பதிதர்களை நோக்கி....!
திருச்சபையின் அப்போதைய பாப்பரசராக 3-ம் இன்னோசென்ட் (1198-1216) பதவியில் இருந்தார். திருச்சபையின் வரலாற்றிலேயே மிக உன்னதமான நூற்றாண்டு என்று புகழ் பெற்ற அந்த 13-ம் நூற்றாண்டில் இந்தப் பாப்புவின் பங்கு மிகவும் பிரசித்தி பெற்றிருந்தது. அக்காலகட்டத்தில் தோன்றிய ஆல்பிஜென்ஸியம் - கத்தாரிஸம் போன்ற கொடிய பதிதங்களை அழிக்க மிகக் கடுமையான முயற்சிகளை பாப்பரசர் எடுத்திருந்தார். ''திருச்சபைக்குப் புறம்பே இரட்சணியமில்லை" என்ற வேத சத்தியத்தை நிலைநிறுத்திய மூன்று பாப்பரசர்களில் ஒருவராக அவர் திகழ்ந்தார். பிற்காலத்தில் 1215-ல் ரோமையில் லாத்தரன் பொதுச் சங்கத்தைக் கூட்டியவர் அவரே என்பதும், அர்ச். சாமிநாதர் தோற்றுவித்த போதகர்கள் சபையையும், அர்ச். பிரான்சிஸ் அசிசியாரின் பிரான்சிஸ்கன் சபையையும் அங்கீகரித்து ஆசீர்வதித்தார் என்பதும் வரலாறு!
ஓஸ்மாவின் பயணிகளை மிகுந்த அன்போடு வரவேற்றுப் பேசிய பாப்பரசர் அவர்களின் ஆன்ம தாகத்தையும், தப்பறைகளை அழிக்க நினைக்கும் ஆர்வத்தையும் கண்டு வியந்து பாராட்டினார். ஆனால் ஓஸ்மா ஆயர் தியாகோவின் ஆயர் பதவியைக் கைவிடும் எண்ணத்திற்கு மறுப்புத் தெரிவித்தார். ஏற்கெனவே "பதிதங்களை நசுக்கும் சம்மட்டி'' என்று தமது நடவடிக்கைகளால் பெயர் பெற்ற பாப்பரசர் இப்போது பதிதங்களுக்கு எதிராகப் போராடும் தமது விருப்பத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறாரே என்று வியந்த ஆயர், அதில் தேவ திருவுளத்தைக் கண்டார். தாழ்ச்சியோடு தமது எண்ணத்தை மாற்றிக் கொண்ட ஓஸ்மா ஆயரை அன்போடு ஆசீர்வதித்த பாப்பு, சர்வேசுரன் தந்த ஆயர் பொறுப்பை உதாசீனம் செய்ய வேண்டாம் ஸ்பெய்ன் தேச ஓஸ்மா மக்க ளுக்கு உங்களைப் போன்ற ஆன்ம தாகம் கொண்ட மேய்ப்பர் மிக அவசி யம் என்பதை எடுத்துக்கூறி, மீண்டும் தாயகம் திரும்பப் பணித்தார்.
ஆயரோடு வந்திருந்த ஓஸ்மா மேற்றிராசன கேனன் குழுக்களின் துணைத் தலைவரும் புகழ் பெற்ற ஸ்பானிய - காஸ்டிலிய குஸ்மான் பிரபுக் களின் குடும்பத்தவருமான சாமிநாதரைக் கண்ட பாப்பரசர் அரது எளிமையும், புனிதமு முள்ள தோற்றத்தைக் கண்டு வியந்தவராக வரவேற்றார். முதல் முறையாக கிறிஸ்துவின் பிரதிநிதியின் ஆசீரைப் பெற அவர் முன்பாக முழங்காலிட்ட சாமிநாதர், பிற்காலத்தில் தாம் ஸ்தாபிக்கப் போகும் போதக குருக்கள் சபைக்கு இதே பாப்பரசரின் உத்தரவைப் பெற வும், அவர் கூட்டவிருக்கும் லாத்தரன் பொதுச் சங்கத்தில் பங்கேற்கவும் உரோமைக்கு வருவோம் என்றெல்லாம் அப்போது சிறிதும் நினைக்கவில்லை. பாப்பரசரின் ஆசீரை அவர் தாழ்ச்சியோடு பெற்றுக்கொண்டார். பதிதங் களை நிர்மூலமாக்கும் தமது முயற்சிகளுக்குத் தேவ பராமரிப்பு இந்தப் புனித குருவைப் பயன்படுத்தவிருக்கிறது என்பதைப் பாப்பரச ரும் அறியவில்லை . ஆனாலும் சாமிநாதரின் ஆன்ம தாகம் கொண்ட கருத்துக்களையும், வேதாகமம் பற்றி அவரது ஆழமான அறிவை யும், விசுவாச உறுதியையும் அறிந்து கொண்ட பாப்பரசர் அவரது அனைத்து அலுவல்களை யும் தாம் ஆசீர்வதிப்பதாகக் கூறி, தமது ஆதர வைத் தெரிவித்தார். பாப்பரசரின் சந்திப்பு சாமிநாதருக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் உத்வேகத்தையும் அளித்தது. ஒரு வழியாகப் பயணக்குழு ரோமையை விட்டுப் புறப் பட்ட து.
அது 1205-ம் ஆண்டு. மார்ச் மாதமாதலால் பயணம் இனிமையாக இருந்தது. பாப்பரசரின் மறுப்பை எவ்வித வருத்தமோ, எதிர்ப்போ இன்றி ஏற்றுக்கொண்ட ஆயர் தியாகோவின் தாழ்ச்சியைக் கண்டு வியந்த சாமிநாதர் மிகுந்த உற்சாகத்தோடு பயணமானார். ஜீராவைக் கடந்து பர்கண்டி பகுதியில் பயணித்தபோது, ஆயர் தியாகோ அங்கே சற்றுத் தொலைவில் புகழ்பெற்ற சிஸ்டர்சியன் துறவற மடத்தின் சித்தோ பகுதியைப் பற்றி அறிய வந்தார். அர்ச். பெர்னார்டு வாழ்ந்த அந்த மடத்தின் புனிதத்தை ஏற்கெனவே கேள்விப்பட்டிருந்த ஆயர் அங்கு செல்ல விரும்பினார்.
சித்தோ மடம் 1098-ம் ஆண்டு மோல்சம் என்ற துறவற மடத்திலிருந்து பிரிந்து வந்த துறவியர் குழுவினரால் துவக்கப்பட்டது. கடினமான ஆசீர்வாதப்பர் சபை ஒழுங்குகளை அனுசரித்துப் புனிதம் பெற்ற அந்த மடத்தில் தான் அர்ச். பெர்னார்டு தமது சகோதரர் களோடு துறவறம் பூண்டார். பின்பு தேவ ஏவுத லால் 1115-ல் தமது க்ளேர்வோ மடத்தை ஸ்தாபித்தார் என்பது வரலாற்றுப் பதிவு!
சித்தோ துறவற மடத்தின் துறவிகள் சிஸ்டர்சியன் என்றும், ட்ராப்பிஸ்ட் துறவிகள் என்றும் அழைக்கப்பட்டனர். கடுமையான ஏகாந்த ஜெப தவ வாழ்வில் ஈடுபட்டிருக்கும் அவர்களைக் கண்ட ஆயர் தியாகோ பெரிதும் கவரப்பட்டார். எந்த அளவுக்கென்றால், ஏகாந்த தியான ஜெப வாழ்வை இயல்பாகவே நாடும் அவர், பாப்பரசரின் தடை இல்லை யென்றால் அந்தச் சபையில் உட்படவும் ஆசித் தார். ஓஸ்மா மேற்றிராசனமும் பாப்புவின் உத்தரவும் அவரைத் தடுத்து நிறுத்தியது. ஆனாலும் அந்தத் துறவிகளின் புனித உடையை அணிந்து கொண்டு, அவர்களது சபை ஒழுங்கு களை அனுசரிக்க விரும்பினார். அதற்காகச் சில துறவிகளைத் தம்மோடு ஓஸ்மாவுக்கு அழைத்துச் செல்ல முனைந்தார்.
சித்தோ மடம் ஆயர் தியாகோவின் ஆர்வத்தைக் கண்டு ஆச்சரியப்படவில்லை. ஏனெனில் சில ஆண்டுகளுக்கு முன் அரசியல் ரீதியாக நாடுகடத்தப்பட்ட இங்கிலாந்து நாட்டின் காண்டர்பரி மேற்றிராணியாரான அர்ச். காண்டர்பரி தாமஸ் சித்தோ மடத்தில் தங்கியபோது, அவர்களின் புனித வாழ்வால் ஈர்க்கப்பட்டவராக அத்துறவிகளின் துறவற ஆடையைத் தாமும் அணிந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு வழியாகப் பயணக்குழு சித்தோ மடத் திலிருந்து கிளம்பியது. அப்போது குழுவின் ரோடு சில சிஸ்டர்சியன் துறவியரும் ஓஸ்மா நோக்கிப் பயணித்தனர். எப்போதும் ஜெப தவ சிந்தனைகளிலேயே இருந்த சாமிநாதர் சித்தோ துறவியரின் முன்மாதிரிகையால் பயன் அடைந் தார் என்பதைச் சொல்லத் தேவையில்லை.
மோன்பெல்லியே சிறப்புக்கூட்டம் !
பயணக் கு ழு மோன் பெல்லியே (Monpellier) என்ற நகரில் தங்க நேரிட்ட து. அங்கு அச்சமயத்தில் பதிதங்களை முறியடிக்க பாப்பரசரால் நியமிக்கப்பட்ட மூன்று பிரதி நிதிகள் அடங்கிய குழுவினரின் சிறப்புக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்தக் குழுவின் தலைவராக சித்தோ மடாதி பதியான சங். அர் நால்டும், உறுப்பினர்களாக அச்சபையைச் சார்ந்த சங். ரூடோல்ஃப் மற்றும் சங். பீற்றர் தா காஸ்டலோவும் பாப்பரசரின் பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டிருந்தனர். கல்வியிலும், போதிக்கும் ஆற்றலிலும் பெயர் பெற்ற அவர்கள் பதிதர்கள் வாழும் பகுதி களுக்கு விஜயம் செய்து சத்தியங்களைப் போதிக்கும் பணிகளில் ஈடுபட்டனர். செல்லும் பகுதிகளிலுள்ள மேற்றிராசன் ஆயர் களையும், குருக்களையும், எல்லா தேவாலயங் களிலும், மக்கள் கூடும் இடங்களிலும் வேத சத்தியங்களைப் பிரசங்கம் செய்ய ஏற்பாடுகள் செய்தனர். பதிதர்களுடன் பேச்சு வார்த் தைகள் - - கலந்துரையாடல்கள் -- வாக்கு வாதங்கள் என இக்குழுவினர் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் விழலுக்கு இறைத்த நீர் போன்று பயன் தராமல் போயின. அதோடு பதிதர்களின் கேலி, கிண்டல்களுக்கும், அவதூறான பேச்சுகளுக்கும் கத்தோலிக்க ஆயர்களும் குருக்களும் ஆளானார்கள். அந்த அளவிற்குப் பல ஆண்டுகளாக ஆல்பிஜென் ஸியத் தப்பறை கத்தோலிக்க மக்களிடையே ஆழமாக வேரூன்றி விட்டிருந்தது. அதோடு பதிதப் போதகர்களின் கபடமான எளிய வாழ்க்கை முறைகள், போலியான தரித்திரத் தோற்றமும் விசுவாசிகளைக் கவர்ந்திருந்தது. அதே சமயம் கத்தோலிக்கப் போதகர்களின் ஆடம்பரமான வாழ்க்கை முறைகளும், தோற்றமும் அவர்களை முகஞ்சுளிக்கச் செய்தன. சுவிசேஷ தரித்திரத்துக்கு எதிரான அவர்களின் வாழ்வு, விசுவாசிகளிடையே வெறுப்பை ஏற்படுத்தின. இதனால் சத்திய கத்தோலிக்க போதகர்கள் அலட்சியம் செய்யப்பட்டனர். அவர்களின் போதனைகள் புறக்கணிக்கப்பட்டன! இப்படியாக, அவர் களின் முயற்சிகள் அனைத்தும் தோல்விகளே கண்டன. அதோடு ஆல்பிஜென்ஸியப் பதிதர்கள் அரசியல் ரீதியாகவும் வலுப் பெற்ற றிருந்தார்கள். புகழ் பெற்ற தூலூஸ் நகரின் பிரபுவான ரெய்மண்டின் ஆதரவும் பாதுகாப் பும் பதிதர்களுக்கு இருந்தது. அவரது அதிகார மையத்துக்கு முன்பாகக் கத்தோலிக்க ஆயர்கள், குருக்களின் செயல்பாடுகள் பயனற்றுப் போயிருந்தன. இதற்கிடையில் பாப்பரசர் தமது அதிருப்தியையும், வருத்தத் தையும் வெளியிட்டு மடல் ஒன்றைப் பிரதி நிதிகள் குழுவுக்கு அனுப்பியிருந்தார்.
இதனை ஒட்டியே பாப்புவின் பிரதிநிதிகள் குழு மோன்பெல்லியே நகரில் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டியிருந்தனர். அச்சமயத்தில் அந்நகருக்கு வந்திருந்த ஓஸ்மா பயணிகளைக் கேள்விப்பட்டு, தங்கள் சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்குமாறு ஆயர் தியாகோவுக்கும், சாமி நாதருக்கும் அழைப்பு விடுத்தனர். அவர்களது அழைப்பை ஏற்றுக்கொண்ட ஆயர் தியாகோ அங்கேயிருந்த ஆடம்பரங்களையும், கண்டு கலங்கினார்.
(சரித்திரம் விரியும்)
மரியாயே வாழ்க!