சாத்தானின் பகைமை… மாதாவின் தோழமை… தொடர்ச்சி.. ( மாதாவின் முக்காடு)
சோதனைகளைக் கட்டுப்படுத்த முடியாதபோது, மடத்துத் தாயாரிடம் புனிதை செல்வாள். சிலவேளைகளில் தாயார் ஆறுதலான வார்த்தைகளைக் கூறுவார். ஆனால் பல வேளைகளில் ஏதேனும் வழிகளில் அவளைச் சிறுமைப்படுத்தி அனுப்புவார். மடத்தில் மிகவும் தாழ்ந்த பணிகளை அவளுக்குக் கொடுப்பார். துணி துவைத்தல், பெருக்குதல், மடத்தைச் சுத்தம் செய்தல், துணைச் சகோதரிகளுக்கு சமையல் அறையில் உதவி செய்தல் போன்ற பணிகளை அவளுக்குக் கொடுப்பாள்.
இவற்றைப்பற்றி சகோ. மரிய பசிபிக்கா,
“ ஓர் இளம் வயது சகோதரி ரொட்டியும், தண்ணீரும் மட்டுமே உண்பதும், மடத்துப்பணிகளில் தொடர்ந்து ஈடுபடுவதும், மடத்து அலுவல்களில் முதல் ஆளாக வந்து நிற்பதும், ஒரு துணைச் சகோதரிக்கு இணையாகப் பணியாற்றுவதும், ரொட்டி தயாரிப்பது, அழுக்கு துணிகளைத் துவைப்பது, பலர் சேர்ந்து செய்யும் பணிகளை தனியொருத்தியாக செய்வது போன்றவை உண்மையில் ஆச்சரியமே “ என்று கூறுகிறார்.
வெண் முக்காடு :
பரிசுத்தனதனத்திற்கு எதிராக எந்தவொரு சிறு நினைவும் நம் புனிதையிடம் இல்லை. ஆகவே, அது பற்றிய ஒரு சிறு அறிகுறி தெறிந்தாலும், தனது ஜெபத்தை, பரித்தியாகத்தை, சிறுமைப் படுத்துதலை, அவள் இருமடங்காக்கிவிடுவாள். ஒரு நாள் இந்தப்போராட்டத்தால் பயந்து போன புனிதை மடத்தின் ஒரு மூலைக்குச் சென்றாள். அங்கு இருந்த முள் விறகுகள், சுள்ளிகளை ஒன்றாகக் கட்டி, அதன் மீது உருண்டு புரண்டாள். இதனால் தனது சரீரத்தில் எந்த இச்சையும் எழ வாய்ப்பிள்ளை என்று நினைத்தாள்.
ஒரு நவ கன்னிகை இவள் மடத்தின் மூலைக்குச் செல்வதை மடத்துத் தாயாருக்குத் தெறிவித்தாள். தாயாரும் உடனடியாக அவ்வறைக்குச் சென்று பார்த்தார்கள். உடலெல்லாம் இரத்தக் கீறல்களுடன் இருந்த புனிதை தாயார் முன் முழந்தாழ்படியிட்டு தான் செய்த செயல்களையும், அதற்கான காரணத்தையும் தெறிவித்தாள்.
இரு வருடங்களாக இந்தச் சோதனையில் வருந்திய புனிதையின் மீது இரக்கம்கொண்ட நம் ஆண்டவர் மிக அரிதான ஒரு வரம் ஒன்றை அவளுக்கு அளிக்க திருவுளமானார்.
1587-ம் ஆண்டு செப்டம்பர் மாதாம் 17-ம் தேதி, புனிதை தேவதாயிடம் உருக்கமாக மன்றாடி, தனக்கு அவர்கள் உதவ வேண்டுமெனக் கேட்டுக்கொண்டாள். தேவதாயும் அவளுக்குக் காட்சியளித்து, சாத்தானின் தந்திர சோதனை இருந்த போதிலும் ஒரு நாளும் பரிசுத்ததனத்திற்கு எதிரான பாவங்களை அவள் கட்டிக்கொள்ளவில்லை என்று கூறினார்கள். இனி எந்த நாளும் இந்தத் தாக்குதல் வராது என்று உறுதியளித்த தேவதாய் ஒரு வெண் ஆடையால் அவளைப் போர்த்தினார்கள். இதனால் புனிதையின் உள்ளத்தில் ஓர் உறுதிப்பாடு தோன்றியது. அதன்பின் அவளுக்கு எந்நாளும் இச்சோதனை வந்ததில்லை.
நன்றி : மாதா அப்போஸ்தலர்கள் சபை, தூத்துக்குடி
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !