துக்க தேவ இரகசியத் தியான செபமாலை.

1-ம் துக்க தேவ இரகசியம்: யேசு பூங்காவனத்தில் இரத்த வியர்வை சிந்தியதைத் தியானிப்போமாக.
பரலோக மந்திரம்

பின்னர், இயேசு அவர்களுடன் ஜெத்சேமணி தோட்டத்திற்கு வந்து, சீடர்களிடம் ''நான் அங்கே செபிக்கும் அளவும் இங்கே இருங்கள் என்றார். அப்போது வருத்தமும் மனக்கலக்கமும் அவரை ஆட்கொண்டன (லூக். 26:36, 37)
அருள் நிறை மந்திரம்

அவர் அவர்களை நோக்கி, "என் ஆன்மா சாவுக்கு ஏதுவான வருத்தமுற்றிருக்கிறது. (லூக். 26:33)
அருள் நிறை மந்திரம் 

சற்று அப்பால் போய்த் தரையில் குப்புற விழுந்து, கூடுமானால் அந்நேரம் தம்மை விட்டு நீங்கும்படி செபித்தார். (மாற்கு 14:35)
அருள் நிறை மந்திரம்

தந்தையே, உமக்கு விருப்பமானால், இத்துன்பக்கலத்தை என்னிடமிருந்து அகற்றியருளும்; எனினும் என் விருப்பமன்று உம் விருப்பமே நிறைவேறட்டும். (லூக். 22:42)
அருள் நிறை மந்திரம்

அப்போது வானதூதர் ஒருவர் அவருக்குத் தோன்றி, அவரை திடப்படுத்தினார்.
அருள் நிறை மந்திரம்

கொடிய வேதனைக்குள்ளாகவே, மேலும் உருக்கமாகச் செபித்தார். (லூக். 22:44)
அருள் நிறை மந்திரம்

அவருடைய வியர்வை பெரும் இரத்தத் துளிகளாக நிலத்தில் விழுந்தது. (லூக். 22:44)
அருள் நிறை மந்திரம்

தம் சீடரிடம் வந்து அவர்கள் தூங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு இராயப்பரை நோக்கி, "என்ன, ஒரு மணி நேரம் என்னுடன் - விழித்திருக்க உங்களால் முடிய வில்லையா? (மத்.26:40)
அருள் நிறை மந்திரம்

ஆவி சோதனைக்கு உட்படாதபடி விழித்திருந்து செபியுங்கள் (மத் 26:41)
அருள் நிறை மந்திரம்

ஆவி ஊக்கமுள்ளது தான். ஊன் உடலோ வலுவற்றது. (மத்.26:41)
அருள் நிறை மந்திரம்

திரித்துவ ஜெபம்
ஓ என் நேச யேசுவே
ஆமென்.

2-ம் துக்க தேவ இரகசியம்: கர்த்தர் கற்றூணில் கட்டுண்டு அடிபட்டதைத் தியானிப்போமாக.
பரலோக மந்திரம்.

இயேசுவைக் கட்டி நடத்திச் சென்று பிலாத்திடம் கையளித்தனர். பிலாத்து, 'நீ யூதரின் அரசனோ? என்று அவரை வினவினார். (மாற்கு 15:1)
அருள் நிறை மந்திரம்

இயேசுவோ, "என் அரசு இவ்வுலகைச் சார்ந்ததன்று; என் அரசு இவ்வுலகைச் சார்ந்ததாயிருந்தால், நான் யூதரிடம் கையளிக்கப்படாதபடி என் காவலர்கள் போராடியிருப்பார்கள். ஆனால் என் அரசு இவ்வுலகைச் சார்ந்ததன்று.'' (ஜான் 18: 36-37)
அருள் நிறை மந்திரம்

உண்மைக்குச் சாட்சியம் கூறுவதே எனது பணி; இதற்காகவே பிறந்தேன். இதற்காகவே உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவன் எவனும் என் குரலுக்கு செவிமடுக்கிறான். (அருள். 18:37)
அருள் நிறை மந்திரம்

பிலாத்து தலைமைக் குருக்களையும் மக்களையும் பார்த்து 'இவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன், சாவுக்குரியது ஒன்றும் இவன் செய்யவில்லை (லூக். 23:16)
அருள் நிறை மந்திரம்

பின்பு பிலாத்து இயேசுவைக் கொண்டு போய், சாட்டையால் அவரை அடிக்கச் செய்தான்.
அருள் நிறை மந்திரம்

இகழப்பட்டவர், மனிதரால் புறக்கணிக்கப்பட்டவர். கொடிய தீர்ப்புக்குப்பின் அவர் கொண்டு செல்லப்பட்டார். அவர் வாழ்வோர் உலகினின்று எடுக்கப்பட்டார். தம் இனத்தாரின் அக்கிரமங்களுக்காகவே அவர் வதைக்கப்பட்டார். (இசை. 533,8)
அருள் நிறை மந்திரம்

அவர் கொடுமையாய் நடத்தப்பட்டார்; தாழ்மையாய் அதைத் தாங்கிக் கொண்டார்; கொல்வதற்காக இழுத்துச் செல்லப்படும் ஆட்டுக்குட்டி போலும், மயிர் கத்திரிப் போன் முன்னிலையில் கத்தாத செம்மறியாடு போலும் அவர் வாய் திறக்கவில்லை (இசை . 53:7)
அருள் நிறை மந்திரம்

ஆனால் நம் பாவங்களுக்காகவே அவர் காயப்பட்டார். நம் அக்கிரமங்களுக்காகவே நொறுக்கப்பட்டார். (இசை. 535)
அருள் நிறை மந்திரம்

மெய்யாகவே அவர் நம் பணிகளை ஏற்றுக் கொண்டார். நம்முடைய நோய்களை சுமந்து கொண்டார். ஆனால் அவர் தண்டனைக்குள்ளானவர் எனவும், கடவுளால் ஒதுக்கப்பட்டவர் எனவும், வாதிக்கப்பட்டவர் எனவும் நாம் எண்ணினோம். (இசை . 53:4)
அருள் நிறை மந்திரம்

நம்மை நலமாக்கும் தண்டணை அவர் மேல் விழுந்தது. அவருடைய காயங்களால் நாம் குணமடைந்தோம். (இசை . 53:5)
அருள் நிறை மந்திரம்

திரித்துவ ஜெபம்
ஓ என் நேச யேசுவே
ஆமென்.

3-ம் துக்க தேவ இரகசியம் :யேசுவுக்கு முள்முடி சூடியதை தியானிப்போமாக.
பரலோக மந்திரம்

படைவீரர் அவரை அரண்மனைக்குள், அதாவது ஆளுநனின் மனைக்குள் நடத்திச் சென்று அங்கேயிருந்த பட்டாளத்தினரை எல்லாம் கூட்டினர். அவருடைய ஆடைகளைக் களைந்து செந்நிறப் போர்வையை அவருக்குப் போர்த்தினர். (மாற். 15 16 மத் 27:28)
அருள் நிறை மந்திரம்

முள்ளால் ஒரு முடியைப் பின்னி அவர் தலையில் வைத்தனர். வலக்கையில் ஒரு பிரம்பைக் கொடுத்தனர். (மத்.27:28)
அருள் நிறை மந்திரம்

அவர் மேல் துப்பிப் பிரம்பை எடுத்து அவரைத் தலையில் அடித்தனர்.
அருள் நிறை மந்திரம்

பிலாத்து மீண்டும் வெளியே வந்து மக்களைப் பார்த்து, இதோ நான் அவனை உங்கள் முன் வெளியே கொண்டு வருகிறேன். அவனிடம் ஒரு குற்றமும் நான் காணவில்லையென அறிந்து கொள்ளுங்கள் என்றான் (அரு. 19:4)
அருள் நிறை மந்திரம்

யேசு முள்முடி தாங்கி, சிவப்புப் போர்வை அணிந்தவராய் வெளியே வந்தார். (அரு. 19:5)
அருள் நிறை மந்திரம்

பிலாத்து அவர்களைப் பார்த்து, பாருங்கள் இதோ மனிதன் என்றான். அவர்களோ ஒழிக, ஒழிக அவனைச் சிலுவையில் அறையும் என்று கத்தினார்கள். (அரு. 19:5, 15)
அருள் நிறை மந்திரம்

அதற்குப் பிலாத்து "இவன் செய்த தீங்கு என்ன? என்று கேட்டான். அவர்கள், அவனைச் சிலுவையில் அறையும் என்று கத்தினார்கள். (அரு. 19:14)
அருள் நிறை மந்திரம்

அதற்கு பிலாத்து, உங்கள் அரசனை நான் சிலுவையில் அறைவதா? என்று கேட்க, தலைமைக் குருக்கள் செசாரைத் தவிர வேறு அரசர் எங்களுக்கில்லை என்று சொன்னார்கள். (அரு. 19:15)
அருள் நிறை மந்திரம்

அப்போது பிலாத்து அவரைச் சிலுவையில் அறையும்படி அவர்களிடம் கையளித்தான். ஆகவே அவரைக் கூட்டிக் கொண்டு போனார்கள்.
அருள் நிறை மந்திரம்

திரித்துவ ஜெபம்
ஓ என் நேச யேசுவே
ஆமென்.

4-ம் துக்க தேவ இரகசியம்: யேசு சிலுவை சுமந்து கொண்டு கல்வாரி சென்றதைத் தியானிப்போமாக.
பரலோக மந்திரம்

என்னைப்பின் செல்ல விரும்புகிறவன்: தன்னையே மறுக்க வேண்டும் (லூக். 9:23)
அருள் நிறை மந்திரம்

தன்சிலுவையை நாள் தோறும் சுமந்து கொண்டு என்னை பின் தொடரட்டும். (லூக். 9:23)
அருள் நிறை மந்திரம்

யேசு சிலுவையைத் தாமே சுமந்து கொண்டு, எபிரேய மொழியிலே கொல்கொத்தா எனப்படும் இடத்திற்குச் செல்கிறார். (அருள். 19:17)
அருள் நிறை மந்திரம்

சீரோனே ஊரானாகிய சீமோன் என்பவனைப்பிடித்து அவன் மேல் யேசுவின் சிலுவையை வைத்து, அவருக்குப் பின்னாக அதைச் சுமந்து போகச் செய்தனர். (லூக். 23:26)
அருள் நிறை மந்திரம்

உங்கள் மேல் என் நுகத்தை ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக் கொள்ளுங்கள். (மத். 11:29)
அருள் நிறை மந்திரம்

ஏனெனில், நான் சாந்தமும் மனத்தாழ்ச்சியும் உள்ளவன். (மத். 11:29)
அருள் நிறை மந்திரம்

உங்கள் ஆன்மாவிற்கு இளைப்பாற்றி கிடைக்கும். ஆம், என் நுகம் இனிது. என் சுமை எளிது. (மத். 11:29-30)
அருள் நிறை மந்திரம்

திரளான மக்களும், அவருக்காக மாரடித்துக் கொண்டு புலம்பும் பெண்களும் கூட்டமாக அவரைப் பின் தொடர்ந்தனர். (லூக். 23:27)
அருள் நிறை மந்திரம்

யேசு அப்பெண்கள் பக்கம் திரும்பி, எனக்காக அழாதீர்கள். உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள் என்றார். (லூக். 23:28)
அருள் நிறை மந்திரம்

பச்சை மரத்திற்கு இப்படி செய்கிறார்கள் என்றால், பட்டமரத்திற்கு என்ன நேருமோ என்றார். (லூக். 23:31)
அருள் நிறை மந்திரம்

திரித்துவ ஜெபம்
ஓ என் நேச யேசுவே
ஆமென்.

5-ம் துக்க தேவ இரகசியம். யேசு சிலுவையில் அறையுண்டு மரித்ததை தியானிப்போமாக.
பரலோக மந்திரம்

மண்டை ஓடு எனப்படும் இடத்திற்கு வந்தபின் அவரை சிலுவையில் அறைந்தனர். (லூக். 23:33)
அருள் நிறை மந்திரம்

தந்தையே! அவர்களை மன்னியும், ஏனெனில் தாங்கள் செய்கிறது இன்னதென்று அவர்களுக்கு தெரியவில்லை என்று யேசு சொன்னார். (லூக். 23:34)
அருள் நிறை மந்திரம்

அவருடன் சிலுவையில் அறையுண்ட கள்வர்களில் ஒருவன், யேசுவே! நீர் அரசுரிமையோடு வரும்போது என்னை நினைவு கூறும் என்றான். (லூக். 23:42)
அருள் நிறை மந்திரம்

அவனுக்கு யேசு, இன்றே நீ என்னோடு வான் வீட்டில் இருப்பாய் என்று நான் உறுதியாக உனக்குச் சொல்லுகிறேன் என்றார். (லூக். 19:26)
அருள் நிறை மந்திரம்

யேசு தம் தாயையும், அருகில் நின்ற தம் அன்புச்சீடரையும் கண்டார். (அரு. 1926)
அருள் நிறை மந்திரம்

தம் தாயை நோக்கி, 'அம்மா இதோ உம் மகன்'' என்றார். பின்பு சீடரை நோக்கி, ''இதோ! உன் தாய் என்றார். (அரு. 19:26-27)
அருள் நிறை மந்திரம்

அந்நேர முதல் அந்தச் சீடர் அவளைத் தம் வீட்டில் ஏற்றுக் கொண்டார். (லூக். 19:27)
அருள் நிறை மந்திரம்

மூன்று மணி வரை கதிரோன் மறைந்திருக்க, நாடெங்கும் இருள் உண்டாயிற்று. ஆலயத்தின் திரை நடுவில் கிழிந்தது. (லூக். 44-45)
அருள் நிறை மந்திரம்

தந்தையே! உமது கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன் என்று யேசு உரக்கக் கூவினார். (லூக். 23:46)
அருள் நிறை மந்திரம்

பின் யேசு எல்லாம் நிறைவேறிற்று என்று கூறி, தலை சாய்த்து ஆவியைக் கையளித்தார். (அரு. 19:30)
அருள் நிறை மந்திரம்

திரித்துவ ஜெபம்
ஓ என் நேச யேசுவே
ஆமென்.