அர்ச். சந்தியாகப்பர் பற்றி புதிய தொடர்
இவர் வாழ்க்கையில் நாம் பயணம் செய்யலாம் ஏன் நாம் சேசுவை அடைய இவர் வாழ்க்கையையே நம் பாதையாக்கலாம்.
சேசுவின் சீடர், அர்ச்.ஜேம்ஸ் என்றும் அர்ச்.ஜேக்கப் என்றும், அர்ச்.சந்தியாகப்பர் என்றும் அழைக்கப்படுபவர். இவர் பெரிய யாகப்பர். அருளப்பரின் (யோவான்) சகோதரர். செபதேயு, அர்ச். சலோமியின் தவப்புதல்வர். சேசுக்கு நெருக்கமானவர். தேவமாதாவின் மிகுந்த அன்பிற்குறியவர். முக்கிய மூன்று சீடர்களில் ஒருவர் ( அர்ச். இராயப்பர், அர்ச்.சந்தியாகப்பர்(யாக்கோபு) அர்ச்.அருளப்பர்). சேசுவின் மிக முக்கியமான புதுமைகள், முக்கியமான வேளைகளில் உடனிருந்தவர்களில் ஒருவர் அர்ச்.சந்தியாகப்பர் அவர் வாழ்க்கையில் நடந்த மிக முக்கியமான சம்பவங்கள், புதுமைகள், ஆச்சரியங்கள் அதுவும் அவரைப்பற்றி தெறியாத விசயங்கள் இந்த புதிய பகுதியில் வர இருக்கிறது.
அர்ச்.சந்தியாகப்பர் வாழ்க்கை வரலாற்றுப்பாதையில் அவரின் வீரமிக்க விசுவாச வாழ்க்கையை சிந்திக்க இருக்கின்ற நாம் அவர் துணையை வேண்டி அவரை போல சேசுவை பின் செல்ல அவர் துணையை மன்றாடுவோம்..
விரைவில் வர இருக்கிறோம் உங்களை சந்திக்க...