அப்பத்தை, இரசத்தைத் தேவ வசீகரமாக்குதல்

அப்பத்தைத் தேவ வசீகரமாக்குதல்

அவர் தாம்  பாடுபடுவதற்கு   முந்தின  நாள், தம்முடைய பரிசுத்தமானவைகளும், வணக்கத்துக்குரியவைகளுமான கரங்களில் அப்பத்தை எடுத்து, சர்வ வல்லபரான தம் பிதாவும் சர்வேசுரனுமாகிய தேவரீரை வானத்தில் கண்களை ஏறெடுத்து நோக்கி, தேவரீருக்கு நன்றியறிந்த தோத்திரஞ் செய்து, அதை ஆசீர்வதித்துப் பிட்டுத் தமது சீடர்களுக்குக் கொடுத்துத் திருவுளம் பற்றுவார்:  நீங்கள் எல்லோரும் வாங்கி இதைப் புசியுங்கள். ஏனெனில் இது என் சரீரமாயிருக்கின்றது.


இரசத்தைத் தேவ வசீகரமாக்குதல்

அப்படியே இராப்போசனம் புசித்த பின், இவ்வுன்னதமான பாத்திரத்தையும், தம்முடைய பரிசுத்தமானவைகளும், வணக்கத்துக்கு உரியவைகளுமான கரங்களில் எடுத்து, மறுபடியும் தேவரீருக்கு நன்றியறிந்த தோத்திரஞ் செய்து, அதை ஆசீர்வதித்துத் தமது சீடர்களுக்குக் கொடுத்துத் திருவுளம் பற்றுவார்: நீங்கள் எல்லோரும் இதிலே பானஞ் செய்யுங்கள். ஏனெனில் இது புதிதும் நித்தியமுமான உடன்படிக்கையின் எனது இரத்தத்தின் பாத்திரம்; விசுவாசத்தின் பரம இரகசியம்; இது உங்களுக்காகவும் அநேகருக்காகவும் பாவமன்னிப்புக்காகச் சிந்தப்படும். 

நீங்கள் இவைகளைச் செய்யும்போதெல்லாம் என் ஞாபகமாகச் செய்வீர்கள்.