புனித டோமினிக் பிரான்சில் உள்ள கார்க்கஸோன் நகரில் போதித்துக் கொண்டு இருக்கும்போது, செபமாலை பக்தியை பகிரங்கமாக எள்ளி நகையாடிய, பிசாசுகளின் பிடியில் சிக்கிய ஒரு ஆல்பிஜென்ஸிய பதிதனை கூட்டி வந்தார்கள்.
புனிதர் கெட்ட ஆவிகளிடம் அவன் அதிமிக பரிசுத்த செபமாலையை இவ்வாறு எள்ளி நகையாடியது சரியா? என்று அறிவிக்கும் படி ஆணையிட்டார்.
பிசாசுகள் ஊளையிட்டுக்கொண்டே கூறியதாவது, " கிறிஸ்தவர்களே கேளுங்கள்: எங்களுடைய இந்த எதிரி(புனித டோமினிக்)அன்னை மரியாளையும், அவரது பரிசுத்த செபமாலையும் குறித்து கூறிய அனைத்தும் உண்மையே!!!!!''
மேலும் கூறியதாவது,"எங்களுக்கு அன்னை மரியாளின் ஊழியர்கள் மேல் எந்த வித அதிகாரமும் கிடையாது. இறப்பின் வேளையில் அன்னை மரியாளை தொழுது கொண்டே மரித்த அநேக பேர், அவர்கள் செய்த பாவங்களுக்காக தண்டிக்கப் படாமல் காப்பாற்றப் பட்டர்கள்".
முடிவாக கூறியதாவது, "விடாமுயற்சியுடன் அன்னை மரியாளின் மீதும், அவரது பரிசுத்த செபமாலை மீதும் பக்தியுடன் இருந்த எவரும் நரகத் தீர்ப்புக்கு உள்ளாக்கப்படவில்லை. மேலும் மரிக்கும் முன்னர் தங்களது பாவங்களுக்காக உண்மையாக மனம்வருந்திய பாவிகளுக்கு அன்னை மரியாள் விண்ணக வாழ்வை பெற்று தந்துள்ளார் என்ற உண்மையை உங்களுக்கு எடுத்துரைக்க நாங்கள் நிர்பந்திக்கப்பட்டுளோம்".
இதன் பின்னர் புனித டோமினிக் கூடியிருந்த மக்களை செபமாலை செபிக்க வைத்தார். என்னே அதிசயம்!!!!, ஒவ்வொரு அருள் நிறை மந்திரத்துக்கும் கெட்ட ஆவிகள் செக்கச் சிவந்த நிலக்கரி உருவில் அவனை விட்டு வெளியேறின. செபமாலை முடியும்போது அவன் முழுவதும் பிசாசின் பிடியில் இருந்து விடுதலையானான். இச்சமயத்தில் அநேக பதிதர்கள் மனம் மாறினார்கள்.
ஓ மாமரித்தாயே ! நானும் உன் மீதும், உனது பரிசுத்த செபமாலையின் மீதும் பக்தியுடன் இருந்து உனக்காகவே வாழும் வரத்தை எனக்கு அருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறேன்.