சிறு வயது முதலே நாம் சேசுவின் திரு நாமத்தை பல தடவை உச்சரித்துள்ளோம்.அந்தோ ! மிகவும் சொற்ப பேர்கள் கூட சேசுவின் திரு நாமத்தின் அதியங்களை பற்றிய போதுமான அளவு அறிவைக் கூடப் பெறவில்லை. சேசுவின் திரு நாமத்தை பற்றி நாம் என்ன அறிந்திருக்கிறோம் ? சேசுவின் திரு நாமத்தை உச்சரிக்கும் போது, மரியாதையுடன் நம் தலையை வணங்க வேண்டும் என்பது தெறியும்.
அதைத் தவிர.இது மூடியிருக்கும் ஒரு புத்தகத்தை மேலோட்டமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, அதன் மீதுள்ள தலைப்பை வாசிப்பது போன்றதுதான் அது. அந்த புத்தகத்தில் உள்ள அழகிய, அற்புத விசயங்களை தெறிந்து கொள்ள வேண்டுமென்றால் அந்த புத்தகத்தை படிக்க வேண்டும்.
இந்த திவ்ய நாமமானது சத்தியமாக பொக்கிசங்ளின் சுரங்கமாகும். எந்த ஒரு மனிதனும் இவ்வுலகில் அனுபவித்து மகிழ முடியும் என்று நம்பக்கூடிய மிகவும் உயர்ந்த அர்ச்சிஷ்ட்ட தனமாகவும், மிகவும் உன்னதமான சந்தோசத்தினுடைய இரகசியமாகும் அந்த நாமம் உள்ளது.
இந்த நாமம் எவ்வளவு வல்லமையும் உறுதியுமானது வாய்ந்தது என்றால், அது மிகவும் உன்னதமான அற்புத விளைவுகளை நமது ஆத்துமங்களில் ஏற்படுத்த தவறுவதில்லை. இ ந்த நாமம் மிகவும் கவலை தோய்ந்த இருதயத்தை ஆறுதலால் நிரப்புகிறது. மேலும் மிகவும் பலவீனமான பாவிகளை வலிமையுள்ளவர்களாக மாற்றுகிறது. இந்த நாமம் நம் எல்லோருக்கும் லவுகீகமானதும், ஞானரீதியானதுமாகிய அனைத்துவிதமான கொடைகளையும், வரப்பிரசாதங்களையும் பெற்றுத்தருகிறது.
இரண்டு காரியங்களை மட்டும் நாம் செய்ய வேண்டும். முதலில் நாம் சரியாக சேசுவின் நாமத்தினுடைய அர்த்தத்தையும் அதனுடைய மதிப்பையும் புரிதல் அவசியம்.
இரண்டாவதாக, இந்த நாமத்தை பக்தியாக அடிக்கடி உச்சரிக்கும் பழக்கத்தை, ஏன் பல நூறு தடவை கூட தினமும் உச்சரிக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும். இது ஒரு சுமையாக இருப்பதற்குப் பதிலாக, நமக்கு மிகவும் ஆழமான சந்தோசமாகவும், ஆறுதலாகவும் இருக்கும்.
எல்லாவற்றிற்கும் மேலாக சேசுவின் திருநாமம் ஒரு எல்லாம் வல்ல ஜெபமாக உள்ளது. நமது ஆண்டவரே நமக்கு இவ்வாறு அதிகார பூர்வமான வாக்குறுதி கொடுத்துள்ளார். அவரது நாமத்தில் பிதாவை எதுவெல்லாம் நாம் கேட்கிறோமோ, அதை நாம் பெறுவோம் என்று. தமது வார்த்தையை நிறைவேற்றுவதில் சர்வேசுவரன் ஒரு போதும் தவறுவதில்லை.
ஆகவே, நாம் “ சேசு “ என்று சொல்லும்போது, நம் ஜெபம் கேட்கப்படும் என்ற முழுமையான நம்பிக்கையோடு நமக்கு தேவையான எல்லாவற்றையும் சர்வேசுரனிடம் கேட்போமாக.
குறிப்பு : இயேசு என்றும் சொல்லலாம். சேசு என்றும் சொல்லலாம்.