மனுமகன் சேசு பாகம் - 01

“ஆதியிலே கடவுள் விண்ணையும், மண்ணையும் படைத்தார் பூமி உருவமற்றதும் வெறுமையுற்றதுமாய் இருந்தது. பாதாளத்தின் முகத்தே இருள் பரவியிருந்தது. கடவுளின் ஆவியானவர் தண்ணீரின் மீது அசைவாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது கடவுள்: ஒளி உண்டாகுக என்று உரைத்தார். உரைக்கவே, ஒளி உண்டாயிற்று.”

ஆதியாகமம் 1 : 1-3

சின்ன குறிப்பிடத்திலிருந்து ஆரம்பிப்போம்..

கடவுள் என்பவர் யார் ?

எல்லாவற்றையும் படைத்து காப்பாற்றும் எல்லா நற்குணங்களும் நிறைந்த சுத்த அரூபியே கடவுளாகும்..

அனைத்திற்கும் ஆண்டவர் யார்?

கடவுள்

எத்தனைக் கடவுள்?

ஓரே கடவுள்.

எத்தனை ஆட்களாக இருக்கிறார்?

மூன்று..

மூவரும் மூன்று கடவுளா?

இல்லை.. ஒரே கடவுள்.

எப்படி ஒரே கடவுளாக/சர்வேசுவரனாக இருக்கிறார்..

இந்த மூன்று ஆட்களுக்குள்ளும் ஒரே ஞானம், ஒரே சித்தம், ஒரே வல்லமை, ஒரே தேவ சுபாவம் இருப்பதால் மூவரும் ஒரே கடவுள்தான்.

இப்படி ஏகமும் திரித்திவமுமாகிய கடவுளுக்கு பிரதான குணங்கள் எத்தனை?

ஆறு..

ஆறுஞ் சொல்லு..

1. சர்வேசுவரன் தாமாயிருக்கிறார்.

2. துவக்கமும் முடிவும் இல்லாமலிக்கிறார்.

3. சரீரமில்லாமலிக்கிறார்.

4. அளவில்லாத சகல நன்மையிம் சுரூபியுமாயிருக்கிறார்.

5. எங்கும் வியாபித்திருக்கிறார்.

6. எல்லாவற்றுக்கும் ஆதி காரணமாயிருக்கிறார்..

இங்கே ஒரு சிந்தனையை வைப்போம்..

தாமாக இருக்கும்.. துவக்கமும் முடிவுமில்லாமலிருக்கும், ஏற்கனவே வல்லமையும், நன்மைத்தனமும், மகிமையுமாய் இருக்கும் திரியேக சர்வேசுவரனில் ஒரு ஆளான சுதன்..

ஏன் மனிதனாக பிறக்க வேண்டும்..?

என்ன காரணம் ? 

சரீரமில்லாதா கடவுள் ஏன் மனித சரீரம் எடுக்க வேண்டும்..

மனிதன் அப்படி என்ன முக்கியத்துவம் பெற்றுவிட்டான்?

கொஞ்சம் நாம் சிந்திப்போம்.. கடவுளுக்கு சித்தமானால் அடுத்த பகுதியில்..

இந்த தொடர் சரீரம் இல்லாத சர்வேசுவரனுக்கு சரீரம் கொடுத்த மகா பரிசுத்த தேவ மாதாவுக்கு அர்ப்பணம்..

நம் நேசப்பிதா வாழ்த்தப் பெறுவாராக ! பரிசுத்த ஆவியானவர் போற்றி !

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !