1. ஒவ்வொருவரின் வாழ்க்கை நிலையிலும் அந்த நிலைகளுக்கு ஏற்ற தேவையான வரங்களைக் கொடுப்போம்.
2. அவர்களுடைய குடும்பங்களில் சமாதானம் நிலவச் செய்வோம்.
3. அவர்களின் இன்னல்களில் இனிமையாக வந்து தேறுதலும் ஆறுதலும் அளிப்போம்.
4. அவர்களது வாழ்வில் மட்டுமல்ல, மரண வேளையிலும் அருகிலிருந்து உறுதுணையாக இருப்போம்.
5. மனிதர்கள் செய்யும் எல்லாக் கிரியைகளிலும் மிகுதியான வரங்களைப் பொழிவோம்.
6. ஆன்மீக வாழ்விலும் நற்கிரியைகளிலும் சோர்ந்து போனவர்களுக்கு மிகப் பெரும் வளர்ச்சியளிப்போம்.
7. பாவிகளுக்கு எமது இருதயம் கரையில்லா சாகரம் போன்ற கருணை வெள்ளம் பொழியும்.
8. எமது இருதய உருவத்தையோ படத்தையோ தங்கள் இல்லங்களில் நிறுவி வழிபடும் பக்தர்களுக்கு மிகப்பெரும் ஆசி அருள்வோம்.
9. நற்செயல்களில் நிலைத்திருப்பவர்கள் அவர்களின் நல்ல செயல்களின் உச்ச நிலையை அடைவார்கள்.
10. எம் இருதயப் பக்தியைப் பரப்பும் பக்தர்களின் பெயர்கள் எம் இருதயத்தில் என்றென்றும் அழியாது நிலையாக எழுதப்படும்.
11. கல்லான இருதயம் கொண்ட கொடிய பாவிகளையும் மனமாற்றும் தனி வரத்தை எமது குருக்களுக்குத் தருவோம்.
12. தொடர்ந்து ஒன்பது மாத தலை வெள்ளிக் கிழமைகளில் நற்கருணை அருந்துவோருக்குக் கடைசி மட்டும் விசுவாசத்திலும் தூய்மையிலும் நிலைத்திருக்கும் வரம் தருவோம். மேலும் அவர்கள் எமது புறக்கணிப்பிலோ, திருவருட்சாதன உதவியின்றியோ இறக்கமாட்டார்கள். இறுதி நேரத்தில் எம் திரு இருதயம் அவர்களுக்கு உறுதியான தஞ்சமாய் இருக்கும்.