மாதாவின் வணக்கமாத சிந்தனைகள் - 10 : மீண்டும் குருக்களின் பாதுகாவலர் புனித ஜான் மரிய வியான்னி… ( தேவ அழைத்தல் )
ஜான் மரிய வியான்னிக்கு லத்தீன் வராது… அவரது ஆசிரியர்களின் முடிவு,..
“ சுட்டெரித்தாலும் இலத்தீன் மொழியை வியான்னியால் கற்றுக்கொள்ள முடியாது. எனவே குருத்துவப்பயிற்சி பெற தகுதியில்லை “ எதிர்வரும் பருவத்தேர்வில் தோல்வி நிச்சயம் என்று உணர்ந்த ஆசிரியர்கள் வியான்னியை வீட்டிற்கு அனுப்பி விட்டார்கள்.
குருமடத்திலிருந்து நேரே தனக்கு பயிற்சி அளித்த பால்லி என்னும் புனித குருவிடம் சென்றார். “ குருத்துவ வாழ்விற்கு “ கடவுள் அழைப்பதை தெளிவாய் தெளிவாய் மீண்டும் உணர்ந்தார். தொடர்ந்து மூன்று மாதங்கள் புனித குரு பால்லியிடம் தனிப்பயிற்சி பெற்றார். ( ஏனெனில் இவர் ஒரு இறையியலார்…
மீண்டும் இண்டெர்வியூ :
கேள்வி : இலத்தீனில்
பதில் : தெளிவற்ற… குழம்பிய
முடிவு : திருப்தியில்லை..
மீண்டும் தோல்வி….
மீண்டும் ஒரு வாய்ப்பு புனித குரு பால்லியுடன் மறைமாவட்ட முதன்மை குருவின் முன்னால்…
வியான்னி இறைப்பற்று உள்ளவரா?
மரியாயின் மீது பக்தி உண்டா ?
ஜெபமாலை ஜெபிக்கத் தெரியுமா ?
மூன்று கேள்விகளுக்கும் பதில் ( பால்லி ) : ஆம்…
இறைப்பற்றுக்கு இவர் ஒரு முன்மாதிரி…
தீர்ப்பு : இறைப்பற்றுக்கே முன்மாதிரி எனில் குருத்துவத்திற்கு இவரை நான் அழைக்கிறேன். மற்றதை இறையருள் நிறைவேற்றும்…
இறைப்பற்றும், மாதாவின் மீது அவர் வைத்த பக்தியும், ஜெபமாலையும் சேர்ந்து புனித ஜான் மரிய வியான்னியை குருவாக்கியது…
புனித வாழ்வின் போராட்டத்திற்கான சக்தியை புனிதர் திவ்ய நற்கருணைப் பிரசன்னத்தில் பெற்றுக்கொண்டார். புனிதரின் வாழ்வு வாழும் கடவுளுக்கு சாட்சியம் தந்தது.
“ கடவுள் எங்கும் இருக்கிறார் எனில் கோவிலில் ஜெபித்தால்தான் ஜெபமா “ என்று சிலர் கேட்பதுண்டு. கேள்வியில் அர்த்தம் உள்ளது. நாம் செல்லும் இடமெல்லாம் கடவுளைக் கொண்டு செல்லும் ஆலயமாக மாற வேண்டும்.
“ ஆலயத்தில் திவ்ய நற்கருணைப் பிரசன்னத்தில் செய்யும் ஜெபமே மிக உயர்ந்தது “ என்பார் புனித ஜான் மரியவியான்னி.
விளைவு! ஆர்ஸ் பங்குக்கோவிலில் காலை முதல் மாலை வரை தொடர்ந்து மக்கள் ஜெபித்துக்கொண்டே இருந்தனர்.
“ அடிக்கடி நற்கருணை உட்கொள்ளும் பழக்கம் “ பிரான்ஸ் நாடு அறியா முன்னரே, ஆண்டவரை தகுந்த தயாரிப்போடு உட்கொள்ள ஊக்குவித்தவர் நம் புனிதர்.
புனித வியான்னி அடிக்கடி கூறும் ஒரு நிகழ்ச்சி :
அப்பங்கில் ஒருவர் சமீபத்தில் இறந்தார். அவர் உயிருடன் இருந்த போது தனது இறை நம்பிக்கையில் எவ்வித ஆர்ப்பாட்டமுமில்லாமல் வாழ்ந்து வந்தார்.. ஒவ்வொரு நாளும் வயலுக்குச் செல்லும் முன் நற்கருணை ஆண்டவரை சந்தித்துவிட்டுச் செல்வார். ஒரு நாள் காலையில் ஆலயம் நுழைந்தவர் அங்கேயே தங்கிவிட்டார். வழக்கமாக வயலில் உடன் வேலை செய்பவர் அன்று அவரைக் காணததால் மாலையில் வீடு திரும்புகையில் அவர் ஒரு வேளை ஆலயத்தில் இருக்கலாம் எனக்கருதி உள்ளே நுழைந்தார்.
அங்கே அவரைக்கண்டு,
“ இத்தனை நேரம் இங்கே என்ன செய்கிறாய் “ எனக் கேட்க,
“ நல்ல சர்வேசுவரனை நான் பார்க்கிறேன் அவரும் என்னைப் பார்க்கிறார் “ என பதில் தந்தார்.
புனித வியான்னி புது நன்மைக்கு சிறுவர்-சிறுமியரைத் தயாரித்தார். பரிசுகள் கொடுத்து அவர்களை ஊக்குவித்தார், உதவிக்குரு நியமிக்கப்பட்டது வரை 27 வருடங்கள் தானே மறைக்கல்வி போதித்தார்..
ஜெபமாலை பக்தியைத் தூண்டுவார். தன் பையில் நிறைய ஜெபமாலைகள் வைத்திருப்பார். திறமையாக பேசும் கலையைக் கற்காத புனிதர் மிக மிக வெற்றிகரமாகப் போதிப்பார்..
அவர் போதனைகள் சில :
“ உணவு, தண்ணீர், தூக்கம் இவற்றைக் குறைப்பதால் பேயையும் மிரட்டலாம்; கடவுளையும் திருப்திப்படுத்தலாம். தேவையானதெல்லாம் கடவுளிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம் “
“ விருப்பத்துடன் துன்பத்தை ஏற்றுக்கொண்டால், அது துன்பமாக தோன்றாது. துன்பத்தை விட்டு விலகி ஓடினால், அதன் சுமை வெகுவாக அழுத்தும். சிலுவையை நேசிக்க ஜெபிக்க வேண்டும் எனில் அது இனிமையாக மாறும். எனக்கும் சிலுவைகள் இருந்தன. அவைகளை நேசிக்க ஜெபித்தேன்; மகிழ்ச்சியுற்றேன். சிலுவையைத் தவிர வேறெதிலும் மகிழ்ச்சியில்லை “
சிலுவை வழி = இயேசுவின் வழி ;
இயேசுவின் வழி = புனிதர்களின் வழி.
நன்றி : நூல், “ அறிமுகம் தேடும் புனிதம் “, ஆசிரியர்கள் : அருட்தந்தை பி.பெரிய நாயகம், அருட்தந்தை ஜெயசீலன்..
ஜெபமாலை இராக்கினியாய் வந்து ஜெயம் தரும் மாமரி வாழியவே…… ஜெபிப்போம்… ஜெபிப்போம்… ஜெபமாலை….
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !