1. “ உங்களுக்கு எழுதுமாறு பாத்ரே பியோ என்னிடம் கேட்டுக்கொண்டார் “
1945- ஆம் ஆண்டு செப்டம்பர் 20 அன்று பாத்ரே பியோ ஐந்து காய வரம் பெற்ற ஆண்டு நிறைவுக்காக அவருக்கு ஒரு வாழ்த்துத் தந்தி அனுப்ப பியா காரெல்லா முடிவு செய்தாள்.. அந்தச் சமையத்தில் அவர் தூரின் நகரின் நாட்டுப்புறப் பகுதியில் இருந்தாள். அங்கே அருகில் அஞ்சல் நிலையம் எதுவுமில்லை. அப்போது திடீரென, ‘ தேவைப்படும் போது உங்கள் காவல்தூதரை என்னிடம் அனுப்புங்கள் “ என்று தந்தை பியோ சொல்லியிருந்தது நினைவுக்கு வந்தது. அவளும் அப்படியே செய்தாள். சில நாட்களுக்குப் பிறகு, அவளது தோழியான ரோஸினெல்லாவிடமிருந்து ஒரு கடிதம் வந்தது.. அதில் “ உனக்குக் கடிதம் எழுதி, நீ அவருக்கு அனுப்பிய வாழ்த்துக்கு நன்றி செலுத்தும்படி தந்தை பியோ என்னிடம் கேட்டுக்கொண்டார் “ என்று எழுதியிருந்தார்.
2. “ திவ்ய நற்கருணை கீழே விழாமல் காப்பாற்றிய உங்கள் காவல் தூதருக்கு நன்றி கூறுங்கள் “
கோவிலில் கூட்டம் மிக அதிகமாக இருந்தது. தந்தை அலெஸியோவும், மற்றொரு குருவும் திவ்ய நன்மை வழங்கிக் கொண்டிருந்தார்கள். தந்தை அலெஸியோவின் பாத்திரம் காலியாகிவிட, அவர் பீடத்திற்கு திரும்பிச் சென்று பாத்திரத்தை சுத்திகரித்துக் கொண்டிருந்தார். அவர் இந்தச் சடங்கை முடித்துவிட்டு வலப்பக்கம் திரும்பியபோது. ஒரு திவ்ய அப்பம் தம் அருகில் அந்தரத்தில் நின்றுகொண்டிருந்ததை அவர் கண்டார்! அந்த திவ்ய அப்பம் பாத்திரத்தை நோக்கி நகர்ந்து, தெளிவாகக் கேட்கக் கூடிய மெல்லிய சத்தத்தோடு பாத்திரத்தினுள் விழுந்தது.. தந்தை அலெஸியா அதிர்ந்து போனார்.
அந்த திவ்ய அப்பத்தை பிடித்துக் கொண்டிருந்த யாரையும் அவர் காண முடிய வில்லை. அன்று மாலையில் தனது அனுபவத்தை பாத்ரே பியோவிடம் கூறிய போது அவர், “ பையா, இனி அதிக கவனமாயிரும், வேகமாக திவ்ய நற்கருணை வழங்க வேண்டாம். அந்த திவ்ய அப்பம் தரையில் விழாமல் பிடித்துக் கொண்ட உம் காவல் தூதருக்கு நன்றி செலுத்தும்” என்றார்.
சிந்தனை : எத்தனையோ திவ்ய நற்கருணை புதுமைகள் நடந்திருந்தாலும் , நடந்து கொண்டிருந்தாலும்நம் பரிசுத்தரின் பரிசுத்தரை உரிய பக்தி வணக்கமில்லாமல் எப்படித்தான் அவரை கரங்களிலும் ( சிலர் இடது கரங்களிலும் ) பெற்றுக் கொள்ள மனம் வருகிறதோ தெரியவில்லை. வாங்கிய பின்பு உயிருள்ள கடவுளை உள்ளே வைத்துக் கொண்டு அவரை ஆராதிக்காமல், அவருக்கு நன்றி செலுத்தாமல் பராக்குகளுக்கு தங்கள் மனதை எப்படி கொடுக்க மனம் துணிகிறது..
திவ்ய நற்கருணை ஆண்டவரை... நம் சேசுவை.. பயபக்தியோடு அவருக்கு உரிய மரியாதை, வணக்கம் செலுத்தாமல் ஒரு சடங்காக...வழக்கமான... ஒரு நிகழ்வாக.. நம்மை நாம் தயாரிக்காமல் அவரை வாங்கினால் உட்கொண்டால் நீதியின் கடவுளை சந்திக்கும் போது ரொம்பவே கணக்கு கொடுக்க வேண்டும் என்பதை யாரும் மறந்து விடக் கூடாது...
" யாரெல்லாம் மனுமகனைக் குறித்து இடறல் படுகிறார்களோ அவர்களைக் குறித்து மனுமகனும் இடறல் படுவார் "
இது வேறு யாரும் சொல்லிய வார்த்தையல்ல.. வார்த்தையாயிருந்து மனு உருவெடுத்து நம்மை தீர்ப்பிட இருக்கும் நீதிபதி.. நம் சேசு சுவாமின் உயிருள்ள வார்த்தை இது...
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !