தேவ ஆள் உலகில் வாழ்ந்தார் என்ற உண்மையை நீ ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது!

"அவர் தேவ ரூபமாயிருக்கையில்... தம்மைத் தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலாகி, மனுரூபமாகக் காணப்பட்டார்'' (பிலிப்.2:6). "அவரிடத்தில் தெய்வீகத்தன்மை முழுவதும் மெய்யாகவே குடிகொண்டிருக்கிறது'' (கொலோ.2:9). இவரே "நமது தேவனும் இரட்சகருமான சேசுக்கிறீஸ்து'' (2 இரா.1:1).


ஏன் தேவன் மனிதன் ஆனார்?

பாவத்திலிருந்து மனிதர்களை மீட்க எண்ணிய தெய்வீக இரக்கமானவர், பரிசுத்த தேவன், பரலோகப் பேரின்ப வாழ்வை பக்தர்களுக்குக் கொடுக்க விரும்பிய சர்வ வல்லபக் கடவுள், எது செய்தாலும் அரையும் குறையுமாய்ச் செய்பவர் அல்ல. கரை காணாத தேவ கருணையின் பெருங்கடலாகிய கர்த்தர் நம்மீது காட்டும் கருணைக்கும் அன்பிற்கும் கரையே இல்லை என்று காட்டவே தேவன் மனிதனானார்.

பாவம் கொடியது, அப்பாவத்தால் நீதியுள்ள தேவனுக்கு ஏற்படும் பங்கமும் கொடியது. அந்த தேவநீதியோ அளவற்றது. அளவற்ற நீதிக்கு ஏற்பட்ட பங்கம் எடுபட வேண்டுமென்றால், அதற்கு உரிய பரிகாரமும் அளவற்ற தாயிருக்க வேண்டும் அல்லவா? அத்தகைய பரிகாரத்தைச் செய்ய அற்ப மனிதனுக்கு வல்லமை இல்லையே! அதனால்தான் ஆதியற்றவரான பரம திரித்துவத்தின் இரண்டாம் ஆளாகிய சுதனாகிய சர்வேசுரன் இந்தப் பரிகாரத்தை ஏற்றுச் செய்ய முன்வந்தார். எனவேதான் தேவன் மனிதனானார். பரலோகப் பேரின்பம் என்றால் ஈன மனிதர்களாகிய நம் மனுUகம் தெய்வீகப் பேரின்பக் கடவுளின் தெய்வீகத்திலே அடங்கி ஒடுங்கி, நித்திய சமாதான நிலையை அடைவதுதான் அல்லவா? அதாவது ஒரு விதத்தில் மனுஷீகம் தெய்வீகத்தில் பங்கடைய வேண்டுமே. இந்தப் பங்குபெறும் உரிமையை மனிதர் களுக்குக் கொடுக்க விரும்பிய தெய்வீகம் நமது மனுUகத் தோடு கலந்துகொள்ள விரும்பியது. மனிதன் தானாக மேலேறி தெய்வீகத்தோடு சமாதானமடைய முடியாதவன் என்பதால், தேவனே கீழீறங்கி மனிதன் ஆனார்; மனுஷிகத்தை உயர்த்திப் புனிதப்படுத்தினார்; தெய்வீக வரப்பிரசாதத்தைப் பொழிந்தார்; தெய்வீகத்தில் பங்கடை யவும் செய்தார். ஆகையால்தான் தேவன் மனிதனானார்.

என் சகோதரனே, கேள். உன்னை அன்போடு தூக்கி யயடுத்து, அளவற்ற கருணை காட்டி, அற்புத தெய்வீக வரப்பிரசாதத்தைப் பொழிந்து, முடிவற்ற காலமும் நீ ஆனந்த நித்திய சமாதான நிலையை அடைய வேண்டும் என்று விரும்பி, அந்த விருப்பத்தை நிறைவேற்ற உன் ஆண்டவரும், தேவனுமானவர் உன்னைப் போன்ற ஒரு மனிதன் ஆனார் என்ற உண்மையை நீ அறிந்த பின்பு, உன் உள்ளம் மகிழாமல் இருக்கக் கூடுமா? நெஞ்சம் நெகிழாமல் இருக்கலாகுமா? இருதயம் பூரித்துத் துடிக்காமல் இருக்க இயலுமா? எங்கும் பரந்து விரிந்து நிறைந்த சர்வேசுரன் என்னைப் போன்ற ஏழை மனிதன் ஆனார் என்ற இந்த சததியம் எந்நாளும் என் மனதில் இரைந்து, சப்தித்து ஒலிப்பதாக.  ""''


சேசுநாதர் மனுமக்களின் ஆசிரியர்

நாவால் போதிப்பதை விடவும், நடத்தையால் போதிப் பதே மேலானது. உலகத்தை மீட்பதற்காக மனிதனாக அவதரித்த வரப்பிரசாத தேவன், முன்பு சாதனையாலும், பின்னர் போதனையாலும் நமக்குக் கற்பிக்கத் திருவுள மானார். ஆதலால் ஒழுக்க வழியில் உலகத்தார் நடந்து இரட்சிப்படைய வேண்டுமானால், இந்த உன்னத ஆசிரியர் நமக்குக் காட்டிச் சென்ற உத்தம மாதிரிகையைப் பின்பற்ற வேண்டும். ""நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக் கிறேன். என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள். என் வழியாக அல்லாது பிதாவிடம் எவனும் செல்வதில்லை'' (அரு.14:6) எனக் கூவி அழைப்பது இந்தப் பேராசிரியர் ஒருவரே. உலக சரித்திரத்திலேயே இவ்விதம் பேசியவர் வேறெவரும் இல்லை.

இத்தகைய நல்ல ஆசிரியரை நமக்குக் கொடுத்தவர், நன்மைக்கு ஊற்றாகிய, நசகல நன்மைச் சுரூபியான சர்வேசுரன். ""இவரே நமது நேச குமாரன். இவர் மீது நாம் பூரண பிரியமாயிருக்கிறோம். இவருக்குச் செவிசாயுங்கள்'' (மத்.15:5) என்று சர்வ வல்லபப் பிதா கட்டளையிடு கிறார். ""முந்நாட்களில் பற்பல சமயங்களில் பற்பல விதமாக நம்முடைய மூதாதையரோடு தீர்க்கதரிசிகளின் மூலமாகப் பேசிய சர்வேசுரன், கடைசியாய் இந்நாட்களில், தமது குமாரன் வழியாக நம்மோடு பேசியருளினார்'' (எபி.7:1) என்றும், ""நமது இரட்சகராகிய சர்வேசுரன் நமக்குப் போதிப்பதற்காகத் தோன்றியருளினார்'' (தீத்து. 2:12) என்றும் அப்போஸ்தலரான அர்ச். சின்னப்பர் கூறுகிறார்.

சேசுநாதருடைய இந்த ஆசிரியத் தொழிலைப் பற்றிப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இசையாஸ் என்னும் தீர்க்கதரிசி கூறியிருப்பதைக் கேளுங்கள். ""ஆண்டவ ருடைய இஸ்பிரீத்துவானவர் என்பேரில் அமர்ந்தார்; ஆதலால் அண்டவர் என்னைத் தம் பரிசுத்த ஸ்தலத்தால் அபிஷேகம் செய்தார்; சாந்தமும் தாழ்ச்சியும் உடையோருக் குப் போதிக்கவும், இருதயம் நொந்தவர்களைக் குணப் படுத்தவும், சிறைப்பட்டவர்களுக்குக் கிருபையையும், அடைபட்டாருக்கு மீட்பையும் பிரசித்தஞ் செய்யவும், ஆண்டவருடைய சமாதானத்தின் வருஷத்தையும், நமதாண்டவரின் பழிவாங்கும் நாளையும் வெளிப் படுத்தவும், அழுவார் எல்லோரையும் ஆறுதல்படுத்தவும்... அவர் என்னை அனுப்பினார்'' (இசை.61:1). இந்தத் தீர்க்க தரிசனத்தை சேசுக்கிறீஸ்துநாதரே ஒரு நாள் யூதர்களின் ஜெபக்கூடம் ஒன்றில் வாசித்தார். வாசித்த பின்பு, ""இன்று இந்த வேதவாக்கியம் உங்கள் காதுகளில் விழுந்து, நிறை வேறிற்று'' என்று முடிவுரை கூறினார்.


தேவ வார்த்தையானவர்

தேவ குமாரனாகிய சேசுநாதர் நமக்குச் சத்தியத்தை போதிப்பதற்காகவே மனுவுரு எடுத்தார். ""சத்தியத்திற்குச் சாட்சியங் கூறவே நான் பிறந்தேன். இதற்காகவே இவ்வுலகத்திற்கு வந்தேன்'' (அரு.18:37) என்று, தாம் அநியாயமாய் மரணத் தீர்வை அடையுமுன்பு அதிகாரியான பிலாத்துவின் முன்பாகக் கூறுகிறார். சத்தியத்திற்குச் சாட்சியம் சொல்ல வந்த இந்த சாந்தமுள்ள ஆண்டவர், சர்வேசுரனுடைய வார்த்தையானவர், ""ஆதியிலே வார்த்தை இருந்தார், அந்த வார்த்தை சர்வேசுரனிடத்தில் இருந்தார், அந்த வார்த்தை சர்வேசுரனாகவும் இருந்தார். (அதே) வார்த்தையானவர் மாம்சமாகி, இஷ்டப்பிரசாதமும் சத்தியமும் நிறைந்தவராய் நமக்குள்ளே வாசமாயிருந்தார். அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவின் ஏக சுதனுக்குரிய மகிமைக்கு நிகராய் இருந்தது'' (அரு.1:1-14) என்று திவ்ய சேசுவின் பிரிய அப்போஸ்தலராகிய அர்ச். அருளப்பர் கூறுகிறார்.