இப்போது வெற்றி மங்கை யூதித்தை புகழ்ந்து இஸ்ராயேலின் மக்களும், மன்னனும் பாடிய புகழ் பாடலைக் கேளுங்கள்..
இஸ்ராயேல் மக்கள்,
“ ஆண்டவர் தமது ஆற்றலால் உன்னை ஆசீர்வதித்தார். ஏனென்றால் அவர் உன்னைக் கொண்டு எங்கள் பகைவரை அழித்தொழித்தார்”
அரசன் ஓசியாஸ்,
"மகளே, மண்ணுலகப் பெண்களுக்குள் நம் ஆண்டவரால் ஆசி பெற்றவள் நீயே! “
“ விண்ணையும் மண்ணையும் படைத்த ஆண்டவர் வாழ்க! எங்கள் பகைவரின் படைத்தலைவனுடைய தலையைக் கொய்யும்படி அவரன்றோ உனக்குத் துணையாக இருந்தார்.”
“ எல்லா மனிதரும் ஆண்டவருடைய பேராற்றலை என்றென்றும் நினைவு கூர்வதுபோல் இனி உன்னையும் என்றென்றும் புகழ்வர்”
யூதித் 13 : 22-24, 25
ஆக்கியோர் செய்த செயல் மற்றும் புகழ் மொழி..
அவன் யூதித்தின் கால்களில் விழுந்து வணங்கினான்..
“ யாக்கோபின் உறைவிடமெங்கும் உம் கடவுளால் நீ ஆசீர்வதிக்கப்பட்டவள். ஏனென்றால் உம் பெயர் விளங்கும் இடமெல்லாம் இஸ்ராயேலின் கடவுளும் உம் பொருட்டு மகிமை பெறுவார் “
யூதித் 13 : 30-31
அவர்களின் புகழ் மொழிகளைப்பாருங்கள்.. புதிய ஏற்பாட்டில் ஆண்டவரின் மீட்புத்திட்டத்தில் பயன்படுத்தப்பட்ட நிறைய இறைவார்த்தைகள்( லூக்காஸ் முதல் அதிகாரம்) மேலே பயன்படுத்தப்பட்டுள்ளதை இங்கு பார்க்கலாம்..
கடைசி வசனத்தைப்பாருங்கள்..
“ யாக்கோபின் உறைவிடமெங்கும் உம் கடவுளால் நீ ஆசீர்வதிக்கப்பட்டவள்.. ஏனென்றால் உம் பெயர் விளங்கும் இடமெல்லாம் இஸ்ராயேலின் கடவுளும் உம் பொருட்டு மகிமை பெறுவார்”
அதற்கு முன் அவர் ‘யூதித்தின் காலில் விழுந்து’ வணங்கினார் என்று பார்க்கிறோம்..
யூதித் பெற்ற வெற்றி மண்ணுலகைச் சார்ந்தது.. ஒரு மண்ணக அரசனிமிருந்து விடுதலை. அன்று அசீரியர்களிடமிருந்து இஸ்ராயேல் மக்களை கடவுள் ஒரு எளிய பெண்ணை வைத்து காப்பாற்றினார் அவர்களுக்கு விடுதலை கொடுத்தார்.. அது தற்காலிக விடுதலை..
மாதா பயன்படுத்தப்பட்டது மீட்பின் திட்டத்திற்கு.. மீட்பரையே மாதா வழியாகத்தான் கடவுள் கொண்டுவந்தார்.. இது நிரந்தர விடுதலை..
பிசாசிடமிருந்தும், பாவத்திடமிருந்தும் நம்மை மீட்கும் நிரந்தர விடுதலை..
நரகத்திலிருந்தும், நம் நிரந்தர எதிரியிடமிருந்தும் நம்மை மீட்கும் விடுதலை..
ஒரு தற்காலிக உலகம் சார்ந்த வெற்றியை அளித்த யூதித்திற்கே வணக்கமும், புகழ் மொழிகளும் செலுத்தப்படுகிறதென்றால்..
நித்திய நரக விடுதலையைத் தந்த மீட்பின் திட்டத்திற்கு இணைக்கருவியாக பயன்படுத்தப்பட்ட,
நம் தேவ மாதாவிற்கு எப்படிப்பட்ட உன்னத வணக்கமும், விலையேறப் பெற்ற புகழ் மொழிகளும் செலுத்தப்பட வேண்டும்..
வார்த்தையானவரை மனுவுருவாக்கின “ அருள் நிறைந்த மரியாயே வாழ்க “ என்ற தெய்வீக புகழ் மொழியை விட வேறு புகழ் மொழி இருக்கிறதா?
அதுவும் மேலே உள்ள கடைசிவரியை கவனியுங்கள்.. “ யாக்கோபின் உறைவிடமெங்கும் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்.. மீட்பின் திட்டத்திற்கு உதவியவரின் பெயரை வாழ்த்தினால் மகிமைப்படுத்தினால் கடவுளும் மகிமை பெறுகிறார்”
அப்போ.. மாதாவை வாழ்த்தினால் மகிமை பெறுவது யார்? மாதாவின் பெயரைப் போற்றினால் அது யாருக்கு மகிமை சேர்க்கும்.. அதைத்தானே கத்தோலிக்கர்களாகிய நாம் செய்கிறோம்..
“இதோ! இந்நாள் முதல் எல்லாத் தலைமுறைகளும் என்னைப் பேறுடையாள் எனப் போற்றுமே”
லூக்காஸ் 1: 48
“ வீட்டிற்குள் போய், பிள்ளையை அதன் தாய் மரியாளுடன் கண்டு, தெண்டனிட்டு வணங்கினர்”
மத்தேயு 1: 11
மாதாவிற்கு வணக்கம் செலுத்தக் கூடாது.. மாதாவைப் புகழக் கூடாது.. ஜெபமாலை ஜெபிக்கக்கூடாது என்று சொல்பவர்கள் கிறிஸ்தவர்களாக இருக்க முடியுமா?
“எஸ்தர்” பிடிக்கும் “ரூத்து” பிடிக்கும் “சாராள்”பிடிக்கும் இன்னும் பழைய ஏற்பாட்டு எல்லா பெயர்களும் எங்களுக்கு பிடிக்கும். ஆனால் கடவுளின் தாயான “ மரியாயை “ மட்டும் எங்களுக்கு பிடிக்காது..
அப்படியென்றால் அவர்கள் யாராக இருக்க முடியும்..?
“ மாசில்லா கன்னியே மாதாவே உன் மேல் நேசமில்லாதவர் நீசரே ஆவார்”
பேய்க்கு மாதாவின் பெயர் பிடிக்கவே பிடிக்காது..
மாதாவுக்கு எந்த நஷ்டமும் இல்லை.. அவர்களுக்குத்தான் நஷ்டம்..
சரி.. யூதித் மாதாவின் முன்னோடி..
இதை புனித அந்தோணியார் போன்ற பெரிய புனிதர்களும், மறை நூல் வல்லுநர்களும் உறுதி செய்கிறார்கள்.. நம் கத்தோலிக்க பரிசுத்த வேதாகமத்தின் முன்னுரையும் உறுதி செய்கிறது..
அதில் இப்படி குறிப்பிடப்படுகிறது,
“இவள் (யூதித்) அலகையின் ஆட்சியிலிருந்து நம்மை விடுவிக்க கடவுள் துணைக் கருவியாக பயன்படுத்திய மரியாளுக்கு முன்னோடி “
“ஜெபமாலை இராக்கினியாய் வந்து ஜெயம் தரும் மாமரி வாழியவே ! ஜெபிப்போம்.. ஜெபிப்போம்.. ஜெபமாலை “
நம் நேசப் பிதா வாழ்த்தப்பெறுவாராக ! இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !