புனித பாசி மரிய மதலேனாள் வாழ்க்கை வரலாற்றிலிருந்து 4 :

நம்முடைய இயக்குநர் (டைரக்டர்) ஆண்டவர் இயேசுவாக மாற வேண்டும்.. (பெரிதாக இருந்தாலும் பொறுமையாக வாசிக்கலாம்..)

புனிதை குணமாகிவிட்டாள். ஆயினும் சிறிது காலம் அவள் நோயாளிகள் அவள் தங்க வேண்டும் என்று மடத்துத்தாயார் உத்தரவிட்டாள். எனவே புனிதை அங்கு தங்கியிருந்தாள். நோயாளி அறையில் ஒரு ஆறுதல் சம்மனசு போல, புனிதை ஒவ்வொரு படுக்கை அறையிலும் சென்று தன் புண்முறுவலால், அன்பான உரையாடலால் நோயுற்ற சகோதரிகளை மகிழ்வித்தாள். அவளது தெய்வீக மணவாளரும் ஒவ்வொரு நாளும் தேவ நற்கருணை வாங்கியபின் தன் வரப்பிரசாதங்களால் அவளை நிரப்பினார். தமது பரம இரகசியங்களை அவளுடன் பகிர்ந்துகொண்டார் தமது விருப்பத்தையும் அவளுக்கு தெறிவித்தார்.

ஜூன் மாதம் 21-ம் தேதி, நமதாண்டவர் புனிதையிடம்,

“ இனி மேல் நீ மகிழ்ச்சியோடோ துயரத்தோடோ இருக்கக்கூடாது. திருப்தியையோ, அதிருப்தியையோ தேடாதே. வாழ்வையோ, சாவையோ விரும்பாதே. மோட்சத்தையோ, நரகத்தையோ விரும்பாதே. உன்னையே உயர்த்தவும் வேண்டாம், தாழ்த்தவும் வேண்டாம். உள்ளரங்கத்தில் அசைவின்றி இரு. நீயாகவே எதை நினைக்கவோ, விரும்பவோ செய்யாதே. உன்னை முழுமையாக நானே இயக்குவேன்” என்றார்.

அதற்கு புனிதை “ ஆண்டவரே, உமது படிப்பினையின்படி செயல்படுவேன்” என்று சொல்ல விரும்பினாள். அதற்கு ஆண்டவர்,

“ எதையும் சொல்லாதே, உனக்கென்று எதையும் வைத்திராதே. புத்தியோ, நினைவோ, மனதோ அல்லது வேறெதுவோ வைத்துக் கொள்ளாதே “ என்று கூறினார்.

புனிதை வார்த்தைப்பாடு கொடுத்த தமத்திருத்துவ ஞாயிறிலிருந்து 40 நாட்கள் கடந்துவிட்டன. அசாதரன வரப்பிரசாதங்கள் பொழியப்பட்ட காலம் முடிந்துவிட்டது. புனிதைக்கு அடிக்கடி பரவசம் ஏற்பட்டது. ஆயினும் அவள் கன்னியருடன் கூட்டு வாழ்க்கைக்கு தயாரானாள்.

ஜூலை மாதம் 6-ம் தேதி, சேசு புனிதை மீது அசாதரன அன்பு பொழியலானார். அதுகுறித்து அவள்,

“ தேவ நற்கருணை வாங்கிய பின் ஆண்டவரைக் கண்டேன். அன்பு நிறைந்தவராக, ஆனால் குற்றம் கண்டுபிடிப்பவர் போல் காணப்பட்டார்.

( இந்த உரையாடலை பாருங்கள்..)

சேசு : நான் உன்னை அழைத்தேன் நீ வரவில்லை..

நான் : நான் உம்மைத் தேடினேன். ஆனால் உம்மைக் கண்டு பிடிக்கவில்லை.

சேசு : என் மாடப்புறாவே, நான் உன்னை அழைத்தேன். நீ பதில் மொழி கூறவில்லை.

நான் : உம்மைத் தேடினேன், என் அன்பரே, உம்மை ஆசித்தேன். உம்மை நேசித்தேன், என் நேசமே உம்மைத் தேடினேன். ஆனால் நான் உம்மைக் கண்டுபிடிக்கவில்லை.

சேசு :  என் அன்பே, என் மணவாட்டியே, உன்னை வெகுவாய் அழைத்தேன். நீ பதில் மொழி கூறவில்லை.

நான் :  நான் அதிகமாக உம்மைத் தேடினேன். உம்மை நான் காணுமாறு நீர் செய்யவில்லை, என் நேசமே.

சேசு : அன்பே, நீ ஏன் என்னைக் கண்டுபிடிக்கவில்லை தெறியுமா? நீ என்னை உன்னிப்பாக தேடவில்லை என்பதுதான்.

நான் : என் நேசமே, நான் ஏன் உமக்கு பதில் மொழி கூறவில்லை தெறியுமா? நான் கேட்கும் அளவுக்கு உரத்த குரலில்  நீர் என்னைக் கூப்பிடவில்லை.

சேசு : என் நேசமே, நன்றாக என்னைப் பார். கண்டுபிடிப்பாய்.

நான் : நன் கேட்கும் அளவு உரத்த குரலில் பேசும். நான் கேட்பேன்.

சேசு : என் மணவாளியே நீதான் என்னைத் தேட வேண்டும்.

பொறுமையிழந்த 

நான் : என் நேசமே, யாரிடம் அன்பு அதிகம் உள்ளதோ, அவர்கள்தான் அதிகம் கொடுக்க வேண்டும் என்று நீர் சொல்லியிருக்கிறீர். என்னைவிட உம்மிடம்தான் அதிகம் இருக்கிறது. ஆகவே நீர்தான் தர வேண்டும். என்னை விட சக்திவாய்ந்தவர் நீர்; பலம் படைத்தவர் நீர்; செல்வம் மிகுந்தவர் நீர்; என்னை விட அதிகம் நேசிப்பவர் நீர். இதுவும் உமக்குத் தெறியும். நீர்தான் உண்மை எனக் கூறியுள்ளீர். என் அன்பரே, இவற்றை நீரே தெறிவித்துள்ளதால் இவையே உண்மை. எனவே என் அன்பரே, நீரே செய்ய வேண்டும். உமது குரலை நான் கேட்குமளவுக்கு சப்தமாக என்னைக் கூப்பிடும்.

இந்த இளம் புனிதையின் நம்பிக்கை, தாழ்ச்சி, துணிச்சல் சேசுவை மெய்மறக்கச் செய்கிறது.

“ என் மாடப்புறாவே, என் அன்புருவே வா “ என்றழைத்த சேசு நமது புனிதையை தம்மோடு சேர்த்துக் கொண்டார்.

“ ஒரு நண்பர், தன் நண்பருடன் உரையாடுவது நாங்கள் உறையாடினோம். ஆனால் அவற்றில் மிகச்சிறிய அளவக்கூட உங்களுக்கு தெறிவிக்க என்னால் முடியவில்லை” என்று புனிதை கன்னியரிடம் கூறினாள்.

நன்றி : மாதா அப்போஸ்தலர்கள் சபை, சகாயமாதாப்பட்டனம், தூத்துக்குடி “ மாதா பரிகார மலர், பாத்திமா காட்சிகள், கடவுள் மனிதனின் காவியம், புனிதர்கள் படக்கதை நூல்கள், வாழ்க்கை வரலாறுகள் மற்றும் சிறந்த கத்தோலிக்க புத்தகங்களுக்கு தொடர்பு கொள்க. சகோ. பால்ராஜ் Ph. 0461-2361989, 9487609983, சகோ. கபரியேல் Ph.no. 9487257479

சிந்தனை : தேவ நற்கருணையைப் பெற்ற பின் நம் ஆண்டவர் நம்மை எந்த அளவுக்கு தேடுகிறார்; நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்று எவ்வளவு தெளிவாக இப்புனிதையின் வாழ்க்கை வரலாற்றில் பார்த்தோம்..  நாம் திவ்ய நற்கருணை வாங்கியபின் எப்படி நடந்து கொள்கிறோம்.. 

1. ஒரு சிலர் ஒரே ஒரு பிதா, சுதன் போட்டுவிட்டு அப்படியே அமர்ந்து விடுகிறார்கள்..

2. நன்மை வாங்க போகும் போதும் வரும் போதும் தெறிந்தவர்கள் எதிர்பட்டால் அவர்களைப் பார்த்து புண்ணகைக்கிறோம்.

3. ஒரு பத்து நிமிடம் கூட அவரோடு அமர்ந்து பேசுவதில்லை..

4. உடனே வேடிக்கை பார்ப்பதும், பக்கத்தில் இருப்பவரிடம் பேசுவதும், அருட்தந்தையின் அறிக்கைகளை கவனிப்பதும், அடுத்து என்ன என்று சிந்திப்பதிலும் கவனமாகிவிடுகிறோம்..

5. அப்படியே ஆண்டவரிடம் பேசினாலும் ஒரே பெட்டிசன் போடுவதிலிலேயே குறியாக இருக்கிறோம்.. எனக்கு அது வேண்டும்.. இது வேண்டும்.. என் கணவருக்கு.. என் பிள்ளைகளுக்கு...என்று..

6. பெட்டிசன் போடுவதில் தவறில்லை.. முதலில் வந்த ஆண்டவரை ஆராதிக்க வேண்டும் ; நன்றி சொல்ல வேண்டும்; புகழ வேண்டும் அதன் பின் உரையாட வேண்டும்.” என்ன ஆண்டவரே எப்படி இருக்கிறீர்கள்.. நான் எப்படி இருக்கிறேன்.. என் ஆன்மா உமக்குகந்தாக இருக்கிறதா? உமக்கு பிடிக்காத விஷயங்கள் எத்தனையை இன்னும் நான் வைத்திருக்கிறேன். அவற்றை நீக்கிவிடும்; என்னை உம்முடையவனாக, உம்முடையகளாக மாற்றும்; என்னை அர்ச்சிஷ்ட்டவனா(ளா)க மாற்றும்.. மேலும் “ என் தேவனே நான் உம்மை விசுவசிக்கிறேன் ஜெபம், “ ஆண்டவரே எனக்கு எத்தகைய மரணத்தை.. ஜெபம்.. நன்றாக அவரிடம் பேசிவிட்டு எத்தனை பெட்டிசன்களை வேண்டுமானாலும். போடலாம்.. அவரே அடங்கிவந்து நம்  நாவில்  நுழைந்து, வயிற்றுக்கு போயி பின் இதயத்தில் வீற்றிருக்கிறார்.. அவரிடம் என்ன வேண்டுமானாலும் கேட்கலாம்.. நமக்கு தேவையானதை எல்லாம் தருவார்..

7. ஆனால் நாம் இத்தனை காலம் என்ன செய்து கொண்டு இருந்தோம்..என்னவெல்லாம் செய்தோம்.. உட்கார்ந்து யோசிக்க நல்ல  நேரத்தைக் கொடுத்திருக்கிறார்..

8. நாம் எதுவெல்லாம் பெரிசுன்னு நினைத்தோமோ அதுவெல்லாம் ஒன்றுமே இல்லை என்று பாடம் எடுத்துகொண்டிருக்கிறார்...

9. நான்தான் உனக்கு முக்கியம்.. என்னை மட்டும்தான் நீ தேட வேண்டும்.. விண்ணகச் செல்வங்களை மட்டுமே நீ நாட வேண்டும் என்று போதிக்கிறார்..

10. அழிந்து போகும் உணவுக்காக உழைத்திடவேண்டாம்.. மண்ணக செல்வங்களை பூச்சியும், புழுவும் அரித்துவிடும்..அது நிரந்தரமல்ல.. மோட்சமே நிலையானது.. நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஆயுட்காலத்தில் விண்ணகத்திற்கு தேவையான சொத்து சுகங்களை சேகரிக்க வேண்டும்.. அதாவது புண்ணியங்களை சேகரிக்க வேண்டும் என்று வீட்டில் உட்கார வைத்து பாடம் எடுக்கிறார் நம் தேவன்..

நாம் அவர் குரலுக்கு இனியாவது செவி சாய்ப்போமா?.. நம்முடைய போக்கிலே போகாமல்..  நம்மை முழுவதும் ஆண்டவரிடம்  நம் புனிதை போல அர்ப்பணித்துவிட்டு நம்மையும், நம் குடும்பத்தையும் இயக்கும் பொறுப்பை ஆண்டவரிடம் ஒப்படைத்து விடுவோமா?..

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !