மாதாவின் வணக்கமாத சிந்தனைகள் -2 : மாதாவின் வணக்கமாதத்தில் திவ்ய நற்கருணை நாதரை அதிகமாக் நேசிப்போம்….
5-வது வயதில் தனியாகக் கோவிலுக்குச் சென்று மாதாவையும் அவர் மடியிலுள்ள குழந்தை இயேசுவையும் கண்டார். இயேசு கீழே இறங்கி மஜெல்லாவிடம் உறையாடிவிட்டு சுத்தமான ஒரு வெள்ளை நிற ரொட்டியை வழங்கினார். ஒவ்வொரு நாளும் இந்நிகழ்ச்சி நடந்தது. விவரம் அறிந்த பெற்றோர் ஆலயம் வந்தனர். இப்புதுமையைக் கண்ணாரக் கண்டனர்.
7-வயது நடக்கும்போது தாயுடன் கிராதிக்குச் செல்ல நற்கருணை வழங்கிக்கொண்டிருந்த குரு இவருக்கு நற்கருணை வழங்கவில்லை. ஏமாற்றம் அடைந்தார். நற்கருணை மேல் அவருக்கிருந்த ஏக்கம் அன்றிரவு அவருக்கு காட்சியில் தோன்றிய புனித மிக்கேல் அதிதூதரால் வழங்கப்பட்ட புது நன்மையால் தனிந்தது. பின்பு தூத ஆவியால் ஏவப்பட்ட பங்குகுரு இவர் வாரத்திற்கு 3 தடவை நன்மை பெறும்படி ஏற்பாடு செய்தார்.
நற்கருணை பக்தியுடன் மாதா பக்தியும் சிறுவனிடம் மிகுந்திருந்தது. காலையும், மாலையும் மரியன்னையின் புனிதத்தன்மை குறித்து 3 அருள் நிறை மந்திரம் சொல்வார். சிறு வயதிலிருந்தே தினமும் ஜெபமாலை சொல்வார். சனிக்கிழமைகளிலும், அன்னையின் திருநாட்களுக்கு முந்தைய இரவிலும் உபவாசம் இருப்பார். 12 வயதில் தனது கன்னிமையை அன்னைக்கு அர்ப்பணித்தார்.
உணவுக்கு முன்னும், பின்னும் 3 அருள் நிறை ஜெபம் சொல்வதையும், நீர் அருந்தும் போதும், ஒவ்வொரு மணி நேரம் முடியும்போதும் ஓர் அருள்நிறை ஜெபம் சொல்வதையும் பழக்கமாக்கி உத்தம தனத்தில் வாழ்ந்து பிறருக்கு முன் மாதிரியானார்.
ஏழைகளை நேசித்து அவர்களுக்கு வாரி வழங்கிய புனிதர், உத்தரிக்கும் ஆன்மாக்களுக்காக திருப்பலிகள் நிறைய ஒப்புக்கொடுத்த புனிதர், ‘குருமடத்தில் சேர்க்கவில்லையென்றால் பிச்சைக்காரனாக வந்து மடத்து வாசலில் நிற்பேன்’ என்று மிரட்டிய புனிதர்… நற்கருணை நாதரை நேசித்த புனிதர் ஜெரால்டு மஜெல்லா அன்னையின் புனிதர் என்று மக்களால் அழைக்கப்பட்டார். வாழும்போதே நிறைய புதுமைகள் செய்தார்..
நன்றி : நூல் - தேவனின் திருச்சபை மலர்கள், எழுதியவர்கள் அருட்தந்தை பால் பீட்டர், அருட்தந்தை M. டொமினிக்.
அன்னையை நேசிப்பவர்கள் கண்டிப்பாக நற்கருணை நாதரை நேசித்தே ஆக வேண்டும்… இந்த மாதாவின் வணக்கமாதத்தில் ஒவ்வொரு குடும்பமும் திவ்ய நற்கருணை ஆசீர்வாதம் ஒப்புக்கொடுப்பார்கள். நம் குடும்பம் நற்கருணை ஆசீர் ஒப்புக்கொடுத்துவிட்டதா???
ஜெபமாலை இராக்கினியாய் வந்து ஜெயம் தரும் மாமரி வாழியவே…… ஜெபிப்போம்… ஜெபிப்போம்… ஜெபமாலை….
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !