“ வார்த்தை மனுவுருவானார்; நம்மிடையே குடிகொண்டார் “
அருளப்பர் 1 : 14
மனிதர்களான நாம் இறங்கினது பரிசுத்த நிலையிலிருந்து பாவ நிலைக்கு..
ஆனால் ஏற்கனவே பரிசுத்தமாக இருக்கும் கடவுள் இறங்கியது..
அதே பரிசுத்தத்தோடும், அதே மகிமையோடும், அதே வல்லமையோடும் ஆனால் மனிதனாக மாற இரங்கினார்..
பரிசுத்த நிலையிலேயே.. பரிசுத்தத்தோடு.. பரிசுத்தரிடம்.. பரிசுத்தமான மனிதரானார்..
இதையும் நன்றாக தியானிக்க வேண்டும்..
இங்கே ஒரு பரிசுத்த கருவி.. பரிசுத்தமான ஒரு மனித படைப்பு கடவுளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது..
கடவுளுக்காக மட்டும், கடவுளோடு மட்டும், கடவுளுக்கு மட்டுமே சொந்தமாக படைக்கப்பட்ட படைப்பு அது..
அதுதான் மகா பரிசுத்த தேவ மாதா..
அந்த படைப்பை, கடவுளின் ஆலயத்தை, நம் தேவ மாதாவை நாம் நன்றியோடு நினைத்துப்பார்போம். இந்த பூமியில் உள்ள அனைத்து படைப்புகளும் நாமும் நம் உயிருள்ளவரை அவருக்கு நன்றி செலுத்த வேண்டும் வாழ்த்த வேண்டும்.. அருள் நிறை மந்திரங்களாக அது எக்காலமும் ஒலிக்க வேண்டும்..
கடவுளுடைய இறக்கம் என்பது ஒரு சாதாரன விஷயமல்ல..
நாம் எளிதாக சொல்லிவிடலாம்..
“ வார்த்தை மனுவுருவானார்; நம்மிடையே குடிகொண்டார் “
இயேசு நமக்காக மனிதரானார்.. நமக்காக பாடுபட்டார்..
ஆனால் மிகவும் நாம் தியானிக்க வேண்டிய விசயம்.. மீண்டும்.. மீண்டும். என்னவென்றால்.. அவர் எந்த நிலையிலிருந்து இறங்கி வந்தார் என்பதுதான்..
அவருக்கு அந்த நிலையிலிருந்து இறங்கவேண்டும் என்று அவசியமே இல்லை.. ஆனாலும் இறங்கினார்.. நமக்காக இறங்கினார்..
அவர் மனிதர்களான நம் மீது எப்படிப்பட்ட மகா உன்னத நேசத்தை வைத்திருந்தால் இறங்கியிருப்பார்..
முதலில் கடவுளின் அன்பை தியானிக்க வேண்டும்..
அந்த அன்பு மனித அன்பைப் போல சுய நலமான அன்பு அல்ல.. தன்னையே கொடுக்கும் அன்பு.. தன்னையே தாரை வார்க்கும் அன்பு.. தன்னையே அர்ப்பணிக்கும் அன்பு..
“ அன்பே கடவுள் “ “ கடவுள் அன்பே உருவானவர்”
என்று நாம் சாதாரனமாக சொல்லுகிறோம்.. அந்த அன்பு எத்தைகைய விலையேறப்பெற்ற அன்பு.. அந்த அன்பு நமக்காக என்ன செய்தது எனபதை உள்ளார்ந்து தியானித்து உளப்பூர்வமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் சொன்னால்தான் அந்த அன்பின் உன்னத நிலை நமக்கு புரியும்..
நமக்கு பதில் தெரிந்த கேள்விகள்தான் இருந்தாலும் சின்ன குறிப்பிடத்திலிருந்து ஒரு சில கேள்வி பதிலை தியானத்தோடு கேட்போம்..
22. நம்மை இரட்சிப்பதற்காக மனிதனாக பிறந்தது யார்?
தூய தமதிருத்துவத்தின் இரண்டாம் ஆளாயிருக்கிற சுதனாகிய சர்வேசுவரன்தான்.
23. அவர் எப்படி உற்பவித்து பிறந்தார்?
பரிசுத்த ஆவியாகிய சர்வேசுரனாலே கர்ப்பமாய் உற்பவித்து அற்புதமாக பிறந்தார்.
24. யாரிடத்தில் நின்று பிறந்தார்?
என்றும் கன்னிகையான பரிசுத்த கன்னி மரியாளிடத்தில் நின்று பிறந்தார்..
சின்ன குறிப்பிடம் நாம் சின்ன வயதில் படித்திருந்தாலும் இந்த விசுவாச சோதனையான வேதகலாபனைக் காலத்தில் மீண்டும் நாம் படிக்க அதைப் படிக்க வேண்டும்..
நாம் சிறுவர்களாய் இருந்த போது பெற்ற அசைக்க முடியாத விசுவாசத்தை இப்போது மீண்டும் புத்திப்பிப்பதற்காக..
கடவுளுக்கு சித்தமானால் அடுத்த பகுதியில்..
நம் நேசப்பிதா வாழ்த்தப் பெறுவாராக ! பரிசுத்த ஆவியானவர் போற்றி !
சுதனாகவும், வார்த்தையாகவும் இருந்து மனுவுருவான இயேசுவுக்கே புகழ் !
மனுவுருவாக, கடவுளுக்கு தன் சரீரத்தைக் கொடுத்த மா மரியாயே வாழ்க !