முதல்: அருள் நிறைந்த மரியாயே, வாழ்க. கர்த்தர் உம்முடனே!
பதில்: பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர் நீரே. உம்முடைய திருவயிற்றின் கனியாகிய சேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே.
முதல்: ஓ இரட்சகரான எங்கள் சர்வேசுரா, எங்களை மனந்திருப்பும்.
பதில்: உமது கடுஞ்சினத்தை எங்களிடமிருந்து அகற்றியருளும்.
முதல்: சர்வேசுரா, எனக்கு உதவியாக வாரும்.
பதில்: கர்த்தாவே, எனக்கு ஒத்தாசை செய்யத் தீவரியும்.
முதல்: பிதாவுக்கும், சுதனுக்கும், இஸ்பிரீத்து சாந்துவுக்கும் மகிமை உண்டாவதாக.
பதில்: ஆதியிலிருந்ததுபோல் இப்பொழுதும், எப்பொழுதும், என்றென்றும் இருப்பதாக. ஆமென். அல்லேலூயா.
(செப்துவாஜெசிமா ஞாயிறிலிருந்து உயிர்ப்பு ஞாயிறு வரை அல்லேலூயாவுக்குப் பதிலாக: நித்திய மகிமைக்கு இராஜாவான ஆண்டவரே, உமக்கே தோத்திரமுண்டாகக் கடவது என்று சொல்லவும்.)