்து,
அவர் தாமாகவே தெரிந்து கொண்ட தரித்திரத்தைக் குறித்து,
அவரது இடைவிடாத விரத்தத்துவத்தைக் குறித்து,
அவரது உத்தம கீழ்ப்படிதலைக் குறித்து,
அவரது ஆழ்ந்த தாழ்ச்சியைக் குறித்து,
அவரது அரிய வீரத்துவத்தைக் குறித்து,
அவரது ஏனைய புண்ணியங்களைக் குறித்து, ஆண்டவரே எங்களைக் காத்தருளும்.
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப்புருவையாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப்புருவையாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப்புருவையாகிய சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
முதல்: சேசுகிறீஸ்துநாதருடைய திருவாக்குத் தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாயிருக்கத் தக்கதாக,
பதில்: ஓ, பிதாப்பிதாவான அர்ச். சாமிநாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
ஜெபிப்போமாக.
ஓ சர்வ வல்லபரான சர்வேசுரா, எங்கள் பாவங்களின் சுமையால் நசுக்கப்படுகிற நாங்கள் உம்முடைய ஸ்துதியரும், எங்கள் நல்ல தந்தையுமான அர்ச். சாமிநாதரின் மன்றாட்டுக்களாலும், பேறுபலன்களாலும் ஆறுதல் பெறுவோமாக. எங்கள் ஆண்டவராகிய கிறீஸ்து நாதர் வழியாக.
ஆமென்.