1946 ம் ஆண்டு நவம்பர் 24 ந் தேதி முதல் 1947 ஆண்டு டிசம்பர் மாதம் 8ம் தேதி வரை இத்தாலிய நாட்டில் உள்ள " மோந்திகியாரி : என்ற சிறு பட்டணத்திலுள்ள ஆலயத்தில் அருள் சகோதரி பியெரினா என்பவருக்கு பரிசுத்த கன்னி தாய் 11 முறை காட்சி தந்தாள்.
தன்னை ரகசிய ரோஜா " என்று அழைக்க சொன்னார் . 1947 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8 ம் தேதி மதிய வேளையிலே விசேஷமான ஒரு காட்சியாக இருந்தது. அன்று இறுதியாக அருள் சகோதரி பியெரினா அவர்களுக்கு காட்சி தந்தார் .அந்த நேரத்தை தேவ கிருபையின் நேரமாகக் ஜெபிக்க கேட்டுக்கொண்டார்கள்.
அந்த நேரத்தில் ஒருவர் கடவுளின் சித்தத்திற்கு இணங்கி எதை கேட்டாலும் அது அவருக்குக் கொடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்கள். :
1 தேவக்கிருபையின் நேரம் தாயின் வேண்டுகோள்;
டிசம்பர் 8 ந் தேதி ஜென்ம்ப் பாவமில்லாமல் உற்பவித்த அன்னையின் பெருவிழா!
அன்று நண்பகல் 12 மணிக்கு தொடங்கி ஒரு மணி நேரம் வரை விசேஷ தேவக்கிருபையின் நேரம் ஆகும்.
2. இந்த தேவக் கிருபை நேரத்தில் ஒருவர் தன் இல்லத்திலோ, ஆலயத்திலோ, அலுவலகத்திலோ தங்கியிருந்து ஜெபிக்கலாம். அந்த நேரத்தில் எந்த ஒரு பராக்குகளுக்கு இடம் கொடுக்காமல் அதாவது உதாரணமாக தொலைப்பேசி அழைப்பு , கதவைத்தட்டி அழைத்தாலோ கேட்க கூடாது. முழுமையாக அந்த நேரத்தில் கடவுளோடு இணைந்து இருக்கவேண்டும்.