சூசை மாமுனி..
“ சூசையே, தாவீதின் மகனே, உம்முடைய மனைவி மனைவி மரியாளை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம், ஏனெனில் அவள் கருவுற்றிருப்பது பரிசுத்த ஆவியால்தான்”.
மத்தேயு 2 : 20
இப்போது மாதாவின் மடியில் படுத்தாவாறு மீண்டும் கண்களை பாலன் சேசு பார்க்கிறார்.
சற்று அப்பால் புனித சூசை மாமுனி..
ஒரு அடிமைபோல்.. ஒரு காவளாளி போல் பய பக்தியோடு தாழ்ச்சியோடு ஆனால் ஒளியோடு காட்சி தருகிறார்.. என் வளர்ப்புத் தந்தை வளனார்..
என் தந்தை சூசையப்பரை இந்த உலகம் இன்னும் அறியவில்லை…
என் பொருட்டும் என் நேசத் தாயாரின் பொருட்டும் தன்னை அடிமையாக்கிக் கொண்டவர்..
அவர் திருக்குடும்பத்தின் தலைவராக இருந்தாலும் அவரைப் பொருத்தவரையில் எனக்கும், என் தாயாருக்கும் ஒரு காவலாளி அவ்வளவுதான்..
எங்களை எப்படியாவது காப்பாற்ற வேண்டும்.. எந்த சூழ்நிலையிலும் காப்பாற்ற வேண்டும்..
எங்களுக்கு உணவு அளிக்க வேண்டும்.. எப்பாடுபட்டாவது எங்களுக்கு உணவு அளிக்க வேண்டும்..
அதற்காக தன்னையே அர்ப்பணித்தவர்..
இரவு பகல் பாராமல் அயராமல் கண்விழித்து உழைத்தவர்…
இதோ நான் பிறந்து படுத்திருக்கிறேனே இந்த இடம் அவர் முயற்சியால் கிடைத்த இடம்..
என் அப்பா, எத்தனை சத்திரத்தின் கதவுகளை தட்டினார்; எத்தனை வீடுகளின் கதவுகளைத் தட்டினார்.. எங்கெல்லாம் ஓடினார்..
தேடினார் பரிதவித்தார்..
வீடுகளில் எங்களுக்கு இடம் மறுக்கப்பட்டபோது..
“ இந்த மாட்டுத்தொழுவத்தையாவது எங்களுக்குத் தாருங்கள். அதை நாங்கள் சுத்தம் செய்து அதைப் பயன்படுத்திக் கொள்கிறோம்” என்று கெஞ்சி கூத்தாடி வாங்கித் தந்த இடம்..
அவர் அப்படி அலைக்கழிக்கப்பட்டபோது..
“ என் மனைவியின் வயிற்றில் இருப்பது கடவுள்; அவர் மீட்பர்; நாங்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். எங்களுக்கு இடம் கொடுங்கள் “ என்று அதிகாரத்தோடும்ஆணவத்தோடும் கேட்கவில்லை..
“ என் பிதாவே, உம் மகனான கடவுளுக்கே இடம் தர மறுக்கிறார்களே, தூதன் சொல்லியது உண்மையா? செய்தி வந்தது உண்மையிலே உம்மிடம் இருந்துதானா? தெரியாமல் விலக்கிவிடலாம் என்று இருந்த என்னை, யாருக்கு பிள்ளைக்கோ அப்பாவாக்கி என்னை மாட்டிவிட்டு, இப்படி என்னை உபத்திரப்படுத்தி எடுக்கிறீரே, இந்து நியாயமா? “ என்றும் முனுமுனுக்கவில்லை..
(நம்மைப்போன்ற மனித புத்தி அப்படித்தான் நினைத்திருக்கும்)
என் மாதாவைப்போல கடவுளின் திட்டத்திற்கு தன்னை அடிமையாக்கிக்கொண்டவர்.. அர்ப்பணித்துக் கொண்டவர்..
“ சூசையே பிள்ளையையும் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்திற்கு போ”
என்ற போது அதற்கு அப்படியே கீழ்படிந்து எங்களை பனி, மழை, குளிர், வெயில்களுக்கு மத்தியிலும் அத்தனை பாதுகாப்பாக எங்களை வழி நடத்தியவர்..
அங்கும் அத்தனை கஷ்ட்டங்களுக்கு மத்தியிலும் எங்களைப் பாதுகாத்தவர்; எங்களுக்குச் சோறு போட்டவர்; எங்களைப் பராமரித்தவர்..
அவர் எங்களோடு இருக்கும் வரையிலும் நாங்கள் முழுப் பாதுகாப்பை உணர்ந்தோம்.. ஒரு நாள் கூட அச்சப்பட்டதில்லை, நாளையைக் குறித்து கவலைப்பட்டதில்லை..
வறுமை எங்களை வாட்டி வைத்தபோதும் பொறுமையோடு ஒவ்வொரு இடமாக சென்று எனக்கு வேலைதாருங்கள் என்று கேட்டு வாங்கி தச்சுத்தொழில் செய்து எங்களைக் காப்பாற்றியவர்..
எந்தச் சூழ்நிலையிலும் முனுமுனுக்காதவர்; நீடித்த பொறுமையைக் கடைப்பிடிப்பவர்; எப்போதும் பரிசுத்தத்தை கடைபிடிப்பவர்..
நான் குழந்தையாக, சிறுவனான, இளைஞனாக இருந்தாலும் நான் கடவுள் என்பதை அறிந்திருந்தவர்.. ஒரு கடவுளுக்கு உரிய மரியாதையைக் கொடுத்தவர்..
என் தாயாரிடம் “ கடவுளின் தாயாருக்கு, கடவுளின் மணவாளிக்கு “ என்ன மரியாதை கொடுக்க வேண்டுமோ அதைக் கொடுத்தவர்.. அவரை விட்டு எப்போதும் விலகி நின்றவர்..
அவரை மரியாதையோடும், பக்தியோடும் நடத்தியவர்..
இப்போது கூட பாருங்கள்.. ஒரு அடிமை போல சற்று தள்ளி அங்கே நிற்கிறார்..
“ அப்பா! என் அருகில் வாருங்கள்; என்னைத் தூக்குங்கள்; உங்கள் மார்பிலும் நான் சாய ஆசையோடு இருக்கிறேன்; உங்கள் கழுத்தை கட்டிக் கொள்ள வேண்டும் இருக்கிறது.. உங்களிடமும் பரிசுத்தம் மட்டுமே இருக்கிறது.. வாருங்கள் என்னைத் தூக்குங்கள்”
அப்படியே என் அப்பாவின் தோள்களில் அடைக்கலம் புகுந்துவிட்டே..
“மனுக்குலம் உங்களைப் பிதாப்பிதாவான அர்ச். சூசையப்பரே ! என்று அழைக்க நீங்கள் முழுத்தகுதியானவரே !”
சிந்தனை மற்றும் எச்சரிக்கை : இப்போது புனித சூசையப்பருக்கு அவசங்கைகளும், அவமானமும் நிறைய இடங்களில் நடக்கிறது.. முதலில் மாதாவின் தோளில் அவர் ஒரு கை வைத்திருப்பதைப் போல ஒரு திருக்குடும்ப படம் வந்தது.. இப்போது திருக்குடும்பத்தை மடியில் வைத்திருப்பது போல ஏதோ ஒரு சிலை வந்திருக்கிறது..
புனித சூசையப்பரின் விரல் நுனி கூட மாதாவின் மேல் பட்டதில்லை..
அவர்தான் இரண்டாவது துறவி (முதலில் மாதா).. அவர்தான் முதல் துறவற சபையின் தலைவர் ( ஆண்டவர் இயேசுவும் துறவிதான் ஆனால் அவர் குருவானவர் பட்டியலில் வந்து விடுவார்..
மாதா : முதல் கன்னி.. அருட்சகோதரிகளுக்கு முதல் ஆளாய் இருப்பவர்.. ஆனால் அமலோற்பவியும், கடவுளின் தாயாக இருந்தாலும் மாதாவே முதல் கன்னி.. நித்திய கன்னி..
இயேசு சுவாமி : புதிய ஏற்பாட்டின் முதல் தலைமை குரு.. நம்முடைய குருக்களில் முதல் குருவாக இருப்பவர்.. நித்திய தலைமைக் குரு..
புனித சூசையப்பர் : துறவிகளில் முதல் துறவி..இப்போது இருக்கும் துறவிகளில் முதல் துறவியாக இருப்பவர்.. அதிலும் விசேசம் என்னவென்றால் இல்லறத்தில் துறவறத்தைக் கடைப் பிடித்தவர்..
பரிசுத்தமான முதல் ஆண் துறவி.. முனிவர்.. அதிலும் மாமுனிவர்.. இப்படித்தான் அவரை நாம் பாரம்பரியமாக அழைத்து வந்துள்ளோம்..
ஆனால் இந்த பரிசுத்த சூசையப்பரை சிலர் தங்கள் மனித புத்தியில் பிசாசின் புத்தியை புகுத்தி அவரை வேறுவிதமாக, மூவொரு கடவுளை அவமதிக்கும் விதமாக, முக்கியமாக ஆண்டவர் இயேசுவையும், தேவ மாதாவையும் அவசங்கை செய்யும் நோக்கில் எதோ செய்து கொண்டு பிசாசின் தூதுவர்களாகவும், அவனின் அடிமைகளாகவும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்..
அப்படிப்பட்டவர்களே !கடவுளின் கரம் உங்களைத் தண்டிக்கும் முன் உடனடியாக உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.. இல்லாவிட்டால் உங்களுக்கு ஐயோ கேடு வந்தே தீரும்..
நம் நேசப்பிதா வாழ்த்தப் பெறுவாராக ! பரிசுத்த ஆவியானவர் போற்றி !
சுதனாகவும், வார்த்தையாகவும் இருந்து மனுவுருவான இயேசுவுக்கே புகழ் !
மனுவுருவாக, கடவுளுக்கு தன் சரீரத்தைக் கொடுத்த மா மரியாயே வாழ்க !