''நீயாவது எனக்கு ஆறுதல் அளிக்க மாட்டாயா?''
நமதாண்டவர் 1675-ம் ஆண்டில் அர்ச். மர்கரீத் மரியம்மாளுக்குக் காட்சி கொடுத்து ''மனிதர்களை அளவற்ற விதமாய் நேசிக்கும் என் இருதயத்தைப் பார். தனக்கென ஒன்றும் வைக்காது தன்னையே வெறுமையாக்கிய இருதயம்; தன் அன்பை வெளிப்படுத்த உயிரையே அர்ப்பணித்த இருதயம்; அதற்குக் கைம்மாறாகக் கிடைப்பது என்ன? பெரும்பாலும் நன்றி கெட்டதனமும் நிந்தை அவமானமும், தேவதுரோகமுமே. எனக்கென தங்களை நேர்ந்து கொண்டவர்களே (குருக்கள், துறவியர், கன்னியர்) இவ்வாறு துன்பம் தருகின்றனர் என்பதே என் இருதயத்திற்கு மிகுதியான வேதனை தருகிறது. இந்த நன்றி கெட்டதனத்திற்கு நீயாவது பரிகாரம் செய்ய மட்டாயா?'' என்று ஏக்கத் தோடு கேட்டார்.
கடவுள் நம் தந்தை ; ஆனால் நம் பாவங்களால் அவர் துயரப்படுகிறார் என்பது நம்மில் பலருக்குத் தெரியாது. கடவுள் நமக்குக் கட்டளைகளை ஏற்படுத்தி யிருக்கிறார் என்று தெரியும்; ஆனால் அவற்றைக் கண்டு கொள்ளாமல் அலட்சியப் படுத்துகிறோம் என்பதை நாம் உணர்வதில்லை.
நமதாண்டவர் அர்ச் மர்கரீத் மரியம்மாளிடம் மட்டுமல்ல, நம் ஒவ்வொருவரிடமுமே கேட்கி றார். சிநேகத்தை சிநேகிப்பாரில்லை. சேசுவே நம் நேசம். இவ்வுலகின் எந்தப் பொருளையும், ஆளையும் விட அவரே நேசிக்கவும், மதிக்கவும் தகுதியுள்ளவராயிருக்கிறார். அவரே தொடக்க மும் முடிவுமாக இருக்கிறார். அவரே எல்லாவற்றின் மீதும் அதிகாரமுள்ளவராயிருக்கிறார். அவரே நம் இரட்சகராகவும், தந்தையாகவும், ஞானஸ்நானம் பெற்ற நம் ஒவ்வொருவருக்கும் சகோதரராகவும் இருக் கிறார். இப்படிப்பட்டவரை நேசிப்பதில் நமக்கு என்ன தயக்கம் இருக்க முடியும்?
எப்படி நேசிப்பது?
அர்ச். அருளப்பர் சுவிசேஷத்தில் என்னை நேசிக்கிறவன் என் கட்டளைகளை அனுசரிப்பான்' என்று அவரே கூறுகிறார். சேசுவை நேசிப்பவர்கள் சுவிசேஷ போதனைகளையும் (தரித்திரம், தாழ்ச்சி, கற்பு, கீழ்ப்படிதல்), பத்துக் கற்பனைகள், திருச்சபைக் கட்டளைகள் இவற்றை அனுசரிப்பதன் மூலம் தம்மை நேசிக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டுகிறார். நாம் இதைச் செய்யாத தாலும், அனுதினமும் திவ்ய நற்கருணையில் அவரைச் சந்தித்து உறவாடவராத்தாலும், அவரது கல்வாரி அன்பை மறந்ததாலும் அவரே மோட்ச வழி என்பதை நாம் மறந்த தாலும் துயரத்தோடு நம் அன்பைக் கேட்கிறார். இந்த தேவசிநேக வரத்தை தேவ திரவிய அனுமானங்களின் வழியே, குறிப்பாக, நற்கரு ணையில் தம்மையே தருவதன் மூலம் நமக்குத் தரு கிறார். அவரது அன்பு கடலினும் ஆழமானது, அதன் பரப்பிலும் விரிவானது, மோட்சத்திற் கும் பூமிக்கும் உள்ள தூரத்தைவிட மேலானது. இத்தகைய நம் தந்தையான ஆண்டவரை நேசிக்க நமக்குத் தடையாயிருப்பது எது? ஏன் அவரிடம் மிருந்து விலகிச் செல்கிறோம்? சிந்திப்போம்.
இந்த அன்பரை நேசிப்பதற்காகத்தானே ஆதித் திருச்சபையில் எண்ணற்ற வேதசாட்சிகள் தங்கள் உயிரைக் கொடுத்தார்கள் அவருக்காகத்தானே துறவறத்தார் தங்கள் நாடு, வீடு , பெற் றோர், உறவினர் எல்லோரையும் விட்டு மடங் களில் தங்கள் வாழ்வைக் கழித்தார்கள்! இன்றைய காலம் வரை குருக்கள், கன்னியர், துறவியர் ஆண்டவரின் அன்பிற்காகவே உலக வாழ்வைத் துறந்து துறவற வாழ்வைத் தெரிந்துகொள்கிறார்கள்.
எனவே தலை வெள்ளி பக்தியை அனுசரித்து சேசுவின் திரு இருதயத்தை நேசிக்காதவர்களுக் கும் சேர்த்து நாம் அவரை நேசிப்போம். தலை வெள்ளியில் மட்டுமின்றி, நம் வாழ்நாள் முழுவ துமே அவரை நேசித்து, அவரை நோகச் செய்யும் நம் பாவங்களுக்கும், பிறர் பாவங்களுக்கும், இவற்றால் அவருக்கு ஏற்படும் நிந்தை அவமானங் களுக்கும் பரிகாரம் செய்யும் கருத்துடன் முடிந்த வரை அடிக்கடி பூசை கண்டு நன்மை வாங்கி, அவருக்கு ஆறுதல் தர இப்புது வருடத்திலிருந் தாவது நாம் அனைவரும் முன்வருவோமாக!
உலக மனிதர்களாலும், தேவ ஊழியர்களாலும் அவருக்குச் செய்யப்படும் நிந்தை அவமானங் களுக்குப் பரிகாரம் செய்வோமாக!
தலை வெள்ளி பக்தியை அனுசரிப்பவர் களுக்கு நமதாண்டவர் 12 வாக்குறுதிகளை அளித்திருக்கிறார். அதில் ஒன்று, "தொடர்ந்து ஒன்பது மாதங்களின் முதல் வெள்ளிக்கிழமைகளில் விடாமல் திவ்ய நன்மை வாங்குபவர்கள் சாகும்போது பாவத்துக்கு மனஸ்தாபப்பட்டு சாகும் வரத்தை அளவில்லாத வல்லமையுள்ள நம் இருதயத்தின் சிநேகம் கொடுக்கும் என்று அவ்விருதயத்திலுள்ள இரக்க மிகுதியால் வார்த்தைப்பாடு கொடுக்கிறோம். இப்படிச் செய்பவர்கள் நமது சத்துருக்களாகவோ, தேவத்திரவிய அனுமானங்கள் (திருவருட்சாதனங்கள்) இன்றியோ சாகவே மாட்டார்கள். அவர்கள் சாகும் வேளையில் நமது இருதயம் அவர்களுக்கு நிச்சயமான அடைக்கலமாய் இருக்கும்' என்பதாகும்.