முத். கிரான்டாவின் லூயிஸ் எழுதிய "பாவியின் வழிகாட்டி' என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டது.
கடவுள் தம் மகிமையை வெளிப்படுத்தும் படி மோட்சத்தைப் படைத்தார். ''சர்வேசுரன் சகலத்தையும் தமக்காகவே சிருஷ்டித்தார்'' (பழ. 16:4) எனினும், மோட்சத்தில்தான் அவரது மகிமையும், வல்லமையும் முழுமையாக சுடர்வீசுகின்றன.
அசுவோருஸ் என்ற பேரரசன் ஒரு பெரிய விருந்து கொடுத்தான். இது 180 நாட்கள் நீடித்தது. பிரபஞ்சத்தின் பேரரசரும் ஓர் அதியற்புதமான விருந்து தருவதில் பிரியங் கொள்கிறார். இவ்விருந்து 180 நாட்கள் மட்டுமல்ல, நித்தியத்திற்கும் தொடர்கிறது, தமது அபரிமிதமான தாராளம், வல்லமை, செல்வ வளங்கள், நன்மைத்தனத்தின் மகா உந்தச் சிறப்பை வெளிப்படுத்தும்படியாக சர்வேசுரன் இப்படி விருந்து கொடுக்கிறார்.
சேனைகளின் ஆண்டவர் இந்த மலை மீது சகல பிரஜைகளுக்கும் மாமிச பதார்த்த விருந்தையும், திராட்சை இரசத்துடையவும், கொழுத்த மாமிசத்துடையவும், தெளிந்த இரசத்துடையவும் விருந்தையும் நடத்துவார் என்று இசையாஸ் கூறுகிறார் (25:6). அவர் தெரிந்து கொள்ளப் பட்டவர்கள் மீது மோட்ச இராச்சியத்தின் செல்வ வளங்கள் அனைத்தையும் வெகு தாராளமாகப் பொழிந்து, வாக்குக் கெட்டாத பேரின்பங்களால் அவர்களை பூரண திருப்தி கொள்ளச் செய்வார்.
தேவ வல்லமை எவ்வளவு உயர்ந்தது என்றால், ஒரே வார்த்தையால் இந்தப் பரந்த பிரபஞ்சத்தை அவர் படைத்தார். அவரது சித்தத்தின் ஒரு அசைவு நம் உலகத்தைப் போல் அழகுள்ள இன்னும் கோடானு கோடி உலகங் களை சிருஷ்டிக்கப் போதுமானது.
மேலும், அவரது வல்லமை எந்த முயற்சியோ, கடின உழைப்போ இன்றி செயல்படுத்தப்படும் கிறது; மிகச் சிறிய பூச்சியை சிருஷ்டிப்பது எவ்வளவு எளிதோ, அவ்வாறே பக்திச்சுவாக ரைச் சிருஷ்டிப்பதும் அவருக்கு எளிது. அவர் சித்தங்கொள்வதே செய்து முடிப்பதாகவும் இருக்கிறது. ஆகவே, தமது இராச்சியத்திற்கு நம்மை அழைக்கிற இந்த அரசரின் வல்லமை எவ்வளவோ உயர்ந்தது; அவரது திருநாமத்தின் மகிமையும், அதை வெளிப்படுத்தவும், அறிவிக் கவும் அவருக்குள்ள ஆசையும் கூட இவ்வளவு உயர்ந்ததாக இருக்கிறது என்றால், தம் தேவ மாட்சிமையை அதன் முழுமையில் நமக்குக் காண்பிக்க அவர் சித்தங்கொள்கிற பரலோக வாசஸ்தலத்தின் உன்னத மகத்துவம் எத்தகைய தாக இருக்க வேண்டும்! அதன் பூரணத்துவத்தின் எதுவும் குறைவுபட முடி யாது, பிதாவின் சர்வவல்லப் மும், சுதனின் அளவற்ற ஞானமும், இஸ்பிரீத்து சாந்துவின் வற்றாத நன்மைத் தனமும் இணைந்து உருவாக்கிய அந்த சிருஷ்டிப்பின் அழகு எத்தகையதாக இருக்க வேண்டும்!
மேலும், அவர் இந்த மகத்துவத்தையெல் லாம் தம் மகிமைக்காக மட்டுமல்ல, தமது தெரிந்து கொள்ளப்பட்டவர்களின் மகிமைக் காகவுமே உண்டாக்கியிருக்கிறார். "நம்மை மகிமைப்படுத்துபவனை நாமும் மகிமைப் படுத்துவோம்' (1 அரசர். 2 : 30). "'சகலத்தையும் அவனது பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர்" என்கிறார் தாவீது (சங். 8:8). இது வியத்தகு விதத்தில் அர்ச்சியசிஷ்டவர்களில் எண்பிக்கப் படுவதை நாம் காண்கிறோம். ஜோசுவாவின் வார்த்தை சூரியனை அசையாமல் நிறுத்தி வைக்கிறது. இதன் மூலம் "கர்த்தர் ஒரு மனிதனின் சொல்லுக்கு அடங்கினார்'' (ஜோசுவா. 10:14). சூரியன் தன் பாதையில் பத்துப் பாகை முன்னே செல்ல வேண்டுமா, பின்னே செல்ல வேண்டுமா என்பதை எசேக்கியாஸே தேர்வு செய்யும்படி இசையாஸ் கூறினார் (4 அரசர். 20:9). சிறிது காலம் மழை பெய்யாதிருக்கும்படி எலியாஸ் வானங்களை அடைத்து விட்டார்! எலிசேயுவின் கல்லறைக்குள் வீசப்பட்ட ஒரு பிரேதம் அவரது எலும்புகள் பட்டவுடன் உயிர் பெற்றது (4 அரசர்). அர்ச். கிளமெண்ட் வேதசாட்சியாய் மரித்த அன்று, அவரது சரீரத்தை வணங்கும்படி மக்கள் செல்வதற்காக, கடல் மூன்று மைல் தூரம் திறந்து அவர்களுக்கு வழிவிட்டது.
துன்பங்களுக்கும், கடின உழைப்பிற்குமுரிய தாக மட்டுமே இருக்கிற இந்த பூமியின் மீதே கடவுள் தமது அர்ச்சியசிஷ்டவர்களை இப்படி மகிமைப்படுத்தப் பிரியங்கொள்கிறார் என்றால், தமது இராச்சியத்தின் அர்ச்சியசிஷ்டவர்களுக் கென்று அவர் ஏற்பாடு செய்துள்ள மகிமையை
சர்வேசுரன் நித்திய பேரின்பத்தை நமக்குப் பெற்றுத் தரும்படி தர வேண்டியிருந்த விலை, இந்த நித்திய பேரின்பத்தை ஓரளவு புரிந்து கொள்ள நமக்கு உதவும் மற்றொரு சிந்தனை யாகும். பாவத்தால் மோட்ச பாக்கியத்தை நாம் இழந்து போனபின், சர்வேசுரன், தமது திருச் சுதனின் மகா பரிசுத்த இரத்தத்தை விலையாகத் தந்துதான், பரிசுத்தமும் பாக்கியமுமுள்ள அந்தஸ்தில் நம்மை மீண்டும் ஸ்தாபித்தார். நாம் பரலோக சேனைகளின் மகிழ்ச்சியில் பங்கு பெறுமாறு, அவர் இரு கள்ளர்களுக்கு நடுவே கழுமரத்தில் தொங்கி மரிக்கும் அவமானத்தைத் தம்மீது சுமந்து கொண்டார்.
விலையைப் பொறுத்துத்தான் பொருளின் மதிப்பு. பரலோகப் பேரின்பத்தை நமக்குப் பெற்றுத் தருவதற்கு விலையாகவே நம் ஆண்ட வர் தமது கொடிய பாடுகள் அனைத்தையும் அனுபவித்து மரித்தார் என்னும்போது, அந்தப் பரலோகப் பேரின்பத்தைப் போதிய அளவு மதிப்பிட யாரால் முடியும்? ஆனால் இத்துடன் அவர் நிறுத்திக் கொள்ளவில்லை, மாறாக, இந்தப் பேரின்பத்தைப் பெற்றுக் கொள்ள நாமும் கூட நம்மால் முடிந்ததையெல்லாம் செய்ய வேண்டுமென்று அவர் கேட்கிறார். நம் சிலுவையைச் சுமந்து கொண்டு அவரைப் பின் செல்ல வேண்டுமென்று அவர் கூறுகிறார். இந்தக் கட்டளைக்கு நாம் பிரமாணிக்கத் தோடு கீழ்ப்படிந்த பிறகும், நமக்கு நித்திய சம்பாவனையளிக்கிற இந்த அரசர், பரலோகப் பேரின்பம் தமது இலவசக் கொடை என்கிறார்: "நானே ஆல்பாவும், ஒமேகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன்; தாகமாயிருக் கிறவனுக்கு ஜீவிய நீரூற்றில் இலவசமாய்க் குடிக்கத் தருவேன்" (காட்சி. 21:6).
அழியக்கூடிய சிருஷ்டிகள் வாழ்கிற இந்த மரண நாடும் கூட இவ்வளவு அழகாகவும், உத்தமமாகவும் காணப்படுகிறது என்றால், நித்தியத்திற்கும் வாழ்வோரைத் தன் பிரஜைக ளாகக் கொண்டுள்ள அந்தப் பரலோக தேசத் தின் மகத்துவப் பேரொளியும், அதியுன்னத உயர்வும் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்!
வான விதானம், சூரியனின் பேரொளி , நிலவு, நட்சத்திரங்களின் தண்ணொளி, பறவை களின் இறகுகளின் வகைவகையான நிறங்களின் அழகு, மலைகள், பள்ளத்தாக்குகளின் அழகு, மாபெரும் ஆறுகள், கடலின் அகன்ற பரப்பு, அது மறைத்து வைத்துள்ள அற்புதங்கள், ஆழமான ஏரிகள், மலர்களால் அலங்கரிக்கப் பட்ட வயல்களின் அழகு என, இந்தக் கண்ணீர்க் கணவாயிலேயே இவ்வளவு அழகைக் நம்மால் காண முடிகிறதென்றால், நித்திய இளைப் பாற்றியின் ஸ்தலத்தைப் பற்றி என்ன சொல்வது?!
பரலோக தேசத்தின் மகா மேன்மைக்கும், அளவற்ற மகத்துவத்திற்கும் இன்னுமொரு பலமான சாட்சியம் : இந்த இரு நாடுகளிலும் வாழ்வோரை ஒப்பிட்டுப் பார்த்தல். இந்த பூமி மரண தேசம், பாவிகளின் நிலம், தவத்தின் ஸ்தலம், போராட்டக்களம். பரலோகமோ அழியாமை யின் நாடு, நீதிமான்களின் வாசஸ்தலம், வெற்றி பெற்றவனின் சிங்காசனம், கடவுளின் திருநகரம்
அர்ச்சியசிஷ்டவர்களின் இந்த இரண்டாந் தர மகிமைகளுக்கு மிக மேலான ஓர் ஒப்பற்ற மகிமையை வேதசாஸ்திரிகள் மோட்சத்தின் அடிப்படையான மகிமை என்றழைக்கிறார்கள். இது கடவுளையே முகமுகமாய்த் தரிசிப்பதும், அவரைச் சொந்தமாகக் கொண்டிருப்பதுமான மகிமையாகும். ஏனெனில் புண்ணியத்தின் சம்பாவனை சகல புண்ணியங்களின் கர்த்தரா யிருக்கிற சர்வேசுரனேதான் என்று அர்ச். அகுஸ்தீனார் கூறுகிறார். நாம் அவரை நித்தியத் திற்கும் எந்தச் சோர்வுமின்றி, கண்டு தியானித்துக் கொண்டும், நேசித்துக்கொண்டும், ஸ்துதித்துக் கொண்டுமிருப்போம் (City of God, 22, 30). சகல அழகு மற்றும் உத்தமத்னத்தின் ஆதார மாகிய கடவுளே இந்த சம்பாவனை. மோட்ச வாசிகள், அவரவர் இவ்வுலகில் சம்பாதித்துக் கொண்ட தகுதிக்கு ஏற்றபடி, அவரில் சகல நன்மைகளையும் அனுபவித்து மகிழ்வார்கள்.
ஆகவே, கடவுளே நம் பேரின்பமும், நம் சகல ஆசைகளின் நிறைவேற்றமுமாக இருப்பார். அவரில் சகல சிருஷ்டிகளின் உத்தமதனங்கள் உயர்த்தப்பட்டும், மறுரூபமடைந்தும் இருப் பதை நாம் காண்போம். புலன்களுக்கு மகிழ்ச்சி யூட்டி, ஆத்துமத்தைப் பரவசப்படுத்தும் அனைத்தும் பரலோகத்தில் நம்முடையனவாக இருக்கும் 'கடவுளில் நம் புத்திகள் பூரண ஒளி யால் நிரப்பப்படும்; நம் சித்தங்கள் சமாதானத் தின் அபரிமிதத்தால் நிரப்பப்படும்; நம் நினை வுகள் நித்தியத்தின் மகிழ்ச்சிகளால் நிரப்பப் படும். சகல பூரணத்துவத்தின் இந்த வாசஸ் தலத்தில், சாலமோனின் ஞானம் அறியாமை யாகவும், அப்சலோமின் அழகு உருச்சிதைவாகவும், சம்சோனின் பலம் பலவீனமாகவும், மத்துலாவின் வாழ்நாள் (ஆதி. 5:27 - 969 வருடங்கள்) குறுகியதும், அழிவுக்குரியதுமாகவும், அரசர்களின் செல்வப் பெருக்கு, அதீத தரித்திரமாகத் தோன்றும்" என்கிறார் அர்ச். பெர்னாந்து.
ஓ மனிதா, வற்றாத பொக்கிஷங்களும் நித்திய ஜீவியத்திலிருந்து பொங்கி வரும் ஜீவ நீரூற்றும் உனக்காக மோட்சத்தில் காத்துக் கொண்டிருக்க, நீ ஏன் எகிப்தின் வைக்கோலைத் தேடுகிறாய்? ஏன் கழிவுநீர்க் குட்டையின் கலங்கிய நீரைக் குடிக்கிறாய்? ஏன் சிருஷ்டிகளிடமிருந்து வீணான , புலனின்பங்களைத் தேடுகிறாய்?
மேலும் மோட்சம் தேவ அழகையும், சகல சிருஷ்டிகளின் அழகுகளின் சாராம்சத்தையும் தன்னுள் கொண்டுள்ள மகா பரிசுத்த தேவ தாயாரின் திருமடியாக இருக்கிறது. அங்கே ஆன்மாக்கள் தேவதாயாரின் உத்தமத் தாய்மை யில் மகிழ்ந்திருக்கிறார்கள், அவர்களது தெய்வீக அழகு அவர்களைப் பரவசப்படுத்துகிறது. மேலும், சம்மனசுக்களின் நட்புறவில், அவர் களது பேரழகைக் கண்டு மகிழ்ந்தபடியும் அர்ச்சியசிஷ்டவர்கள், பிதாப்பிதாக்கள், தீர்க்க தரிசிகள், வேதசாட்சிகள், ஸ்துதியர்கள், கன்னியர்கள் ஆகியோரின் தோழமையை அனுபவித்து மகிழ்வாய்.
ஆயினும், மோட்சத்தின் மையமாயிருந்து ஆட்சிபுரியும் தெய்வீகப் பேரரசரின் அழகை யும், மகத்துவத்தையும் எந்த நாவால் தான் விவரிக்க முடியும்? அவரது தரிசனமே ஆன்மா வின் பூரண இன்பங்களின் நிறைவாக இருக்கும்.
உண்மை இப்படியிருக்க, நித்தியத்திற்கும் இந்தப் பேரின்பங்களைச் சொந்தமாகக் கொண் டிருக்கும் மகிழ்ச்சியைப் பற்றி நாம் என்ன சொல்வோம்? பரலோகக் குரல்களின் மனதைக் கொள்ளை கொள்ளும் உன்னத மனோகரமான இனிமையைக் கற்பனை செய்து பார். இந்தக் குரல்களின் அற்புதமான இனிமையே இவ்வளவு மகிழ்ச்சியை நமக்குத் தரும் என்றால், ஆத்து மத்திற்கும், சரீரத்திற்குமிடையே நிகழவிருக் கும் ஐக்கியத்தால் நாம் எப்படி அகமகிழ்ந்து அக்களிப்போம்! அரசர்க்கரசரின் திருப்பந்தி யில் அமர்ந்திருப்பதும், அவரது மகிமையில் பங்கடைவதும் சிருஷ்டிக்கு எத்தகைய மகிமை! ஓ மாறாத பேரின்பமே! ஓ மனமயக்கும் பரலோக இசையே! ஓ! பரலோக இன்பத்தின் தாரைகளே, இவ்வுலகில் இப்போது உழைத்துக் கொண்டும், போராடிக்கொண்டும் இருப்பவர்களின் மனங்களில் நீங்கள் ஏன் எப்போதும் தங்கியிருப்பதில்லை?
மரியாயே வாழ்க!