ஜெபமாலையின் நடுவே குறுக்கீடுகள்
ஒரு நாள் தந்தை பியோ ஜெபமாலை ஜெபித்துக்கொண்டிருக்க , பாத்ரே அலேஸியா அவரோடு அமர்ந்திருந்தார். அப்போது இடையிடையே பாத்ரே பியோ, “ நான் அவளுக்காக ஜெபிப்பேன் என்று அவளிடம் கூறும், “ “ அந்த வரத்தைக் கேட்டு நான் சேசுவின் திருஇருதயத்தை தட்டுவேன் என்று அவளிடம் கூறும், “ திவ்விய கன்னிகை இந்த வரத்தை மறுக்க மாட்டார்கள் என்று அவளிடம் கூறும் “ என்று ஜெபமாலைக்கு சம்பந்தமில்லாத வார்த்தைகளை யாரிடமோ சொல்லிக்கொண்டிருப்பதைப் பார்த்ததைப் பார்த்த பாத்ரே அலெஸியோ கவனித்தார்.
அவர் தம் ஜெபம் யாருக்குத் தேவைப்படுகிறதோ, அந்த மனிதர்களின் காவல் தூதர்களோடுதான் பேசிக்கொண்டிருந்தார் என்பதை பல ஆண்டுகளுக்குப் பிறகே பாத்ரே அலெஸியோ அறிந்து கொண்டார்.
தேவதூதரால் உலுக்கப்படுதல்
பாத்ரே பவுலினோ தந்தை பியோவிடம் ஒரு நாள், இரவில் அவருக்கு உதவி எதுவும் வேண்டுமானால், அவரது காவல் தூரரை தம்மிடம் அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். ஒரு நாள் இரவில் தாம் கடுமையாக உலுக்கப்படுவதை அவர் உணர்ந்தார். இதனால் முழுவதுமாக விழித்துக் கொண்ட அவர், பாத்ரே பியோவிடம் தாம் கூறியிருந்ததை நினைவு கொண்டு, அவரது அறைக்கு ஓடி அவருக்கு ஏதாவது உதவி வேண்டுமா? என்று கேட்டார். பாத்ரே பியோ :
“ ஆம் எனக்கு வியர்த்துக் கொட்டுகிறது. நான் உடல் கழுவி உடை மாற்ற வேண்டும் என்றால் என்னால் அதை தனியாகச் செய்ய முடியாது எனவே எனக்கு உதவி செய்யுங்கள் “ என்று கேட்டுக்கொண்டார்.
நன்றி : “புதுமைப் புனிதர் தந்தை பியோ” – வாழ்க்கை வரலாறு நூல், கிடைக்குமிடம் மாதா அப்போஸ்தலர் சபை, தூத்துக்குடி. புத்தக தொடர்புக்கு மாதா அப்போஸ்தலர் சபை சகோ.பால்ராஜ் Ph: 9487609983, நண்பர் ஜேசுராஜ் Ph: 9894398144
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !