அவளுடைய மகிழ்ச்சியின் காரணத்தை கீழ்ப்படிதலின் பெயரால் அவள் தெறிவித்தாள்.
‘கற்பு‘ என்ற வார்த்தைப்பாட்டின் மூலம் அவள் பிதாவாகிய சர்வேசுரனுக்கு நெருக்கமாகிறாள். ‘ பரிசுத்தனம் ’ ஓர் ஆன்மாவை ஆண்டவருடன் ஐக்கியமாக்குகிறது. இந்த ஐக்கியத்தின் உயர்வு, அழகு குறித்து பேச வார்த்தைகளே இல்லை.
‘ கீழ்ப்படிதல் ‘ என்ற வார்த்தைப்பாட்டின் மூலம் அவரது தெய்வீக மணவாளரிடம் ஐக்கியமானாள். இந்த ஐக்கியத்தையும் விளக்க முடியாது. கீழ்ப்படிதல் ஓர் ஆன்மாவை சேசுவின் ஆன்மாவைப் போல் ஆக்குகிறது. ஏனெனில் சேசு மிகவும் கீழ்ப்படிதல் உள்ளவர்.
‘ தரித்திரம் ‘ ( எளிமை) என்ற வார்த்தைப்பாடு ஓர் ஆன்மாவை இஸ்பீத்துசாந்துவுடன் ( பரிசுத்த ஆவியானவர்) ஐக்கியமாக்குகிறது. இஸ்பிரீத்துசாந்துதான் விண்ணகத்தின் திரவியம், செல்வம். சேசு நாதரே “ எளிய மனத்தோர் பேறுபெற்றோர் (மனத்தரித்திரர் பாக்கிவாங்கள் – பழைய பதிப்பு) மத். 5:3 என்று கூறியிருக்கிறார்.
தமத்திருத்திருத்துவம் அவளுக்கு ‘ ஒரு போதும் சாவான பாவத்தைக் கட்டிக்கொள்ள மாட்டாள் ‘ என்பதனை வெளிப்படுத்தியது. எந்நாளும் ஆண்டவரின் சித்தத்தை தவிர வேறெதையும் நாட வேண்டாம் என்ற முடிவுடன் தன்னிலைக்கு வந்த நமது புனிதைக்கு, அடுத்த நாற்பது நாட்களில் அசாதாரணமான வரப்பிரசாதங்கள் அளிக்கப்பட்டன.
ஒவ்வொரு நாளும் நன்மை வாங்கியவுடன் அவள் பரவசமானாள். சேசுவே அவளுக்கு நேரடியாக போதித்தார். ஒரு நாள் விசுவாச உண்மைகள் குறித்து, இன்னொரு நாள் அவள் கடமைகள் குறித்து, மற்றொரு நாள் துறவற வாழ்வின் மேன்மை குறித்து, வேறொரு நாள் அன்றைய சுவிசேச வார்த்தைகள் குறித்து போதித்தார். ஆண்டவர் சிநேகத்தின் பாதையில், பரிசுத்தத்தனத்தின் பாதையில் அவள் எப்படி நடக்க வேண்டும் என்று போதித்தார்.
நன்றி மாதா அப்போஸ்தலர்கள் சபை, தூத்துக்குடி.
“ அறுவடையோ மிகுதி வேலையாட்களோ குறைவு “ என்று சொல்லிய நம் தெய்வத்தின் வேண்டுகோளுக்கு இணங்க தேவ அழைத்தல்கள் அதிகமாகக் கிடைக்க ஜெபிப்போம்..
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !