அன்பான நண்பர்களே ! வாசகர்களே ! நாங்கள் சமீபகாலமாக வெளியிடும் போஸ்ட்களை பார்த்திருப்பீர்கள். பாத்திமா செய்திகள், திருப்பலிப்பூசையின் அற்புதங்கள், என்னைப்படி அல்லது வருத்தப்படு மற்றும் மாதா பரிகார மலரிலிருந்து எடுக்கப்பட்ட பல பகுதிகளைப் பார்த்திருப்பீர்கள். இப்போதைய கத்தொலிக்க்க திருச்சபையிடமும், கத்தொலிக்க கிறிஸ்தவர்களிடமும் மாதாவின் எதிர்பார்ப்பும், வேண்டுதலும் அதுவே ; தூய தமதிருத்துவத்தின், மூவொரு கடவுளின் எதிர்ப்பார்பும் அதுவே.
அன்று அன்னை, சலேத் காட்சியில் அழுதுகொண்டு கேட்டதும், பாத்திமாக் காட்சியில் மிகவருத்தத்துடன் கேட்டதையும் நிறைவேற்றுவதே மாதா பிள்ளைகள் ஒவ்வொருவரின் ( பொது நிலையினர் மற்றும் துறவறத்தோர் ) கடமையாகும். அப்படி செய்தால் மூவொரு கடவுளின் கோபாக்கினையிலிருந்து இந்த உலகம் தப்பும். ஏற்கனவே அங்கொன்றும், இங்கொன்றுமாக அழிவுகள் ஆரம்பாமாகிவிட்டன. அது மேலும் தொடராமல் தடுப்பது ஒவ்வொரு கிறிஸ்தவனின், கிறிஸ்தவளின் கடமை.
இப்போதுதெல்லாம் நிறைய இடங்களில் சாத்தானின் சூழ்ச்சிகள் வெற்றி பெறுகின்றன. கத்தொலிக்கத்தை பலவீனப்படுத்தும் அவன் வெற்றியே இதற்கு காரணம். அவன் வெற்றி பெறக்காரணம் நம் அறியாமை.
அவம் சூழ்ச்சிகள், கன்னிகள் எங்கு, எப்படி இருக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ளமலோ அல்லது கண்டும் காணாமலோ இருப்பதுதான் காரணம்.
சாத்தானின் சூழ்ச்சிகள் முறியடிக்கப்பட நிறைய ஜெபங்கள் தவங்கள், பரிகாரங்கள் தேவை. அதைப்போல சாத்தானின் சூழ்ச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டால்தான் அதை முறியடிக்க முடியும். அதைக்கண்டுபிடிப்பதற்கு நமக்கு சில புத்தங்கள், மாத இதழ்கள் தேவைப்படுகின்றன.
பாத்திமா செய்திகள், சலேத் மாதா காட்சிகள் போன்ற புத்தகங்கள் எங்கு கிடைத்தாலும் வாங்கி படியுங்கள். படிப்பதோடு நிறுத்தாமல் உடனடியாக ஜெபிக்க ஆரம்பித்துவிடுங்கள். கிறிஸ்தவர்கள் விமர்சகர்கள் அல்ல. கேலி பேசுபவர்கள் அல்ல .மாறாக ஜெபிப்பவர்கள் இதைத்தான் இயேசுவின் திவ்ய இருதயமும், மாதாவின் மாசில்லா இருதயமும் நம்மிடம் எதிர்பார்க்கின்றன.
இவர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்வதும் அதற்காக பாடுபடுவதும் கத்தொலிக்த்தின், கிறிஸ்தவர்களின் கடமை.
முதலில் நல்ல ஞான புத்தகங்களை வாசிப்போம். அதன் கருத்துக்களை மற்றவர்களுக்கும் எடுத்துச்சொல்லுவோம். இதன் மூலமாக சிறிய நற்செய்திப்பணி ஆற்றுவோம். ஞானப் புத்தங்கள் வாங்க விரும்பினால் கீழே கண்ட முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.
(கடவுள்- மனிதன் காவியம் (தமிழ்), மேலே குறிப்பிட்ட புத்தங்கள் முதல் தினசரி ஜெபப்புத்தகங்கள் வரை கிடைக்கும்; தபாலிலும் கிடைக்கும், மாதா பரிகார மலர் ஒவ்வொரு கத்தொலிக்கரும் படிக்க வேண்டிய இதழ்)
இயேசுவுக்கே புகழ் ! இயேசுவுக்கே நன்றி ! மரியே வாழ்க !