“பெண் ஒருத்தி காணப்பட்டாள். அவள் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தாள்; நிலவின் மேல் நின்று கொண்டிருந்தாள்; தலையின் மீது பன்னிரு விண்மீன்களை முடியாக சூடியிருந்தாள் “
திருவெளிப்பாடு 12 : 1
இப்போது பிசாசின் வலிமையைப் பாருங்கள்..
“இதோ நெருப்பு மயமான ஒரு பெரிய பறவைநாகம் காணப்பட்டது. அதற்கு ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளும் இருந்தன. தலைகளிலே ஏழு முடிகள் இருந்தன.”
திருவெளிப்பாடு 12 : 3
மாதாவுக்கு வல்லமையை யார் கொடுத்தார்.. நம் நேசப்பிதா..
பிசாசுக்கு வலிமையை யார் கொடுத்தார்.. நாம்தான்.. வேறு யார் கொடுப்பார்கள்..
நாம பாவத்திற்கு மேல் பாவம் செய்தால் அவனுக்கு வலிமைக் கிடைக்கத்தானே செய்யும்..
அப்படியே இப்போது உலகம் இருக்கும் நிலையைப் பாருங்கள்..
“ நாம் செய்றது பாவம் “ என்ற குற்ற உணர்ச்சி கூட இல்லாமல் பாவம் செய்யப்படுகிறது.. அதில் கற்புக்கு எதிரான பாவத்தின் விகிதம்.. அதிகம்.. பனம் இருந்தால் போதும் எதுவும் தப்பில்லை.. எல்லாம் சாதாரனம்.. அவர்களை மீடியா பாதுக்காக்கிறது.. கவுரவிக்கிறது..
ஏனென்றால் அவர்களுக்கு காசு வந்தால் போதும்..
கலாச்சாரம், கவுரவம், ஒழுக்கம்.. எல்லாம் ஏட்டிலும்.. எழுத்திலும்தான். செயலில் அல்ல..
பிசாசு எல்லா இடங்களிலும் ஆபாச ஆடைகளை உடுத்திக்கொண்டு.. அபத்தமான பேச்சுகளை பேசிக்கொண்டு.. அவனைக் கண்டுபிடிக்கவே முடியாத அளவிற்கு அலைகிறது..
அடுத்துபோதை பிசாசு.. பணப்பிசாசு.. பேராசைப் பிசாசு.. எல்லாம் தான் தனக்கு என்று அலையும் சுய நலப்பிசாசு..
பாவம் ஏற.. ஏற.. பிசாசின் வலிமை கூடிக்கொண்டே போகும்..
அதே சமையம் மாதாவின் வலிமை குறைந்து கொண்டே போகும்..
மாதாவுக்கு வல்லமையை அப்பா கொடுத்துவிட்டார்.. ஆனால் அதோடு நாம் கொடுக்கும் வல்லமை சேர்ந்தால் மட்டுமே.. மாதா பிசாசை அடித்து காலி செய்ய முடியும்..
மாதாவுக்கு வலிமை நாம் கொடுக்க முடியுமா? எப்படி?
அதற்கு முன்..
திருவெளிப்பாடு தொடக்கத்திலேயே ஒரு கம்பேரிசன் (Comparison) வந்துவிட்டது.. அப்படியென்றால்..இரு படை உள்ளது.. இரு படைத்தலைவர்கள் இருக்கிறார்கள்..
ஒரு படைக்கு தலைவி மாதா..
இன்னொரு படைக்கு தலைவன் பிசாசு..
இதற்கு முன்னால் உள்ள ஒரு பகுதியில் மாதாதான் கடவுளின் படைக்கு தலைமை தாங்கி பிசாசை ஒழிக்க வேண்டும் என்றும் அதற்கான காரணத்தையும் சொல்லியாகிவிட்டது..
மாதாவுக்கு உணமும் ஊட்டமும் என்ன? ஜெபமாலைதான்..
நாம் ஜெபமாலை ஜெபிக்க மாதாவுக்கு வல்லமை வந்துகொண்டே இருக்கும் ? எங்கிருந்து வரும் .. கடவுளிடமிருந்து வரும்… அப்போதுதான் அவர்கள் எளிதாக பகைவனை அடித்து காலி செய்ய முடியும்.. ( நன்றி வாழும் ஜெபமாலை இயக்கம்)..
இப்போது Proof வேண்டுமா? இருக்கிறது..
பிசாசின் ஆரவார ஆட்டம் எல்லாம் அளவுக்கு அதிகமாகிப் போனது ஒரு 25 ஆண்டுகளுக்குள்தான்.. அதற்கு முன்வரை இத்தனை ஆட்டம் கிடையாது..
அப்போது குடும்ப ஜெபம் இருந்தது.. கத்தோலிக்க குடும்பங்கள் இரவு குடும்ப ஜெபமாலை ஜெபிக்காமல் தூங்க போகமாட்டார்கள்..
எப்போது சன் டிவி தொடங்கி தனியார் தொலைக்காட்சிகள் வந்ததோ அதோடு குடும்ப ஜெபமாலை மறைந்துவிட்டது..
இப்போது டி,வியில் கண் விழித்து டி.வி-யை பார்த்துக்கொண்டே தூங்குகிறது.. கத்தோலிக்க குடும்பங்கள்.. அதாவது நன்றாக தூங்கிக்கொண்டிருக்கிறது..
எப்போது குடும்ப ஜெபமாலை வீழ்ந்ததோ அப்போதே இன்னொருத்தன் நுழைய ஆரம்பித்துவிட்டான்.. பிரிவினை சபையினர் ஒவ்வொரு கத்தோலிக்க குடும்பமாக நுழைந்து அதன் ஆணி வேரை சிதைத்து.. நீங்க அதை பன்றீங்க.. இதைப் பன்றீங்க சிலை வழிபாடு பன்றீங்கனு பேசி மாதாவுக்கு இயேசுவைத் தவிர பிள்ளைகள் உண்டு தெரியுமா? என்று கடவுளின் தாயை கேவலப்படுத்தி குறுக்கு வழியில்.. அதாவது ஆட்டுப்பட்டியில் ஏறிக் குதித்து.. உள்ளே நுழைந்து மொத்தமாக பல கத்தோலிக்க குடும்பங்களை சுருட்டிக்கொண்டு போய்விட்டான் அந்த படுபாவி..
“ ஆமா.. அவன் சொல்றது சரியாத்தான் இருக்குமோ?” னு செம்மறி ஆடுமாதிரி தலையை ஆட்டிக்கிட்டு அவன் பின்னாலே போய்விட்டது ஒரு கத்தோலிக்க கூட்டம்..
குடும்ப ஜெபமாலை அடியோடு காலி..
ஆமா.. நற்செய்தியை யாருக்கு அறிவிக்க வேண்டும்? கிறிஸ்துவை அறியாத மக்களுக்கு.. அதாவது இந்து..இஸ்லாமிய சகோதர்களுக்கு அறிவிக்க வேண்டும்.. அங்க போனா இவர்கள் பேசுற பேச்சுக்கு அடிதான் விழும்..
ஆனா அவர்கள் ஏன் கிறிஸ்துவை அறிந்து ஞானஸ்தானம் பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவர்களிடம் வந்து அறிவிக்கிறார்கள்.. குழப்புகிறார்கள்..
இப்படி போச்சுன்னா..
பிசாசுக்கு ஏழு தலை என்ன பத்து தலை கூட முளைக்கும்..
சரி நம்ம கத்தோலிக்க வீட்டுக்கு வருவோம்..
எந்த குடும்பம் கூடி அமர்ந்து குடும்ப ஜெபமாலை ஜெபிக்குதோ அன்றே அவன் கதை காலி..
மாதாவை தலைவியாக ஏற்றுக்கொண்ட மாதாவின் படையில் உள்ள மாதாவின் பிள்ளைகள்தான் பிசாசின் படையை எதிர்த்து சண்டை போட முடியும்…
சண்டை போட படைக்கலனே ஜெபமாலைதான்..
ஜெபமாலை சொல்வோம்.. ஜெபமாலையோடு சேர்ந்து தவமும், பரித்தியாகமும் சேர்ந்து செய்வோம்… அவனை டோட்டலா காலி பன்னுவோம்..
ஜெபமாலை இராக்கிணியாய் வந்து ஜெயம் தரும் மாமரி வாழியவே..
ஜெபிப்போம்.. ஜெபிப்போம்… ஜெபமாலை..
நம் நேசப் பிதா வாழ்த்தப்பெறுவாராக..
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !