1. “ காவல் தூதர் எல்லாவற்றையும் எனக்கு விளக்கினார் “
1912, செப்டம்பர் 7 அன்று பாத்ரே அகஸ்டினோ என்பவர் கிரேக்க மொழியில் பாத்ரே பியோவுக்கு ஒரு கடிதம் எழுதினார். பாத்ரே பியோ அந்த கடிதத்தை திறந்த போது தந்தை சால்வாத்தோர் பன்னுல்லோ என்பவர் அவரோடு இருந்தார். அந்த கடிதத்தின் அடிப்பகுதியில் அவர் பிற்பாடு பின்வரும் சாட்சியத்தை எழுதினார்.: “இதை நான் சத்தியப்பிரமாணம் செய்து கொள்கிறேன் “:
தந்தை பியோ இந்தக் கடிதத்தை திறந்து அதில் எழுதியிருந்தவற்றை வார்த்தைக்கு வார்த்தை எனக்கு விளக்கிக் கூறினார். கிரேக்க எழுத்துக்களே அவருக்கு தெறியாத போது அவர் கடித்தத்தை எப்படி வாசித்து சொல்ல அவரால் முடிந்தது என்று நான் அவரிடம் கேட்டேன். அவர் மறுமொழியாக:
“ உங்களுக்குத்தான் தெறியுமே! என் காவல் தூதர்தான் எனக்கு எல்லாவற்றையும் விளக்கிக் கூறினார் என்றார்.
2. தன் காவல்தூதரைக் கடிந்து கொண்ட பாத்ரே பியோ :
1912 நவம்பர் 5 அன்று தமது ஆன்ம இயக்குனருக்கு தந்தை பியோ இப்படி எழுதினார் :
“ இந்தக் கயவர்கள் (பசாசுக்கள்) என்னை எப்படி அடிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்ல என்னால் முடியாது. சில சமயங்களில் நான் சாகப் போவதாக உணர்கிறேன். சனிக்கிழமையன்று, எனக்கு முடிவு கட்டிவிட அவை தீர்மானித்திருந்தது போல எனக்குத்க் தோன்றியது. எந்த அர்ச்சிஷ்ட்டவரிடம் ஜெபிப்பது என்று தெறியவில்லை. எனவே நான் என் தூதரிடம் திரும்பினேன். அவர் சற்று நேரம் என்னைக் காக்க வைத்தபின், தமது சம்மனசுக்குறிய இனிய குரலில் தேவ மகத்துவத்திற்கு துதிகள் பாடியபடி எனக்கு நெருக்கமாக பறந்து வந்தார்….
என் உதவிக்காக அவரை நான் அவசரமாக அழைத்தும் அவர் என்னை இவ்வளவு நேரம் காக்க வைத்ததிற்காக நான் அவரை கடிந்து கொண்டேன். அவரைப் பார்க்காமல் தவிர்ப்பதன் மூலம் அவரைத் தண்டிக்க எண்ணினேன். அவரிடமிருந்து விலகிச் சென்றுவிட நான் முயன்றேன். அவரோ கிட்டத்தட்ட அழும் நிலையில் என்னைப் பார்க்கும் வரை என்னைப் பிடித்துக் கொண்டார். நான் அவரது முகத்தைப் பார்க்கும் வரை அவர் தன் பிடியை விடவில்லை. நான் அவரைப் பார்த்தபோது அவர் மிகவும் நிலைகுலைந்திருப்பதை உணர்ந்தேன்.
அவர் என்னிடம் “ என் அன்புக்குரிய இளைஞனே. நான் எப்போதும் உன் அருகில்தான் இருக்கிறேன்” என்று பரிதாபமாகக் கூறினார்.
நன்றி : “புதுமைப் புனிதர் தந்தை பியோ” – வாழ்க்கை வரலாறு நூல், புத்தக தொடர்புக்கு பிரதர் ஜேசுராஜ் Ph: 9894398144, பிரதர் மகிபன் Ph: 9940527787
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !