முற்காலத்தில் சக்கேயுவுக்குச் சொன்னது போல இப்போதும் “நான் உன் வீட்டில் தங்க வேண்டும்” (லூக். 19:5) என்று ஒவ்வொரு குடும்பத் தலைவரிடமும் கிறீஸ்து இராஜா கிருபையுடன் கேட்டுக்கொள்கிறார். அன்பின் இராஜா நமது இல்லங்களில் எழுந்தருளி வந்து, நம்மோடு வாசமாயிருந்து நமது ஜீவியத்தை முற்றிலும் ஆசீர்வதிக்க ஆவலுடன் இருக்கிறார்
திருப்பாடுகளின்போது, தமக்குச் செய்யப்பட்ட நிந்தை அவமானங்களின் அளவாக இப்போது தமது தயாள இருதயத்தை மனிதர் போற்றிப் புகழுமாறு தாம் மன்னர் பிரபுக்கள் மாளிகைகளிலும், அரசனுக்குரிய மாட்சிமை மகத்து வத்துடன் நுழைய விரும்புவதாக மகிமை இராஜாவானவர் மர்கரீத் மரியம்மாளுக்குத் திருவுளம்பற்றினார். அவ்வாறே சாமான்யக் குடும்பங்களிலும், கூலி வேலை செய்து காலங்கழிக்கும் ஏழைக் குடும்பங்களிலும் தாம் எழுந்தருளி, அவர்களை ஆசீர்வதித்து, ஆறுதலளிப்பதாகவும், கருணை இராஜா திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்
வருந்தி சுமை சுமக்கிறவர்களாகிய நீங்கள் எல்லோரும் என் அண்டையில் வாருங்கள், நான் உங்களைத் தேற்றுவேன்” (மத். 11:28). ஆகையால் செல்வந்தரும், தரித்திரரும் கிறீஸ்து இராஜாவைத் குடும்ப இராஜாவாகத் தங்கள் இல்லங்களில் ஸ்தாபித்து, “ஆண்டவரே வாரும், எங்களுடன் தங்கியிரும்” என்று சொல்லி, உள்ளன்புடன் அவரை உபசரித்து தினமும் பாடி மகிழ்ந்திருக்க வேண்டாமா
கிறீஸ்து இராஜாவை நமது இல்லங்களில் குடும்ப இராஜாவாகக் கொலுவிருக்கச் செய்யும் முறை மிக எளிதானது குடும்பத்தார் அனைவரும் விசுவாச மந்திரம் ஜெபித்தபின் குருவானவர் திரு இருதயப் படத்தையோ, சுரூபத்தையோ மந்திரித்து, அதற்காக தீர்மானித்திருக்கும் பீடத்தில் ஸ்தாபித்த பின் எல்லோரும் சேர்ந்து நிந்தைப் பரிகார ஜெபம் ஜெபிப்பதே முறையானது
இவ்விதமாக இருதய இராஜாவைத் தங்கள் குடும்ப இராஜாவாக ஸ்தாபிக்கும் நாளில் நாம் மேற்கூறியபடி பலரை வரவழைத்துப் பலகார பட்சணங்கள் பரிமாறித் தேநீர் பருக வேண்டிய அவசியமில்லை. ஆனால் வசதியுள்ளவர்கள் அந்த சுபதினத்தில் தங்களோடு சேர்ந்து, இருதய இராஜாவைப் புகழ்ந்து கொண்டாடி, அவர் ஆசி பெற்று ஆனந்திக்கும்படி மற்றவர்களையும் அழைப்பது அவர்களுக்கு அழகேயன்றி கடமையல்லவே அல்ல
மேலும் கிறீஸ்து குடும்ப இராஜாவாக ஸ்தாபிக்கப்பட்ட சில இல்லங்களில் அவர் வீற்றிருக்கும் சிறு பீடத்தில் தினமும், அல்லது வெள்ளிக்கிழமைதோறும் ஒரு சிறு விளக்கு எரிய வைக்கும் வழக்கம் இருந்து வருவது மிகவும் மெச்சத் தக்கதே. அன்பின் இராஜாவின்முன் எரியும் சிறு விளக்கு குடும்பத்தின் இருதயத்தில் எரியும் சிநேகத்தை அவருக்கு ஒப்புக்கொடுக்கும் அடையாளமாகும்.
ஆயினும் விளக்கெரிய வைப்பதும் குடும்ப இராஜாவின் கொலுவுக்கோர் இன்றியமையாத சாதனமென்று தப்பிதமாயெண்ணி, ஏழைக் குடும்பத்தார் இதற்கு என்ன செய்வோமென்று கவலைப்பட்டு, கிறீஸ் இராஜாவைத் தங்கள் குடும்ப இராஜாவாக ஸ்தாபித்த தங்களால் சாத்தியமான காரியமல்ல என்று நினைத்துவிடக்டாது இல்லங்களில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் திரு இருதயப் படம் அல்லது சுரூபத்துக்கு முன் விளக்கெரிய வைக்க வேண்டுமென்ற நிபந்தனை கிடையவே கிடையாது
தொடரும்...