மாதாவை யாருக்குப் பிடிக்காது? ஆதி 3:15 சொல்கிறது, மாதாவுக்கும் சாத்தானுக்கும் பகை என்று. அப்படியானால் திருவிவிலியம் என்பது என்ன ?
மேலும் சுபாவத்திற்கு மேலான எல்லாக் காரியங்களையும், விசேசமாக ஆத்துமம், நரகம் என்பன போன்ற சத்தியங்களையும் திருவிவிலியம் (பொதுமொழிபெயற்பு) விசுவாசிகளிடமிருந்து மறைத்துவிட முயல்கிறது.
மத்தேயு 16:26 “ ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டலும் அவன் ஆன்மாவிற்கு கேடு விளைந்தால் அவனுக்கு வரும் பயன் என்ன ? ஒருவன் தன் ஆன்மாவிற்கு ஈடாக எதைக்கொடுப்பான் ? என்ற இந்த தெய்வீக வசனம், புனித பிரான்சிஸ் சவேரியார் மனமாற காரணமாக இருந்த வசனம் திருவிவிலியத்தில் “ தன் வாழ்வை இழப்பாராகில் “ என்று மாற்றப்பட்டுள்ளது.
மத்தேயு 16:18 –வேதாகமத்தில்“ உன் பெயர் பாறை. இந்தப்பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்; நரகத்தின் வாயில்கள் அதன் மேல் வெற்றி கொள்ளா,”
என்பது திருவிலியத்தில், “ உன் பெயர் பேதுரு. இந்தப்பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தில் வாசல்கள் அதன் மேல் வெற்றி கொள்ளா என்று மாற்றப்பட்டுள்ளது.
உதாரணமாக ஆதி 1:2 “ பாதாளத்தின் முகத்தே இருள் பரவியிருந்தது ” என்பதை “ ஆழத்தின் மீது இருள் பரவியிருந்தது “ என்று திருவிவிலியத்தில் மேலோட்டமாக சொல்கிறது.
1995-ல் மாதாவை ஓரங்கட்டி புழக்கத்திற்கு வந்த திருவிவிலியம் 20 ஆண்டுகளுக்கு பிறகு மேலும் பல படிகள் முன்னேறி, ஆண்டவரை ஓரங்கட்டுவதற்காக “ திருவிவிலியம்- விளக்கவுரைகளுடன் ” என்று ஒரு பதிப்பு வெளியாகி விசுவாசத்தைக் கொல்லும் நஞ்சாக இப்போது வலம் வந்து கொண்டிருக்கிறது.
அதன் அடிக்குறிப்பில் செங்கடல் பிளந்தததையும், இயேசு 5 அப்பங்களை 5000 பேருக்கு பலுகிக்கொடுத்த அற்புதம், கானாவூர் திராட்சை ரசபுதுமை போன்றவகளை இல்லை என்பது போல் விவரிக்கிறது.
அதே சமையத்தில் அடிக்குறிப்பிற்கு மேலே உள்ள இறைவார்த்தையை வாசித்தால் இயேசு செய்த புதுமை தெளிவாக விளக்குகிறது. அப்படி வேதாகமத்திலிலேயே தெளிவு இருக்க எதற்க்காக யாரோ விளக்கவுரை எழுத வேண்டும். அதை பெரியவர்கள் யாரோ பாராட்ட வேண்டும். ஏன் ? ஏன் ? இவையெல்லாம் யாருடைய செயலாக இருக்க வேண்டும்? இருக்க முடியும்? மேய்ப்பர்களின் சிலரின் அறியாமையை பயன்படுத்தி சாத்தான் செய்யும் செயலன்றி வேறேது ?
நன்றி : மாதா பரிகார மலர், மாதா அப்போஸ்தலர்கள் சபை
இது போன்ற செயல்களுக்கு நண்பர்களே உங்களது ஆதரவை 0.00001% கூட கொடுக்காதீர்கள் என்று தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறோம். தீமைகளுக்கு துணைபோனால் நாமும் ஆண்டவருக்கு கணக்கு கொடுக்க வேண்டும்.
திருவிலிய பொதுமொழி பெயற்பில் உள்ள தீமைகளை கண்டுபிடிக்க நமக்கே இவ்வளவு சிரமங்கள் இருக்கிறதே, அப்படியென்றால் வருங்கால தலைமுறை பைபிளை எப்படி படிப்பார்கள் ? எப்படி புரிந்து கொள்வார்கள் ?. இப்படித்தான் நிகழும் முதலில் மாதாவை மறுதலிப்பார்கள்; பின்பு இயேசுவை மறுதலிப்பார்கள். இதுதானே நடக்கும். இது சாத்தானுக்கு அல்லவா வெற்றி கொடுக்கும்.
யார் வெற்றி பெற வேண்டும் ? தேவாதி தேவன் அல்லவா வெற்றி பெற வேண்டும். அவர் வெற்றி பெற வேண்டுமானால் சாத்தானை எதிர்த்து போரிடும் அவருடைய பிரதிநிதியாகிய நம்முடைய பரிசுத்த தாயல்லவா வெற்றி பெற வேண்டும். நம் மாதா வெற்றி பெற நம்முடைய பங்களிப்பு என்ன? நம் பணி என்ன ? சேவையோ, போராட்டமோ அது எப்படி நடக்க வேண்டும் ?
சிந்திப்போம் ! உடனடியாக செயல்படுவோம். பொதுமொழிபெயற்பை உதறித்தள்ளுவோம். நம் பாரம்பரிய பரிசுத்த வேதாகமத்தை கையில் எடுப்போம். மற்றவரையும் எடுக்க வைப்போம்.பிறருக்கும் பொதுமொழிபெயற்பில் உள்ள தீமைகளை எடுத்துரைப்போம்.
சரி அப்படியானால் நம் கத்தொலிக்க வேதாகமம் எங்கு கிடைக்கும்?
திரு சுந்தர், கிரேஸ் ஹாஸ்பிட்டல், திருவண்ணாமலை, தொலைபேசி எண்: 07418271814, 09626518446
உண்மையான இறைவார்த்தைகள் அடங்கிய பரிசுத்த வேதாகமத்தை நாமும் வாங்குவோம், பிறரையும் வாங்க வைப்போம்.
இயேசுவுக்கே புகழ் ! இயேசுவுக்கே நன்றி. மரியே வாழ்க !