(வேத சாஸ்திரிகள் போதனைகளில் சில)
1. அர்ச். ராபர்ட் பெல்லார்மின் கர்தினால்: "ஒரு மனிதனை அவன் சரீரத்தில் ஒரு பாப்பானவர் தாக்குதல் செய்தால் அவரை , அவன் தாக்குவது சட்டப்படி எவ்வாறு சரியாகுமோ, அதுபோல் ஆன்மாவில் தாக்குதல் செய்து அல்லது சமூகத்தை தப்பறைகளால் தாக்குகிற அல்லது திருச்சபையை அழிக்கிற முயற்சியில் அவர் ஈடுபட்டால் அவரை எதிர்ப்பது சட்டப்படி சரியானதே.
மேலும் நான் கூறுகிறேன், அவரை எதிர்ப்பது, அப்படிப்பட்ட அவரது கட்டளையை செய்யாமல் இருப்பது, அவருடைய விருப்பம் நிறைவேற்றபடாதபடி தடுப்பது, இவையெல்லாம் சட்டப்படி செல்லுபடியாகும் சரியான செயல்கள் ஆகும். ஆனால் - அவரை தீர்ப்பிடுவது, தண்டிப்பது அல்லது பதவி நீக்கம் செய்வது ஆகிய செயல்கள் முறையற்ற செயல்கள் ஆகும். ஏனெனில் அவருக்கு மேல் அதிகாரம் பெற்றவர்களே அப்படிச் செய்ய முடியும்''.
2. பாப்பரசர் அர்ச். 3ம் பெலிக்ஸ்: “தப்பறையை எதிர்க்காதது அதனை ஏற்று ஆதரிப்பதாகும். வேத சத்தியத்தை பாதுகாக்காமல் இருப்பது அதனை ஒடுக்குவதாகும்”.
3. அர்ச்.தாமஸ் அக்வினாஸ் : "விசுவாசத்திற்கு ஆபத்து ஏற்படும் வேளையில் ஒருவன் திருச்சபையின் மேலதிகாரிகளை (குருவானவர், மேற்றிராணியார், கர்தினால், பாப்பானவர்) வெளிப்படையாக ; பொதுவிலும் கூட கண்டிக்கலாம்.
இதனாலேயே அர்ச். சின்னப்பர், அர்ச். இராயப்பருக்கு கீழ்ப்பட்டிருந்தாலும், (அர்ச். இராயப்பரை, முதல் பாப்பானவரை) வெளிப்படையாக பொதுவில் கண்டித்தார். ஏனெனில் துர்மாதிரிகையால் விசுவாசத்திற்கு ஆபத்து நிச்சயம் வருவதாய் இருந்தது".
4. அர்ச். அகுஸ்தீன் : ''அர்ச். இராயப்பர் திருச்சபை அதிகாரிகளுக்கு ஒரு முன் மாதிரிகை அளித்தார். அவர்கள் எப்போதாகிலும் நேர்பாதையை விட்டு விலக நேர்ந்தால் அவர்கள் தங்களுக்கு கீழ்ப்பட்டவர்களால் கண்டித்து திருத்தப்படுவதை தவறு என்று எண்ணக் கூடாது''.
5. அர்ச். யாகப்பர் : 'நீங்கள் காப்பாற்றப்படும்படியாக ஒருவர் மற்றவருக்காக வேண்டிக் கொள்ளுங்கள்''.
6. மிக வந். மார்செல் லெபெப்ர்: “பேயின் மிகப் பெரிய சாதனை கீழ்ப்படிதலின் பெயரால் கத். பாரம்பரியத்துக் கீழ்படியாமையை கொண்டு வந்ததே.!''6. மிக வந். மார்செல் லெபெப்ர்: “பேயின் மிகப் பெரிய சாதனை கீழ்ப்படிதலின் பெயரால் கத். பாரம்பரியத்துக் கீழ்படியாமையை கொண்டு வந்ததே.!''