வினா-விடைகள் 101 முதல் 150 வரை.

101. வேண்டாவெறுப்போடு படிக்கத் தொடங்கிய அந்நூல் வாசிப்பு இஞ்ஞாசியார்க்கு எவ்வித அனுபவத்தைத் தந்தது? 

அவர் வாழ்க்கையைத் திசைமாற்றியமைக்கும் விதத்தில் படிக்கப் படிக்க ஆர்வத்தையும் ஆன்மீக அறிவையும் அதிகப்படுத்தின. 

102. நூல் வாசிப்பால் இஞ்ஞாசியாருடைய அன்றாடச் செயல்பாடுகளில் எவ்வித மாற்றங்கள் நிகழ்ந்தன? 

குடும்பத்தாரிடம் எப்போதும் கடவுளைப் பற்றிப் பேசினார். பாதி நேரம் செயிப்பதிலும் பாதி நேரம் குறிப்புகள் எழுதுவதிலும் நாளைச் செலவழித்தார். 

103. இஞ்ஞாசியார் படித்த நூல்களிலிருந்து குறிப்புகள் எழுதும்போது அன்னைமரியாவின் வார்த்தைகளை எந்த வண்ண மையில் எழுதினார்?

நீலம். 

104. இஞ்ஞாசியார் படித்த நூல்களிலிருந்து குறிப்புகள் எழுதும்போது இயேசுகிறிஸ்துவின் வார்த்தைகளை எந்த வண்ண மையில் எழுதினார்?

105. இஞ்ஞாசியாரை உலக நாட்டங்களிலிருந்து மனம்மாற்றி ஆன்மீக வீரனாய் மாற்றிய நூல்கள் யாவை?

இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு, புனிதர்களின் வாழ்க்கை வரலாறு. 

106. புனிதர்களின் வாழ்க்கை வரலாற்று நூலைப்படித்த இஞ்ஞாசியார் மனதில் எழுந்த சிந்தனை யாது? 

புனித பிரான்சிஸ் அசிசி, புனித டோமினிக் செய்த தவமுயற்சிகளைத் தானும் செய்ய எண்ணினார்.

107. மன்ரேசாவிலிருந்த போது இஞ்ஞாசியார் விரும்பிப் படித்த நூல் எது?

கிறிஸ்து வழி வாழிவு. 

108. கிறிஸ்து வழி வாழ்வு நூலை இயற்றியவர் யார்?

தாமஸ் அ.கெம்பிஸ். 

109. இஞ்ஞாசியார் புனிதர்களின் வாழ்க்கை வரலாறைப் படித்ததும் எவ்வாறு மாற விரும்பினார்? 

புனிதர்களைப் போல தன் வாழ்வை முழுக்க இறைவனிடம் ஒப்படைத்து இயேசுவின் தளபதியாகிட. 

110. எந்த நாளில் காயம்பட்டு சிகிச்சையிலிருந்த இஞ்ஞாசியாரின் உடல்நிலை மிகவும் மோசமானது? 

28.06.1521. 

111. எந்த நாளில் இஞ்ஞாசியார் தன் காயங்கள் குணமாகியதாக உணர்ந்தார்?

29.06.1521. (புனித இராயப்பர், சின்னப்பர் திருவிழாவின்போது) 

112. இஞ்ஞாசியார் தன் காயங்கள் ஆறிய பின் எங்கு செல்ல எண்ணினார்? 

எருசலேம் நகருக்கு.

113. எருசலேம் நகர் செல்ல எந்த துறைமுகத்திலிருந்து கப்பலேற இஞ்ஞாசியார் திட்டமிட்டிருந்தார்?

பார்சலோனா. இப்போ பார்ப்பபோகப்பட 

114. பார்சலோனா துறைமுகம் எங்கு அமைந்திருந்தது?

தெற்கு கத்தலோனியா மாகாணத்தில். 

115. எருசலேம் நகருக்கு இஞ்ஞாசியார் எவ்வாறு செல்ல முயன்றார்?

காலணியின்றி நடக்கவும் சைவ உணவருந்திப் புனிதர்களைப் போன்று கடுந்தவம் புரியவேண்டுமென்று. 

116. இஞ்ஞாசியார் தம் வாழ்நாள் முழுக்க தங்கியிருக்க விரும்பிய பசி இடம் எது?

எருசலேம். 

117. எருசலேம் சென்று வந்தபின் எந்த துறவற சபையில் சேரலாமென இஞ்ஞாசியார் நினைத்திருந்தார்?

செவில் நகரத்திலுள்ள கார்த்தூசிய மடத்தில். 

118. கார்த்தூசிய மடத்தின் ஒழுங்குகளைப் பற்றிய விவரங்களை அறிய இஞ்ஞாசியார் தமது வேலையாளை எந்த நகருக்கு அனுப்பிவைத்தார்? 

பூர்கோஸ் நகர்

119. கர்த்தூசியன்சபை விவரங்களைப் படித்துப்பார்த்த இஞ்ஞாசியார் என்ன முடிவெடுத்தார்? 

தவமுயற்சிகளைச் செய்யும் சுதந்திரம் சபையின் சட்டதிட்டங்களால் பாதிக்கப்படுமோ என்றெண்ணி கர்த்தூசியன் சபையில் சேரும் முடிவைக் கைவிட்டார். 

120. குண்டடிபட்டு உடல்நலம் தேறியபின் எந்த நகருக்குச் செல்ல தமது அண்ணனிடம் இஞ்ஞாசியார் அனுமதி வேண்டினார்?

நவரெட் நகர். 

121. இஞ்ஞாசியார் எதற்காக நவரெட் நகருக்குச் செல்வதாக தன் அண்ணனிடம் தெரிவித்தார்?

டோன் அந்தோனியாவைப் பார்க்கச் செல்வதாக. 

122. தன் தம்பி இஞ்ஞாசியார் வீட்டை விட்டுச் செல்வதாகச் சொன்னதும் மார்ட்டின் என்ன செய்தார்? 

லொயோலா மாளிகையின் ஒவ்வொரு அறையாகக் காண்பித்து "தம்மையே வீசியெறிந்து வாழ்க்கையை வீணடித்துவிடக் கூடாது" என்று இஞ்ஞாசியாரை வெளியே செல்லவிடாமல் தடுக்க உணர்ச்சிவசப்பட்டுக் கெஞ்சினார். 

123. தம் அண்ண னைச் சமாதானம் செய்து இஞ்ஞாசியார் லொயோலா மாளிகையைவிட்டுத் திருப்பயணியாக எப்போது கிளம்பிச் சென்றார்?

1522 பிப்ரவரி மாத இறுதியில். 

124. லொயோலா மாளிகையைவிட்டுக் கிளம்பிய இஞ்ஞாசியாருடன் அரன்சாசுநகர் வரை உடன்வந்த அவரது சகோதரர் யார்?

பெர்ரோ லோபஸ். 

125. அரன்சாசு நகர் மரியன்னை திருத்தலத்தில் திருவிழிப்புச் செபத்தில் ஈடுபடுமாறு யார் யாரைக் கேட்டுக்கொண்டார்?

இஞ்ஞாசியார் தம் சகோதரர் பெர்ரோ லோபஸை. 

126. எந்த ஊரில் தனக்குப் பணம் கொடுக்க வேண்டியவரிடம் இஞ்ஞாசியார் பணம் கேட்டுப் பெற்று பயணத்தைத் தொடர்ந்தார்?

நவரெட் நகர். 

127. மான்செராத் செல்லும் வழியில் இஞ்ஞாசியார் எந்த ஊரில் என்னென்ன பொருட்களை வாங்கினார்? 

இருவாலடா ஊரில் சணல் துணியாலான அங்கி, பயணியின் கோல், சிறு குடுவை. 

128. எந்த தேவாலயத்திற்குச் சென்று இஞ்ஞாசியார் தன் உலக நாட்டம் நிரம்பிய பாவ வாழ்க்கைக்கு மன்னிப்பு வேண்ட எண்ணினார்? 

மான்செராத் ஆலயம்.

129. இஞ்ஞாசியார் கோவேறு கழுதையின் மீதேறி மான்செராத் மலையை அடைய லொயோலா மாளிகையிலிருந்து எவ்வளவுதூரம் கடந்து வந்தார்?

300 கி.மீ. 

130. மான்செராத் செல்லும் வழியில் அன்னை மரியாளின் கன்னிமை குறித்து அவதூறாகப்பேசிய வழிப்போக்கனை இஞ்ஞாசியார் எவ்வாறு தண்டிக்க எண்ணினார்?

வாளால் வெட்டி வீச. 

131. இஞ்ஞாசியாரைச் சுமந்து சென்ற கழுதை வழிப்போக்கன் சென்ற திசையில் சென்றதா? மான்செராத் மலை இருந்த திசையில் சென்றதா?

மான்செராத் மலையிருந்த திசைநோக்கிச் சென்றது. 

132. கோவேறுகழுதை வழிப்போக்கன் சென்ற திசையில் செல்லாமல் மான்செராத் பக்கம் திரும்பியதை இறைவனின் திருவுளம் என ஏற்றுக்கொண்டு சினம் தணிந்தவர் யார்?

இஞ்ஞாசியார். 

133. மான்செராத் மலையிலிருந்த திருத்தலம் எது?

கருவண்ணக் கன்னிகை என்ற அன்னை மரியாளுக்கு நேர்ந்துகொண்ட ஆலயம். 

134. "சுத்தவீரன்" என்னும் மகிமைப்பட்டத்திற்குத் தேர்ந்து கொள்ளப்பட்ட வீரன் அப்பட்டத்திற்குரிய வாளும் விருதும் பெறுவதற்கு முந்தைய நாள் தேவாலயத்தில் போர்க்கவசங்கள் அணிந்தபடி பீடத்தின் முன் தேவ ஆசீர் வேண்டுகின்ற நோன்பு யாது?

யுத்தாயுத நோன்பு. 

135. இஞ்ஞாசியார் கருவண்ணக் கன்னிகையின் பாதத்தில் எதை அர்ப்பணித்தார்?

வீரவாள், கத்தி, தலைச்சீறா. 

136. தான் ஏறிவந்த கோவேறு கழுதையை யாருக்கு ஒப்படைத்தார்?

ஆசீர்வாதப்பர் சபைத்துறவியர் இல்லத்திற்கு. 

137. லொயோலா மாளிகையிலிருந்து வெளியேறிய பின்பு அவர் சென்ற மேற்கு ஐரோப்பிய நகரங்களை வரிசைப்படுத்துக.

மன்ரேசா, பார்சலோனா, அல்கலா, பாரிஸ், வெனிஸ். 

138. இஞ்ஞாசியார் மான்செராத் மலையுச்சியைச் சென்றடைந்த நாள் எது? 

21.03.1522.

139. மான்செராத் என்பதன் பொருள் யாது? மான்செராத் மலையிலிருந்த வனத்துறவியர் மடம் எது?

கருக்குவாள். பெனடிக்ட் மடம். 

140. மான்செராத் அன்னையின் பீடத்தின்முன் இஞ்ஞாசியார் எவ்வாறு செபித்தார்?

நின்றவாறும், முழந்தாள்படியிட்டும் இரவு முழுக்க விழித்திருந்து. 

141. மான்செராத் ஆலயத்தில் இஞ்ஞாசியார் எத்தனை நாட்கள் கடுந்தவத்துடன் கூடிய தியானம் மேற்கொண்டார்?

30 நாட்கள். 

142. "என் ஆன்மா அமைதியடைய கடவுள் முதலில் நாய்க்குட்டியை வழிகாட்டியாய்க் காண்பித்தாலும் நான் முழுமனதுடன் பின்செல்ல ஆயத்தமாயிருக்கிறேன்" என்றவர் யார்?

இஞ்ஞாசியார். 

143. மான்செராத் ஆலயத்தில் இஞ்ஞாசியாருக்கு ஒப்புரவு அருள் அடையாளத்தைப் பெற உதவி செய்தவர் யார்?

ஆசீர்வாதப்பர் சபைத் துறவி ஜான் சானோன். 

144. ஒப்புரவு பெறுவதற்கு இஞ்ஞாசியாருக்கு துறவி ஜான் சானோன் செய்த உதவி யாது? 

ஒப்புரவு பெறுவதற்கு உதவக்கூடிய ஒரு நூலைக் கொடுத்து பொது ஒப்புரவு பெற உதவினார். 

145. மான்செராத் மாதா ஆலயத்தில் தனது பாவங்களை எண்ணி வருந்தி எத்தனை நாட்கள் எழுதினார்?

3 நாட்கள். 

146. இஞ்ஞாசியார் தன் பாவ அறிக்கைகளை எழுதி யாரிடம் கொடுத்து ஒப்புரவு அருளடையாளத்தைப் பெற்றார்?

ஆசீர்வாதப்பர் சபைத் துறவி ஜான்சானோன். 

147. மான்செராத்திலிருந்து மன்ரேசா புறப்படும்போது தன் ஆடம்பரமான உடைகளை இஞ்ஞாசியார் யாருக்குக் கொடுத்தார்?

பிச்சைக்காரர் ஒருவருக்கு. 

148. மான்செராத் மலையிலிருந்து இஞ்ஞாசியார் மன்ரேசாவிற்குச் செல்லும் வழியில் சந்தித்த, அவரது தோழி யார்?

ஆக்ஸ்பாஸ்கால். 

149. மன்ரேசா குகையில் இஞ்ஞாசியார் ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் செபித்தார்? 

ஏழு மணி நேரம்.

150. ஆண்டவர் இயேசு இஞ்ஞாசியாருக்குக் காட்சியளிப்பார் என்று அவரிடம் முன்கூட்டியே தெரிவித்தவர் யார்?

மன்ரேசாவிலிருந்த மூதாட்டி ஒருவர்.