அர்ச்.லாரென்ஸ் யுஸ்தீனியன் : பூசையைப் போல மிக மேலான, கடவுளுக்கு மிகப்பிரியமான, நமக்கு மிகப் பயனுள்ள ஜெபமோ, நற்செயலோ உலகில் வேறு எதுவுமில்லை.
அர்ச்.அல்போண்ஸ் லிகோரியார் : பூசையைவிட அதிக பரிசுத்தமானதும், அதிக நல்லதும், அதிக மேலானதுமான எதையும் கடவுளால் கூட செய்யமுடியாது.
அர்ச். அக்குவினாஸ் தோமையார் : பூசை என்பது கல்வாரிப் பலியை விட எந்த விதத்திலும் குறைந்ததல்ல என்றும், அது பீடத்தின் மீது புதுப்பக்கப்டும் கல்வாரிப்பலியே என்றும், ஒவ்வொரு பூசையும் சிலுவைப் பலி தருகின்ற அதே நன்மைகளை மனிதர்களுக்கு கொண்டு வருகின்றது என்றும் நமக்கு கற்பிக்கிறார்.
புனித தந்தை பியோ: இந்த உலகம் சூரியன் இல்லாமல் கூட இருக்கும். ஆனால் திருப்பலி இல்லை என்றால் இந்த உலகமே இருக்காது.
அன்னை தெரசா: ஒரு முறை அன்னை தெரசா கடவுளில் ஆழ்தியானத்தில் இருக்கும்போது“ ஆண்டவரே உம்முடைய அளவில்லாத நன்மைத்தனத்திற்காக உமக்கு நன்றி சொல்ல வேண்டும்? எப்படி சொல்வது?” என்று கேட்ட்தற்கு ஆண்டவர் அளித்த பதில், “ ஒரு திருப்பலியில் பங்குகொள்”
ஒரு புனிதரின் அனுபவம் : கொலோனின் மேற்றிராணியாரான அர்ச். ஹேனான் என்பவர் ஒரு முறை பூசையின் தேவ வசீகரத்தின்போது வார்த்தைக்கெட்டாத பேரழகுள்ள ஒரு ஒளி உருண்டையையும், திரு இரத்தப் பார்த்திரத்தைச் சுற்றி ஒரு மிகப்பெரிய பிரகாசமான ஒளி வட்டத்தையும் கண்டார். அதன் பின் அவை திருப்பாத்திரத்தினுள் நுழைவதையும் கண்டார். இது அவரை எந்த அளவிற்கு ஒரு பரிசுத்தமான அச்சத்தால் நிரப்பியது என்றால், தொடர்ந்து பூசை வைக்க முடியாமல் அவர் பயத்தால் தடுமாறிப்போனார்.ஆனால் நம் மனித கண்களுக்கு தெறியாவிட்டாலும், இது ஒவ்வொரு உண்மையான பூசையிலும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது என்று கடவுள் அவருக்கு வெளிப்படுத்தினார்.
( சங்.பவுல் ஓ சலைவன், O.P அவர்கள் எழுதிய “ திவ்விய பலிபூசையின் அதிசயங்கள் “ என்ற நூலிலிருந்து )
ஆகவே, எவ்வளவு மேன்மைமிக்கது திருப்பலி. இறைவன் இயேசு நமக்காக பிரசன்னமாகும் இந்த தெய்வீக திருப்பலியில், ஒரு இதய தாகத்தோடு, விசுவாசத்தோடு, இயேசுவின் மீது முழு நம்பிக்கை வைத்து முழு பக்தியோடு பங்கு கொள்வாமா?
இயேசுவுக்கே புகழ் !! இயேசுவுக்கே நன்றி !! மரியே வாழ்க !!