ஒரு முறை வாடிகனில் பேயோட்டும் சடங்கு நடை பெற்றுக்கொண்டிருந்தது.. ஒருவனுக்கு நரகத்தில் இரண்டாவது பெரிய பேயான பெயல்செபூல் என்னும் பேய் பிடித்திருந்தது.. அந்த பேயை ஓட்டும் சடங்கின் போது அந்த சடங்கை செய்யும் பெரிய குருவானவர் அதன் வாயிலிருந்து ஒரு சில உண்மைகளை வரவழைக்க ஆசைப்பட்டார்..
அவர் நன்றாக ஜெபித்து அந்த பேயிடம் இருந்து அவைகள் மிகுதியாக பயப்படும் விஷயங்கள் என்ன என்று கேட்டார்.
அதற்கு அது சொன்னது..
“ நாங்கள் மூன்று விஷயத்திற்கு ரொம்பவே பயப்படுவோம்.. “
ஒன்று ஆண்டவராகிய “ இயேசுவின் பெயர் “
இரண்டு “ மரியாயின் பெயர் “
மூன்று… சொல்ல மாட்டேன்… என்று சொல்லிவிட்டது..
மீண்டும் ஒரு மணி நேரம் ஜெபம் செய்யப்பட்டது.. அப்போதும் அது முதல் இரண்டு விஷயங்களை சொல்லியதே தவிர மூன்றாவது விசயத்தை சொல்லாமல்..
“ சொல்ல மாட்டேன் “ என்று சொல்லிவிட்டது.
மீண்டும் ஒரு மணி நேர உருக்கமான ஜெபம் செய்து விட்டு மீண்டும் பேயோட்டும் சடங்களை ஆரம்பித்தார்..
அந்த மூன்றாவது விசயம் என்ன ? என்று கேட்டார்.. கடைசியாக வேறு வழியில்லாமல் சொன்னது,
மூன்றாவது “ உத்தரியம் “ என்று..
ஆச்சரியமாக இருக்கிறதல்லவா..
அதற்கு அது சொன்ன காரணம்..
“உத்தரியம் அணிந்திருப்பவர்களை இந்த மரியாள் எப்படியாவது நரகத்தில் இருந்து காப்பாற்றிவிடுகிறாள் “ என்பதுதான்..
“இவன்.. இவள் கண்டிப்பாக நரகத்திற்குத்தான் வருவான்/ள் என்று நாங்கள் உறுதியாக நம்பியிருப்பவர்களைக் கூட உத்தரியத்தை அவர்கள் அணிந்து விட்டால் மரியாள் எப்படியாவது அவர்களை நரகத்தில் இருந்து காப்பாற்றி விடுகிறாள்.. எங்கே இதைச் சொன்னால் கத்தோலிக்கர்கள் விழித்துக்கொள்வார்களே என்று நான் சொல்ல தயங்கினேன்” என்றது.
உத்தரியம் நரகத்தின் அடி ஆழம் வரை சென்று பேய்களின் கூட்டத்தை கலங்கடிக்கிறது..
ஏனென்றால் உத்தரியம் அணிந்த உடன் நாம் முழுவதுமாக மாதாவின் பாதுகாப்பு வளையத்துற்குள் சென்று விடுகிறோம்.. பிசாசுக்கும், நமக்கும் உள்ள உறவு துண்டிக்கப்படுகிறது..
அதற்கு தெரிந்துவிடும் நாம் என்ன செய்தாலும் கன்பார்மா கண்டிப்பாக இவன்/ள் நரகத்திற்கு வர மாட்டான் என்று..
ஆனால் இன்றைய சூழ்நிலையைப் பாருங்கள்.. இப்போது யார் உத்தரியத்தை அணிகிறார்கள்… யார் உத்தரியத்தைப்பற்றி.. பேசுகிறார்கள்.. அந்த பக்தியை யார் ஊக்குவிக்கிறார்கள்.. எங்கோ ஒன்றிரண்டு இடங்களில்தால் அது நடக்கிறது..
99 சதவீதம் அதைப்பார்க்க முடியவில்லை.. ஒரு மிகப்பெரிய பாதுகாப்பு கருவி காணாமல் போய்விட்டது..
ஜெபமாலையாவது சொன்னால்தான் பலன் உத்தரியத்தை அணிந்தாலே பலன்.. எப்பேர்பட்ட விசயம்.. அதைக் காணமல் போக்கியதில்.. கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கண்ணிலிருந்து மறைத்தது பசாசின் வெற்றிதான்.. நாம் கண்டுபிடித்து முறைப்படி அணிய ஆரம்பித்து விட்டால்.. பசாசின் அஸ்திவாரத்தில் வெடி குண்டு வைத்ததிற்கு சமம்..
கத்தோலிக்க கிறிஸ்தவத்தில் என்ன இல்லை.. எதில் பற்றாக்குறை இருக்கிறது.. எல்லாமே இருக்கிறது..
ஒரு கத்தோலிக்கன்/ள் நரகம் போனான் என்றால்.. அவன்தான் காரணமே தவிர கத்தோலிக்க திருச்சபை அல்ல..
அவன் பிறந்தது முதல் சாகும் வரை எல்லாமே அவனுக்கு கொடுக்கப்படுகிறது..
அப்படி அவன்/ள் போனால் என்றால் ஒரே ஒரு வார்த்தைதான் அவனுக்கு பதில்..
அவனுக்கு கொழுப்பு.. அகங்காரம் திமிர்தான் காரணமே தவிர வேறொன்றும் இல்லை..
சாத்தானோடு ஜென்மப் பகையோடு இருக்க அவனை அச்சுறுத்தம் உத்தரியத்தை தகுந்தவாறு முறைப்படி நம் கழுத்தில் அணிவோம்.. அன்னையின் பாதுகாப்பை பெறுவோம்..
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !