(ஆரம்ப வாக்கியமும், ஜெபமும் காலங்களுக்கு ஏற்ப மாறுபடும்.)
சுத்திகரத் திருநாள் முதல் உயிர்ப்பு ஞாயிறு வரைக்கும், மற்றும் அர்ச். தமத்திரித்துவ ஞாயிறு முதல் ஆகமனக் காலம் வரைக்கும்:
ஆரம்ப வாக்கியம்: அர்ச்சிஷ்ட மரியாயே! பரிதவிப்போர்க்குச் சகாயம் புரியும். இருதயக் கலக்கமுடையோருக்கு உதவி செய்யும். துயரப்படுவோர்க்கு ஆறுதல் அளித்தருளும். மக்களுக்காக வேண்டிக் கொள்ளும். குருக்களுக்காக மன்றாடும். பக்தியுள்ள பெண்களுக்காகப் பரிந்து பேசும்.
முதல்: ஆண்டவரே, என் மன்றாட்டைக் கேட்டருளும்.
பதில்: என் அபய சத்தம் உமது சந்நதி மட்டும் வரக் கடவது.
பிரார்த்திக்கக் கடவோம்
ஆண்டவராகிய சர்வேசுரா, உமது ஊழியர்களாகிய நாங்கள் எப்போதும் எங்கள் உடலிலும், உள்ளத்திலும் நலமுள்ளவர்களாக இருக்க உம்மை இறைஞ்சி மன்றாடுகின்றோம். எப்பொழுதும் கன்னிகையான முத்திப்பேறு பெற்ற மரியாயுடைய மகிமையுள்ள மன்றாட்டால் நாங்கள் இப்போதைய துயரத்திலிருந்து விடுவிக்கப்பட்டு வரவிருக்கும் நித்தியப் பேரின்பத்தை அனுபவிக்கத் தயைகூர்வீராக. எங்கள் ஆண்டவராகிய கிறீஸ்துவின் வழியாக.
பதில்: ஆமென்.
(ஆகமனக் காலம் முழுவதும்)
ஆரம்ப வாக்கியம்: ஓ கன்னியர்களின் கன்னிகையே! இது எவ்வாறு நிகழும்? ஏனெனில் உம்மைப் போல் இதுவரை ஒருவரும் தோன்றியதுமில்லை, இனி தோன்றப் போவதுமில்லை. ஓ ஜெருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் ஏன் என்னை ஆச்சரியத்துடன் பார்க்கிறீர்கள்? நீங்கள் கண்ணுறும் இப்பரம இரகசியம் முழுவதும் தெய்வீகமானது.
முதல்: ஆண்டவரே, என் மன்றாட்டைக் கேட்டருளும்.
பதில்: என் அபயசத்தம் உம் சந்நதி மட்டும்வரக்கடவது.
பிரார்த்திக்கக் கடவோம்
சர்வேசுரா, உமது வார்த்தையானவர் முத்திப்பேறு பெற்ற கன்னிகையாகிய மரியாயின் திருவுதரத்தில் மாமிசமாக மனுவுருவெடுக்கவும், அதனை ஒரு சம்மனசானவரைக் கொண்டு அவர்களுக்கு அறிவிக்கவும் சித்தமானீரே. அந்தப் பரிசுத்த கன்னிகையையே உமது பரிசுத்த தாயாராக ஏற்று, மெய்யாகவே விசுவசிக்கிற உம்முடைய அடியார்களாகிய நாங்கள், அத்திரு மாதாவின் மன்றாட்டினால் உமது உதவியைப் பெற்றுக் கொள்ளத் தயைபுரியும். எங்கள் ஆண்டவராகிய கிறீஸ்துநாதர் வழியாக.
பதில்: ஆமென்.
(கிறீஸ்துமஸிலிருந்து சுத்திகரத் திருநாள் வரை)
ஆரம்ப வாக்கியம்: ஓ அதிசயத்திற்குரிய தேவமனித ஒன்றிப்பே! மனுக்குலத்தின் சிருஷ்டிகர் தமக்கென ஓர் உயிருள்ள சரீரத்தைப் பெற்றுக் கொள்வதில், ஒரு கன்னிகையிடமிருந்து பிறக்கத் தயைகூர்ந்தார். மேலும், மனித வம்சாவளி ஏதுமின்றி ஒரு மனிதனாக நம் மத்தியில் வந்து, நம் மீது தமது தெய்வீகத்தைப் பொழிந்தருளினார்.
முதல்: ஆண்டவரே, என் மன்றாட்டைக் கேட்டருளும்.
பதில்: என் அபய சத்தம் உம் சந்நதி மட்டும் வரக்கடவது.
பிரார்த்திக்கக் கடவோம்
ஓ சர்வேசுரா, முத்திப்பேறு பெற்ற கன்னிமரியாயின் பலனுள்ள கன்னிமையின் வழியாக மனுக்குலத்திற்கு நித்திய இரட்சணியத்தின் வெகுமதியை வழங்கியுள்‡ ளீரே! அவர்கள் வழியாகவே ஜீவியத்தின் கர்த்தரை அடைந்து கொள்ள நாங்கள் தகுதி பெற்றோம். ஆதலால் தேவரீரை நோக்கி மன்றாடும் அடியோர்கள், அவ்வாறே அத்திரு மாதா எங்களுக்காகப் பரிந்து பேசுவதையும் உணருவோமாக. எங்கள் ஆண்டவ‡ ராகிய கிறீஸ்து நாதர் வழியாக.
பதில்: ஆமென்.
(உயிர்ப்பு ஞாயிறு முதல் தமத்திரித்துவ ஞாயிறு வரை)
ஆரம்ப வாக்கியம்: பரலோகத்துக்கு இராக்கினியே மனங்களிகூரும். அல்லேலூயா.
அதேதெனில் பாக்கியவதியான உமது திருவுதரத்தில் அவதரித்தவர். அல்லேலூயா.
தாம் திருவுளம்பற்றின வாக்கின்படியே
உயிர்த்தெழுந்தருளினார் அல்லேலூயா.
எங்களுக்காக சர்வேசுரனை மன்றாடும் அல்லேலூயா.
(ஆண்டவரின் பரலோக ஆரோகணக் காலம்)
அவர் தாம் திருவுளம் பற்றின வாக்கின் படியே
மோட்சத்திற்கு எழுந்தருளினார் அல்லேலூயா.
முதல்: ஆண்டவரே, என் மன்றாட்டைக் கேட்டருளும்.
பதில்: என் அபயசத்தம் உம் சந்நதி மட்டும் வரக்கடவது.
பிரார்த்திக்கக் கடவோம்
ஆண்டவராகிய சர்வேசுரா, உமது ஊழியர்களாகிய நாங்கள் எப்போதும் எங்கள் உடலிலும் உள்ளத்திலும் நலமுள்ளவர்களாக இருக்க உம்மை இறைஞ்சி வேண்டுகின்றோம். எப்பொழுதும் கன்னிகையான முத்திப்பேறு பெற்ற மரியாயுடைய மகிமையுள்ள மன்றாட்டினால் நாங்கள் இப்போதைய துயரத்திலிருந்து விடுவிக்கப் பட்டு, வரவிருக்கும் நித்தியப் பேரின்பத்தை அனுபவிக்கத் தயைகூர்வீராக. எங்கள் ஆண்டவராகிய கிறீஸ்துவின் வழியாக.
பதில்: ஆமென்.
(இங்கு இந்த நாளுக்குரிய அர்ச்சிஷ்டவர் அல்லது சாமிநாதர் சபை அர்ச்சிஷ்டவரின் நினைவு ஜெபத்தைச் சொல்லவும்.)
நமது பரிசுத்த தந்தை அர்ச். சாமிநாதரின் நினைவு ஜெபம்
ஆரம்ப வாக்கியம்: எங்கள் மாபெரும் தகப்பனாகிய அர்ச். சாமிநாதரே! எங்கள் இறுதி நேரம் வரும்போது, மோட்சத்தில் எங்களை வரவேற்பீராக. அது வரை இங்கே இப்பூலோகத்திலும் கூட எங்களை எப்பொழுதும் கண்காணித்தருளும்.
முதல்: நீதிமானின் வாயானது ஞானத்தைப் பேசும்.
பதில்: அவருடைய நாவும் நீதித் தீர்ப்பை எடுத்துரைக்கும்.
பிரார்த்திக்கக் கடவோம்
ஓ சர்வேசுரா, உமது ஸ்துதியரும், எங்கள் ஆசீர்வதிக்கப்பட்ட தந்தையுமான அர்ச். சாமிநாதரின் பேறுபலன்களாலும், போதனைகளாலும் உமது திருச்சபையை ஒளிர்வித்து வளப்படுத்தத் திருவுளமானீரே. அவர் தமது வேண்டுதலினால், அந்தத் திருச்சபை தனது உலக நன்மைகளில் குறைவுபடாமலும், தனது ஞான வளர்ச்சியில் மேன்மேலும் முன்னேறும்படியாகவும் வரமருள உம்மை மன்றாடுகிறோம். எங்கள் ஆண்டவராகிய கிறீஸ்துநாதர் வழியாக.
பதில்: ஆமென்.
கன்னிகையான அர்ச். சியயன்னா கத்தரீனம்மாள் நினைவு ஜெபம்
ஆரம்ப வாக்கியம்: கன்னிகையான அர்ச். கத்தரீனம்மாள், தனது பேறுபலன்களால் நம்மை ஆதரித்துக் காத்து, நம்மை மோட்ச இராச்சியத்திற்குக் கூட்டிச் செல்வாளாக!
முதல்: சிட்டுக்குருவி தான் வசிப்பதற்கு ஒரு வீட்டைக் கண்டடைந்தது.
பதில்: தனது குஞ்சுகளை வைப்பதற்கு மாடப்புறா தனக்கென ஒரு கூட்டைக் கண்டடைந்தது.
பிரார்த்திக்கக் கடவோம்
ஓ சர்வேசுரா, முத்திப் பேறு பெற்ற கத்தரீனம்மாள் தீய ஆவியின் தாக்குதல்களை வெற்றி கொள்ளவும், உமது திருநாமத்தின் மீதான நேசத்தில் உறுதியாக இருக்கவும், விசே சலுகையான கன்னிமையிலும், பொறுமையிலும் தவறாதிருக்கவும் செய்தருளினீரே. அவளுடைய முன்மாதிரிகையால் நாங்கள் இவ்வுலகத் தீமைகளை வெல்லவும், எங்களது சகல எதிரிகளின் தந்திர சூழ்ச்சிகளை மேற்கொள்ளவும், அதனால் உமது நித்திய மகிமைக்குப் பாதுகாப்பாக வந்து சேரவும் தேவையான வரத்தை எங்களுக்குத் தந்தருளும். எங்கள் ஆண்டவராகிய கிறீஸ்துநாதர் வழியாக. ஆமென்.
அர்ச். மரிய மதலேனம்மாள் நினைவு ஜெபம்
ஆரம்ப வாக்கியம்: மரியம்மாள் சேசுநாதரின் பாதத்தைப் பரிமளத் தைலம் பூசித் தன் கூந்தலால் துடைத்தாள். அந்த இல்லம் முழுவதும் தைலத்தின் சுகந்த வாசனையால் நிரம்பியது.
முதல்: மரியம்மாள் நல்ல பங்கைத் தேர்ந்து கொண்டாள்.
பதில்: அது அவளிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.
பிரார்த்திக்கக் கடவோம்
ஓ மிகவும் இரக்கமுள்ள பிதாவே, முத்திப்பேறு பெற்ற மரிய மதலேனம்மாள் எல்லாவற்றிற்கும் மேலாக எங்கள் ஆண்டவராகிய சேசுகிறீஸ்துநாதர் மீது கொண்டிருந்த சிநேகத்தால் அவளுடைய பாவங்களுக்கு மன்னிப்படைந்தாளே! அதே போல் உமது கனிவுள்ள இரக்கத்தினால் நித்திய ஜீவிய பாக்கியத்தை எங்களுக்கு அடைந்து தருவாளாக. எங்கள் ஆண்டவராகிய அதே கிறீஸ்துநாதர் வழியாக ஆமென்.
சபையின் அர்ச்சிஷ்டவர்களின் நினைவு ஜெபம்
ஆரம்ப வாக்கியம்: தந்தை சாமிநாதரின் சபையால் உருவாக்கப் பட்ட அர்ச்சிஷ்டவர்கள் கிறீஸ்து நாதரின் பரிசுத்த வரப்பிரசாதத்தால் உயர்த்தப் பட்டார்களே. நாங்கள் அவர்களுடைய பேறுபலன்களால் உதவி பெறவும், அவர்களுடைய ஜெபங்களினால் சர்வேசுரனிடம் கையளிக்கப் படவும் கெஞ்சி மன்றாடுகிறோம்.
முதல்: அர்ச்சிஷ்டவர்களின் ஞானத்தைத் தேசங்கள் பறைசாற்றுவனவாக.
பதில்: திருச்சபையும் அவர்களது புகழ்ச்சியை எடுத்துரைப்பதாக.
பிரார்த்திக்கக் கடவோம்
எல்லாம் வல்ல சர்வேசுரா! எங்கள் சபையின் அர்ச்சயசிஷ்டவர்களின் நன்மாதிரிகைகள் நாங்கள் இன்னும் அதிக உத்தமமான ஜீவியம் நடத்தும்படி எங்களைத் தூண்ட வரமருளும். மேலும் அவர்களது நினைவைக் கொண்டாடும் நாங்கள் அவர்களது கிரியைகளைக் கண்டு பாவிக்கவும் எங்களுக்கு அருள் புரிவீராக. எங்கள் ஆண்டவராகிய கிறீஸ்து நாதர் வழியாக. ஆமென்.
சகல அர்ச்சிஷ்டவர்களின் நினைவு ஜெபம்
ஆரம்ப வாக்கியம்: ஓ சர்வேசுரனுடைய சகல அர்ச்சிஷ்டவர்களே, எங்களுடையவும், மனுக்குலம் முழுவதினுடையவும் இரட்சணியத்திற்காக மன்றாடுவீர்களென்று எங்களுக்கு உறுதி கூறுங்கள்.
முதல்: சேசுகிறீஸ்து நாதருடைய திருவாக்குத் தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாயிருக்கத் தக்கதாக,
பதில்: சர்வேசுரனுடைய சகல அர்ச்சிஷ்டவர்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.
பிரார்த்திக்கக் கடவோம்
ஆண்டவரே, உமது சகல அர்ச்சிஷ்டவர்களும் எங்களுக்காகத் தொடர்ந்து ஜெபிக்க வரமருளுமாறு உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறோம். மேலும் உமது இனிமையுள்ள இரக்கத்தோடு அவர்களது மன்றாட்‡ டுக்குத் தேவரீர் செவிசாய்க்கத் தயை புரியும். எங்கள் ஆண்டவராகிய கிறீஸ்து நாதர் வழியாக. ஆமென்.
சமாதானத்திற்கான மன்றாட்டு
ஆரம்ப வாக்கியம்: ஆண்டவரே, எங்களுடைய காலத்தில் எங்களுக்கு சமாதானத்தைத் தந்தருளும். ஏனெனில் எங்களுக்காகப் போராட எங்கள் கர்த்தராகிய தேவரீரையன்றி எங்களுக்கு வேறு யாருமில்லை.
முதல்: உமது பலத்தில் சமாதானம் இருப்பதாக.
பதில்: உமது கோட்டைகளில் சம்பூரணம் விளங்குவதாக.
பிரார்த்திக்கக் கடவோம்
ஓ சர்வேசுரா, பரிசுத்தமுள்ள ஆசைகளும், நல்ல ஆலோசனைகளும், நீதியுள்ள அலுவல்களும் உம்மிட‡ மிருந்தே புறப்படுகின்றன. உலகம் தர முடியாத சமா‡ தானத்தை உம் ஊழியர்களாகிய எங்களுக்குத் தந்தரு‡ ளும். அதனால் எங்கள் இருதயங்கள் உமது கற்பனை‡ களின் மீது ஊன்றி நிலைத்திருக்கவும், உமது பாதுகாவ‡ லினால் எங்கள் சத்துருக்களின் மீதான அச்சம் நீங்கி இக்காலங்களில் சமாதானம் எங்களில் நிலைபெறவும் செய்தருளும். இந்த மன்றாட்டுக்களையயல்லாம் தேவரீரோடு, இஸ்பிரீத்து சாந்துவின் ஐக்கியத்தில் ஏக சர்வேசுரனாய் சதாகாலமும் இராச்சியபாரம் பண்ணு‡ கிற எங்கள் ஆண்டவரும், உமது திருச்சுதனுமாகிய சேசுகிறீஸ்து நாதர் வழியாக எங்களுக்குத் தந்தருளும்.
பதில்: ஆமென்.
முதல்: ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
பதில்: என் அபய சத்தம் உமது சந்நதி மட்டும் வரக் கடவது.
முதல்: ஆண்டவரை வாழ்த்துவோமாக.
பதில்: சர்வேசுரனுக்கு நன்றி!
முதல்: அருள் நிறைந்த மரியாயே, வாழ்க. கர்த்தர் உம்முடனே!
பதில்: பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப் பட்டவர் நீரே. உம்முடைய திருவயிற்றின் கனியாகிய சேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே.