கடைசியாக, நரகத்திலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள விரும்புவோருக்குப் பரலோகம் மரியாயின் மாசற்ற இருதயத்தை அவர்களுடைய அடைக்கலமாகக் கொடுக்கிறது. 1917 ஜூலை 13 அன்று நம் பரிசுத்த மாதா பாத்திமாவின் மூன்று குழந்தைகளுக்கும் நரகத்தைத் திறந்து காட்டினார்கள். பசாசுக்களும், சபிக்கப்பட்ட ஆத்துமங்களும் அதில் அமிழ்த்தப்பட்டிருந் தார்கள். அவர்கள் நரகத்தில் படும் கொடூர வாதைகளைக் கண்ட குழந்தைகள் அச்சத்தால் நடுங்கிப் போய், மாதாவை நோக்கிக் கண்களை உயர்த்த, மாதா எல்லையற்ற கருணையோடும் துயரத்தோடும். அவர்களைப் பார்த்து: "பரிதாபத்திற்குரிய பாவிகள் செல்லும் நரகத்தைக் கண்டீர்கள். இதிலிருந்து ஆத்துமங்களைக் காப்பாற்ற, உலகில் என் மாசற்ற இருதய பக்தியை ஏற்படுத்த கடவுள் விரும்புகிறார் என்றார்கள்.
ஆம்! மரியாயின் மாசற்ற இருதய பக்தி நரக ஆபத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிற பாவிகளை இரட்சிக்கும் வல்லமையுள்ள ஆயுதமாக கடவுளாலேயே நமக்குத் தரப்படுகிறது. ''உலகம் தமது முந்திய உபாயங்களையெல்லாம் மறுத்துத் தள்ளி விட்டதைக் கண்டு, கடவுள் கடைசியாக இந்த உத்தம் பக்தியை ஒரு வித அச்ச நடுக்கத்தோடு மனிதனுக்குத் தருகிறார். இதையும் நாம் கைநெகிழ்ந்து விடுவோம் என்றால், இனி மோட்சத்தின் மன்னிப்பு நமக்குக் கிடைக்காது.
ஏனெனில் அப்போது பரிசுத்த சுவிசேஷத்தால் பரிசுத்த ஆவியான வருக்கு எதிரான பாவம் என்று கூறப்படும் பாவத்தைச் செய்தவர் களாக நாம் இருப்போம். இப்பாவம், நமக்குத் தரப்படும் இரட்சணியத்தை முழு அறிவோடும், முழு மன சம்மதத்தோடும், பகிரங்கமாக மறுதலிப் பதில் அடங்கியுள்ளது'' என்று சகோதரி லூஸியா கூறுகிறாள்.
நம் அன்னை தொடர்ந்து, ''இந்த பக்தியைக் கைக்கொள் பவர்கள் அனைவருக்கும் நான் இரட்சணியத்தை வாக்களிக் கிறேன். இந்த ஆத்துமங்கள் கடவுளின் சிம்மாசனத்தை அலங்கரிக் கும்படி என்னால் வைக்கப்படுகிற மலர்களைப் போல கடவுளுக்குப் பிரியமானவர்களாக இருப்பார்கள்...'' என்கி றார்கள்! எத்தகைய நம்பிக்கை தரும் வார்த்தைகள்! நம்ப முடியாத அளவுக்கு மிக எளிதான இரட்சணிய வழி ஒன்று நமக்குத் தரப்படுகிறது : அமல உற்பவக் கன்னிகையின் பேரில் சேசுவின் திரு இருதயம் கொண்டுள்ள விசேஷ அன்பை நம்முடையதாக்கிக் கொள்வதும், அவர்களுடைய சின்னச் சின்ன வேண்டுகோள்களை நிறைவேற்றுவதன் மூலம் அவர்களுக்கு நம் பிரமாணிக்கத்தை எண்பிப்பதும் போதுமானது. மரியாயின் மாசற்ற இருதய பக்தி : இரட்சணியமடைய ஒரே நிபந்தனை ! மோட்சத்தை அடைவது மிகவும் கடினம் என்று இனியார் சொல்லத் துணியக்கூடும்?
பாத்திமா பரிகார பக்தியில் மாதா புதிதாக எதையும் நமக்குத் தந்து விடவில்லை. குறைந்த பட்சம் மாதத்திற்கு ஒரு முறையாவது நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து, திவ்ய நற்கருணை உட்கொண்டு, ஜெபமாலை ஜெபித்து, சேசுமரியாயின் வாழ்வின் சகல நிகழ்ச்சிகளையும் தியானித்து, இந்த பக்தி முயற்சிகளையெல்லாம் தனது மாசற்ற இருதயத்திற்கு எதிராகக் கட்டிக் கொள்ளப்படுகிற பாவங்களுக்குப் பரிகாரமாக ஒப்புக்கொடுக்கும்படி மட்டுமே நம் இனிய அன்னை கேட்கிறார்கள். கத்தோலிக்கத் திருச்சபை காலகாலமாகத் தன் பிள்ளைகளிடம் கேட்டு வரும் காரியங்கள் தான் இவை. ஆகவே நிர்ப்பாக்கியப் பாவிகளை உங்கள் திவ்ய அன்னையோடு சேர்ந்து இரட்சிக்கிற சிறிய இரட்சகர்களாக இருக்கும்படி நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள்.
(சோதோம், கொமோராவில் பத்து நீதிமான்கள் மட்டும் காணப்பட்டால், அந்தப் பத்துப் போரின் நிமித்தம் அந்தப் பட்டணங்களை அழிப்பதில்லை என்று கடவுள் ஆபிரகாமுக்கு வாக்களித்தார் (ஆதி. 18:32). அதை விட மேலாக, இன்று தம் பிரிய மகளும், அன்புத் தாயும், நேச பத்தினியுமான மாமரிக்கு ஆறுதலளிக்கும்படி தங்களை பலியாக்க ஒரு சில ஆத்துமங்களாவது முன்வருமானால், நரகத்திலிருந்து பரிதாபத்திற்குரிய ஆத்துமங்களையும், பேரழிவுகளிலிருந்து உலகத்தையும், விசுவாச அழிவினின்று திருச்சபையையும் பாதுகாப்பதாக கடவுள் வாக்களிக்கிறார். இதனால் உங்கள் ஆத்துமத்தை மட்டுமின்றி, இன்னும் ஏராளமான ஆத்துமங்களையும் நீங்கள் நித்திய அழிவினின்று மீட்டுக் கொள்வீர்கள். மாதா மிகுந்த மகிழ்ச்சியடை வார்கள். பரலோகத்தில் உங்கள் கைம்மாறு மிகுதியாகும்.
ஓ என் சேசுவே, எங்கள் பாவங்களை மன்னியும் நரக நெருப்பிலிருந்து எங்களைக் காப்பாற்றும். எல்லா ஆத்துமங்களையும், உமது இரக்கம் யாருக்கு அதிகம் தேவையோ அவர்களையும் மோட்சத்திற்குக் கூட்டிச் சேர்த்தருளும். ஆமென். (பாத்திமாவில் மாதா கற்றுத்தந்ததும், ஜெபமாலையில் நாம் சொல்லிவருவதுமான ஜெபம்)
பாவிகளுக்கு அடைக்கலமான மரியாயே வாழ்க!
✠ காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம் ✠ கத்தோலிக்கத்தின் பாரம்பரியம் காப்போம் ✠
- 🏠 முகப்பு பக்கம்
- திருப்பலி
- திவ்விய நற்கருணை
- பரிசுத்த வேதாகமங்கள்
- வேதாகமங்கள் அப்ளிகேஷன்
- தேவமாதா
- புத்தக அப்ளிகேஷன்
- YouTube
- கூகிள் பிளே ஸ்டோர்
- தேவமாதா சர்வதேச வானொலி
- வானொலி அப்ளிகேஷன்
- ஆலயம் அறிவோம்
- செபங்கள்
- தவக்காலம்
- புனிதர்கள்
- பாடல்கள்
- ஞானோபதேசம்
- Kilachery Parish
- இசைத்தட்டு
- English Books
- Disclaimer
- Contact Us
- Donation
மரியாயின் மாசற்ற இருதயம்: நரகத்திலிருந்து ஆத்துமங்களைக் காப்பாற்றும் இறுதி உபாயம்
Posted by
Christopher