முதல் சனி பக்தி முயற்சி.
''நீயாவது எனக்கு ஆறுதல் அளிக்க முயற்சி எடு."
''என் திரு இருதயத்துடன் என் தாயின் மாசற்ற இருதயமும் இணையாக வைத்து வணங்கப்பட வேண்டும்" என்ற நமதாண்டவராகிய சேசுக்கிறிஸ்துநாதரின் விருப்பம் பாத்திமா காட்சி பெற்ற சகோதரி லூசியா வழியாக வெளிப்படுத்தப்பட்டது.
சம்மனசானவரின் இரண்டாம் காட்சியில் கற்பிக்கப்பட்ட 'ஓ மகா பரிசுத்த தமத்திரித்துவமே...'' என்ற தேவநற்கருணை பரிகார ஜெபம் சேசுநாதரோடு மாமரி இணை இரட் சகியாக இருந்து, இரட்சணியப் பேறு பலன் களை நமக்காக சம்பாதித்தார்கள், அவர்களது மாசற்ற இருதயமும் சேசுவைப் போலவே நம்மை நேசிக்கிறது . என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
மேலும் பாத்திமா குழந்தைகளின் ஜெபத்தையும், தவத்தையும், பரித்தியாக முயற்சிகளையும் கண்டு மோட்சம் மகிழ்ந்தது. 'சேசு மரிய இருதயங்கள் உங்கள் ஜெபங்களை செவியுற்றுக் கேட்கிறார்கள்'' என்ற சம்மனசானவரின் வார்த்தைகள், சேசு மரிய இருதயங்கள் நம் பரிகார முயற்சிகளையும் அன்பையும் ஏக்கத்தோடு தேடுகிறார்கள் என்பதை எடுத்துரைக்கின்றன.
திருச்சபையில் ஏற்கெனவே தேவ அன்னை யின் ஏழு வியாகுலங்களை நினைத்து நேசித்து அவர்களுக்கு ஆறுதல் அளித்து, அந்த பக்தி யைப் பரப்பும் ஏழுவியாகுலங்களின் குருக்கள், கன்னியர் சபையினர் மரியாயின் மாசற் இருதயத்தின் மீது தங்களுக்குள்ள நேசத்தை இவ்வாறு வெளிப்படுத்தி வருகிறார்கள்.
16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த அர்ச். யூட்ஸ் அருளப்பர் தேவ அன்னையின் மாசற்ற இரு யத்தின் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தார். தம்மால் முடிந்த வரை அப்பக்தியைப் பரப்ப வும் செய்தார். திருச்சபையில் பல அர்ச்சிய சிஷ்டவர்கள் மேற்றிராணிமார்கள் மற்றும் குருக்கள் தேவ அன்னையின் பெயராலும், அவர்களது மாசற்ற இருதயத்தை நேசிக்கும் விதமாகவும் பல துறவற சபைகளை ஏற்படுத்தி னார்கள். ஆயினும், ''கடவுள் மட்டும்தானே எல்லாவற்றிற்கும் மேலாக நேசித்து வணங்கப்பட வேண்டும்? மாமரிக்கு இவை எதற்கு?'' என்ற கேள்வி சாத்தானால் தூண்டப்பட்டு, திருச் சபையின் எதிரிகளால் பரப்பப் பட்டும் வந்தது. சேசுநாதரே கடவுள், மாமரி கடவுளல்ல என்பது உண்மைதான் , ஆயினும் ஒரே தசைநார்களால் இணைக்கப்பட்டவை போல் உத்தம நேசத்தால் இந்த இரு இருதயங்களும் பிரிக்க முடியாத படி ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கின்றன. நமதாண்டவர் தேவமாதாவின் திருவுதரத்தில் உற்பவித்தது முதல் அவரது கல்வாரி மரணம் வரை இந்த நேசத்தால் மாமரி அவரோடு நெருக்கமாக இணைந்திருந்தார்கள். அதன் பின் தேவ அன்னை பரலோகத்திலும் கடவுளோடு இணைக்கப்பட்டு, அவரது அன்பாகவே இருக்கிறார்கள்.
மேலும் "அவள் உன் தலையை நசுக்குவாள், நீயோ அவளுடைய குதிங்காலைத் தீண்டப் பிரயத்தனப்படுவாய்" என்ற பிதாவின் வார்த்தை களும், ''இதோ உன் தாய்!'' என்ற சேசுநாதரின் வார்த்தைகளும், சம்மனசானவரின் மங்கள் வார்த்தைகளும், எலிசபெத்தம்மாள் வழியாக இஸ்பிரீத்து சாந்து மாமரியை வாழ்த்திக் கூறிய வார்த்தைகளும் தேவமாதா நித்தியத்திலும், கடவுளின் இரட்சணியத் திட்டத்திலும், நம் அர்ச்சிப்பிலும் கடவுளோடு ஒத்துழைக் கிறார்கள், அவர்கள் நம் அன்பிற்கு முற்றும் உரியவர்களாக இருக்கிறார்கள் என்பதைத் தெளிவு படுத்துகின்றன. இதற்கேற்ப தொடக்க காலத்திலிருந்தே தேவ அன்னை விசுவாசி களால் மிகுந்த வணக்கத்தோடும், பக்தி யோடும் நேசிக்கப்பட்டு வந்தார்கள்.
ஆயினும் தொடக்க நூற்றாண்டுகளிலேயே எழுந்த தப்பறைகளாலும், ப்ரொட்டஸ்டாண்ட் பதித மதங்களின் கல்கத்தாலும், எல்லாவற் றிற்கும் மேலாக திருச்சபையின் தேவ ஊழியர் களாலேயே மாமரிக்குக் காட்டப்படும் நிந்தை, துரோகம், அலட்சியத்தின் காரணமாகவும் தேவ அன்னையின் மீது மிகுந்த பக்தி கொண் டிருந்த ஐரோப்பிய நாடுகளிலும் கூட மாதா பக்தி குறைந்து போனது. உலகாதாயம் மிகுந்து, தேவ விசுவாசமும், தேவசிநேகமும் மக்களின் டையே நலிந்து போனதால் மக்கள் தேவ அன்னையின் அன்பையும் மறந்து போனார்கள். நேற்று வரை தேவமாதாவின் புண்ணியங்களைக் கண்டுபாவித்த திருச்சபை யின் ஊழியர்களும், விசுவாசிகளும் இன்று அவர்களை நேசிப்பதை நிறுத்தி விட்டதைக் கண்டு சேசு மரிய இருதயங்கள் மிகுந்த வேதனைக்கு உள்ளாகிறார்கள். 17-ம் நூற்றாண்டு துவக்கி இன்று வரை மனிதரிடையே விசுவாச மறுதலிப்பும், பாவமும் மலிந்து விட்டன. இந்நிலையில் ஆன்மாக்களையும், உலகத்தையும், திருச்சபையையும் காப்பாற்ற கடவுள் பாத்திமாவுக்குத் தம் தாயையே தீர்க்கதரிசினியாக அனுப்புகிறார்.
திருச்சபையின் மாதாவும், சகல மனிதர் களின் தாயுமாயிருக்கும் தேவ அன்னை தனது மாசற்ற இருதய பக்தி அனுசரிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை பாத்திமாவில் வெளிப்படுத்துகிறார்கள். தனது மூன்றாவது காட்சியில் நரகத்தைத் திறந்து காட்டி, 'பரிதாபத்திற்குரிய பாவிகள் செல்லும் நரகத்தை நீங்கள் கண்டீர்கள். இவர்களைக் காப்பாற்ற உலகில் என் மாசற்ற இருதய பக்தியை ஏற்படுத்தக் கடவுள் விரும்புகிறார்' என்று அறிவிக்கிறார்கள். அத்துடன், பாவிகள் மனந்திரும்பும்படியும், சேசுவுக்கு ஆறுதலாகவும், பாவங்களுக்குப் பரிகாரமாகவும் ஜெபமும், தவமும், பரித்தியாகங்களும் செய்யப்பட வேண்டும், மனிதர்கள் தங்கள் வாழ்வைத் திருத்தி, தங்கள் ஆன்மாவைக் காத்துக்கொள்ள வேண்டும் என்றும் அன்போடு வலியுறுத்துகிறார்கள்.
17-ம் நூற்றாண்டில் சேசுநாதர் பாரலே மோனியாவில் தோன்றி தமது திரு இருதயத் திற்கு நிந்தைப் பரிகாரம் செய்யப்பட வேண்டும் மென்று கேட்டார். 20-ம் நூற்றாண்டில் மாதா பாத்திமாவில் தோன்றி தன் மாசற்ற இருதயத் திற்குப் பரிகாரத்தைக் கேட்கிறார்கள். சேசு வின் திரு இருதயமும், மரியாயின் மாசற்ற இருதயமும் ஒன்றாக நேசிக்கப்பட வேண்டு மென்ற பரலோகத்தின் விருப்பம் இதில் தெளிவாக வெளிப்படுகிறது. எனவே நாம் மரியாயின் மாசற்ற இருதயத்திற்குச் செய்யப் படும் பரிகாரம் சேசுவை வெகுவாக மகிழ்விக் கிறது, அது அவரது திருச்சித்தமாகவே இருக் கிறது என்பதை உணர்ந்து, மரியாயின் மாசற்ற இருதயத்தை நேசிக்கும் விதமாக ஐந்து மாதங் களின் முதல் சனிக்கிழமைகளில் கீழ்க்கண்ட ஐந்து கருத்துக்களுக்காக நம் பரிகார முயற்சி களைச் செய்வோமாக. இதன் மூலம் நம் பரிசுத்த தாய்க்கு நாம் ஆறுதல் அளிக்கிறோம்.
ஐந்து முதல் சனி கருத்துக்கள்
1. தேவமாதா ஜென்மப் பாவமின்றி உற்பவித் தார்கள் என்கிற சத்தியத்தை மறுக்கும் நிந்தைக்குப் பரிகாரமாக (ஜனவரி, ஜூலை)
2. தேவமாதா சர்வேசுரனின் தாய் என்ற சத்தியத்தை மறுக்கும் நிந்தைக்குப் பரிகார மாக (பெப்ருவரி , ஆகஸ்ட்)
3. தேவமாதா நித்திய கன்னிகை என்ற சத்தியத்தை மறுக்கும் நிந்தைக்குப் பரிகார மாக (மார்ச். செப்டம்பர்).
4. தேவமாதாவின் பக்தியை இளம் உள்ளங் களிலிருந்து அகற்றும் நிந்தைக்குப் பரிகார மாக (ஏப்ரல், அக்டோபர்).
5. தேவமாதாவின் பக்திப் பொருட்களை (ஜெபமாலை, சுரூபங்கள், படங்கள், பதக் கங்கள், உத்தரியம்) அவமதித்து அகற்றும் நிந்தைக்குப் பரிகாரமாக (மே. நவம்பர்).
(ஜூன் மாதமும், டிசம்பர் மாதமும் ஐந்து கருத்துக்களுக்காகவும் மொத்தமாகப் பரிகாரம் செய்ய வேண்டுகிறோம்).
கடைப்பிடிக்கும் முறைகள்
மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு நிந்தைப் பரிகாரம் செய்யும் கருத்துடன் - பாவசங்கீர்த்தனம் செய்து, (பாவசங்கீர்த்தனத்தை முதல் சனிக் கிழமைக்கு ஒரு வாரம் முந்தியோ பிந்தியோ செய்து கொள்ளலாம். ஆனால் இப்பக்தியின் மற்ற நிபந்தனைகளை அனுசரிக்கும்போது ஆத்துமத்தில் சாவான பாவம் இல்லாமல் இருக்க வேண்டும்).
- பரிகார நன்மை உட்கொண்டு,
- 53 மணி ஜெபமாலை தியானித்துச் சொல்லி,
- ஜெபமாலை தேவ இரகசியங்களில் ஏதாவது ஒன்றை தியானித்தபடி மாதாவோடு தங்கியிருக்க வேண்டும்.
முதல் சனி பக்தியை அனுசரிப்பவர்களுக்கு தேவமாதாவின் வாக்குறுதி
''இவற்றைச் செய்பவர்களுக்கு அவர்களது மரண சமயத்தில் ஆன்ம இரட்சணியத்துக்குத் தேவையான எல்லா வரப்பிரசாதங்களையும் தந்து உதவி செய் வேன் என்று நான் வாக்களிக்கிறேன்" என்று தேவமாதா கூறினார்கள். இதுவே முதல் சனி பக்தியாகும்.
மரியாயின் மாசற்ற இருதய பரிகார பக்தியே இன்று பரிசுத்த திருச்சபையைக் காப்பாற்றும், அதுவே சகல தப்பறைகளையும் அழித்தொழிக்கும், ஆன்மாக்களை மனந் திருப்பி இரட்சிக்கும், பாவத்தால் வரும் சுத்திகரிப்பின் தண்டனையிலிருந்து ஆன்மாக் களைக் காப்பாற்றும், இந்தத் தண்டனையைக் குறைக்கும், ரஷ்யாவை மனந்திருப்பி உலக சமாதானத்தைக் கொண்டு வரும்.
மரியாயே வாழ்க!