ரோமன் கத்தோலிக்க திருச்சபையினால் 1182ல் Germany யில் உள்ள Augsburg நகரின் மத்தியில் 1182ல் கட்டப்பட்ட St. Peter am Perlach தேவாலயத்தில் தனிப்பட்ட மையச் சிறப்புத் தன்மையுடன் இவ்வன்னையின் படம் இருக்கிறது.
இதில் சித்தரிக்கப்படும் காட்சியானது:
நிலவு வளையத்தின் மேல் கன்னிமரியாள் நிற்பது போலவும், அவரது காலின் கீழ் பாம்பின் தலை மிதிக்கப்படுவதாகவும் அமைந்திருக்கின்றது.
பாம்பு வடிவில் இருக்கும் நெருக்கமான பல முடிச்சுக்களை உடைய கயிறு ஒன்றை அன்னைமரியாள் தனது கையில் வைத்திருக்கின்றார். வானதூதர் ஒருவர் சிக்கலான பல முடிச்சுக்களை உடைய கயிற்றை அன்னை மரியாளிடம் ஒப்படைக்க, அதை மரியாள் தனது பொறுமை, முழுமையான அர்ப்பணிப்பின் மூலம் அவிழ்த்து சிக்கல்கள் இல்லாத மென்மையான கயிறாக மற்றொரு வானதூதரிடம் கையளிக்கின்றார். முடிச்சுக்களின் மாதா அல்லது முடிச்சுக்களை அவிழ்ப்பவர் என்று ஓவியத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டார்.
இப்படம் 1700ல் உருவாக்கப்பட்டது. வசதி படைத்த பிரபுக்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர் ieronymus Ambrosius Langenmantel இன் வேண்டுகோளுக்கிணங்க, St. Peter am Perlach தேவாலயத்தில் ஸ்தாபகம் செய்யப்பட்டுள்ள அன்னை மரியாளின் படமானது Joh ann Georg Sch midtner என்னும் பெயருடைய ஓவியரால் வரையப்பட்டது. பிரபுக்கள் குடும்பத்தைச் சேர்ந்த Langznmantel இன் தம்பதிகளுக்கிடையேயான சொந்தக் குடும்பப் பிரச்சனைகளை, மரியன்னை தீர்த்து வைத்தார். இந்த நம்பிக்கையின் காரணமாக, மரியன்னையின் படத்தை வரைய இம்மனிதர் பண உதவியைச் செய்தார்.
படத்தின் கீழே ஒரு வானதூதர், மனிதன் ஒருவரை மரியாளிடம் அழைத்துச் செல்வதைக் காண்கின்றோம் . நமது வாழ்க்கையில் உள்ள குழப்பங்கள், சிக்கல்கள் அனைத்தையும் நீக்கவும், நாங்கள் இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வருவதற்கும், இறைவனிடம் பரிந்து பேசுவதற்கு அன்னை மரியாளின் உதவியை நாடும்படியும் அவ்வானதூதர் நம்மை அழைத்துச் செல்கின்றார்.
இப்படத்தில் ஒரு வலுவான ஈர்ப்பும், அருட்சியும் உள்ளது. இங்கு கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்களும், பிறமதத்தைச் சேர்ந்த அனைத்து வயதுப் பிரிவினரும், மற்றும் அனைத்து சமூக அமைப்பினரும் தினமும் வந்து தங்கள் கவலைகளை முறையிடுகிறார்கள். 1985 இல் இத்தேவாலயத்திற்கு திருத்தந்தை பிரான்சிஸ் வருகை தந்ததின் பின் இதன் பக்தி வழிபாடு, தென் அமெரிக்காவில் வெகுவேகமாகப் பரவி உள்ளது.
இத்தேவாலயத்திலுள்ள மக்களின் வேண்டுதல்களை பிராத்தனை செய்யும்படி, குறிப்பிடும் பிராத்தனைப் புத்தகத்தில் இருக்கும் குறிப்புகளின்படி, அனைத்துக் கண்டங்களிலிருந்தும், நாடுகளிலிருந்தும் பக்தர்கள், வழிபாட்டாளர்கள் துன்பக்கட்டுக்களை அவிழ்க்கும் அன்னை மரியாவை நோக்கி வருவதைக் காட்டுகின்றது. மீண்டும் மீண்டும் இவ்வன்னையின் வழிகாட்டுதலும், அவர் முன் பிராத்தனை செய்யும் ஆசையும் சமீபத்தில் ஏராளமாக வெளிப்பட்டுள்ளது.
ஆகவே இதை நிறைவேற்றும் விதமாக துன்பக்கட்டுகளை அவிழ்க்கும் அன்னையின் நவநாள் செபம், இதே தேவாலயத்தின் பொறுப்பாளர்களால் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து சமூகங்களும் இவ்வன்னையின் நவநாள் செபத்தை செபிப்பதன் மூலம், தங்கள் இறைநம்பிக்கையை அனைவரும் மேலும் வளர்த்துக் கொள்ள முடியும். அத்துடன் அன்னைமரியாளின் பரிந்துரையையும் நிறைவாகப் பெறமுடியும்.