“நம் பரலோக அன்னையைக் குழந்தை சேசு பாலனோடு நான் தெளிவாகக் கண்டேன் “
1929, மாதாவின் விண்ணேற்பு திருநாளன்று (ஆகஸ்ட் 15) பாத்ரே பியோ இப்படி எழுதினார்;
“ இன்று காலையில் நான் உடல் வலிகளோடும், மன வேதனைகளோடும் பீடத்தை நெருங்கினேன். சாகப்போவது போல நான் உணர்ந்தேன்…. திவ்ய அப்பத்தை உட்கொள்ளும் நேரத்தில், நான் நம் பரலோக அன்னையைத் தெளிவாகக் கண்டேன், அவர்களுடைய திருக்கரங்களில் சேசு பாலன் வீற்றிருந்தார்.. அவர்கள் இருவரும் என்னிடம் :
“ அமைதியாக இரு. உனக்காக நாங்கள் இங்கே இருக்கிறோம். நீ எங்களுக்குச் சொந்தமானவன், நாங்கள் உங்களுக்குச் சொந்தமானவர்கள்” என்று சொன்னதைக் கேட்டேன். அந்தக் கணம் முதல் இனிமை மற்றும் அன்பின் விவரிக்க முடியாத கடலில் நான் மூழ்கடிக்கப்பட்டதாக நான் உணர்ந்தேன்,”
தந்தை ஒனோராட்டோ என்பவர் பாத்ரே பியோவிடம், அவர் தேவ அன்னையைக் கண்டிருக்கிறாரா என்று ஒரு முறை கேட்ட போது,
“ எனக்குத் தேவைப்படும்போதெல்லாம் தேவமாதா என்னைத் தேடி வருகிறார்கள் “ என்று பியோ பதிலளித்தார். பாத்ரே பியோ தமக்கு வரும் பிரச்சனைகளையெல்லாம் நம் அன்னையின் உதவி கொண்டு தீர்க்கிறார். அல்லது அவர்களே அவற்றைத் தீர்க்குமாறு விட்டுவிடுகிறார்” என்று தந்தை மார்செல்லினோ கூறினார்.
பாவசங்கீர்த்தனத் தொட்டியின் அருகில் :
தாம் பாவசங்கீர்த்தனம் கேட்கும் போது, திவ்விய கன்னிகை தமக்கு அருகிலேயே இருப்பார்கள் என்று பாத்ரே பியோ சில தடவைகள் தம் நண்பர்களிடம் கூறியிருக்கிறார்.
மேலும் அவர் பூசையைத் தொடங்கும் முன்பிருந்து மாமரி சேசுவோடும், அர்ச்.பிரான்ஸோடும் பீடத்தின் அருகிலேயே இருப்பதாகவும் அவர் கூறினார்.
தாம் சாவதற்கு சில நிமிடங்களுக்குமுன், பாத்ரே பியோ;
நான் இரண்டு தாய்மாரையும் காண்கிறேன்” என்றார். திவ்ய கன்னிகை அவரை இவ்வுலகில் பெற்றெடுத்த தாயுடன் சேர்ந்து அவரை அழைத்துச் செல்ல வந்திருந்தார்கள்…
“ மரியாயே ! “ என்பதுதான் பாத்ரே பியோ தம் வாழ்வில் உச்சரித்த கடைசி வார்த்தையாக இருந்தது!.
நன்றி : “புதுமைப் புனிதர் தந்தை பியோ” – வாழ்க்கை வரலாறு நூல், புத்தக தொடர்புக்கு பிரதர் ஜேசுராஜ் Ph: 9894398144, பிரதர் மகிபன் Ph: 9940527787
“ சூரியன் சாய காரிருள் மெல்ல சூழ்ந்திட யாவும் சோர்ந்திடும் நேரம் நின்மடி மீது என் தலை சாய்த்து நின்மகன் பாதம் சேர்த்திடு தாயே “
நம் அன்புத்தாயிடம் நம்மை முழுவதும் ஒப்படைப்பபோம்… அவர் நம்மை அவர் குமாரன் சேசுவின் பாதத்தில் சேர்ப்பார். அவர் நமக்கு பெற்றுத்தர வேண்டிய மோட்சத்தையும் பெற்றுத்தருவார்….
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !