நம் பரிசுத்த தேவதாய் நல்லவர்கள் மற்றும் குற்றமற்றவர்களின் தாய் மட்டுமன்றி , மனம் வருந்த மனதாய் இருக்கும் பாவிகளுக்கும் தாய் .புனித ஏழாம் கிரகோரியார் , மெற்றில்டாஎன்ற இளவரசிக்கு , " இனி எப்பாவமும் செய்வதில்லை என்று தீர்மானித்துக் கொள் ; ஐயமேதுமின்றி , மாமரி உலகத்தாய் யாரையும் விட உன்னை நேசிக்க அதிகத்தயாராக இருப்பார்களென்று நாம் உனக்கு உறுதி கூறுகிறோம் " என்று எழுதினார் ." ஒரு தாயென நீங்கள் உங்களைக் காட்டுங்கள் " என்று ஒரு தடவை பாவி ஒருவன் தேவதாயிடம் கூறினான் . பரிசுத்த கன்னித்தாய் அவனுக்கு மறுமொழியாக , " நீ மகன் என்று காட்டு " என்றார்கள் .
வேறொருவன் தேவதாயை ' இரக்கத்தின் தாயே ' என்று வேண்டினான் . அதற்கு தேவதாய் " பாவிகளாகிய நீங்கள் , எம் உதவியை நாடும் போது எம்மை இரக்கத்தின் தாயே என்றழைக்கிறீர்கள் : ஆனால் அதே வேளையில் நம்மை வியாகுலத் தாயாகவும் கடும் துயரம் மிகுந்த அன்னையாகவும் ஆக்குவதை நிறுத்துவதில்லை" என்று மொழிந்தார்கள் ." தன் தாயை மனம் நோகச் செய்கிறவன் கடவுளால் சபிக்கப்பட்டவன்" என்ற சீராக் ஆகம ( 3 : 18 ) சொற்களை மேற்கோள் காட்டி , புனித லாரன்ஸ் சபை ரிச்சர்ட் , தாய் என்பது தேவதாய்க் கன்னிமாமரி என்கிறார் .
தம் நெறிகெட்ட வாழ்வாலும் , இன்னும் மேலாக , பாவத்தில் பிடிவாதமாக இருப்பதாலும் , இவ்வன்பு மிக்க தாயின் மனதைப் புண்படுத்துவோரைக் கடவுள் சபிக்கிறார் . பாவ நிலையில் இருந்து கொண்டு ,சொல்லப்படும் செபங்களும் செய்யப்படும் கிரியைகளும் பாவங்களே .புனித ஆன்செல்ம் " செபிக்கிறவனுடையசெபம் கேட்கப்பட தகுதியற்றதாயினும் , அவன் தனக்கு பரிந்துரைக்கும்படி வேண்டும் தேவதாயின் பேறுபலன்கள் பயனுள்ள வித்த்தில் பரிந்து பேசுகின்றன" என்றுரைக்கிறார். " தேவ அருளைப்பெற நீ அருகதையற்றவனாயிருந்தால் அது மாமரிக்கு முதலில் அளிக்கப்பட்டு , அவர்கள் மூலம் நீ பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது " என்று புனித பெர்நார்து சொல்கிறார்.
எனவே , இந்த நல்ல தாயின் பாதத்தில் வீழ்ந்து அவற்றை நாம் கட்டிப் பிடுப்போம் , அவர்கள் நம்மை ஆசீர்வதித்து ,நம்மைத் தம் பிள்ளைகளாக ஏற்றுக் கொள்ளும் வரை நாம் விலகாதிருப்போம்.