தூய்மையான புனிதர் (The Holy Apostle James, the son of Zebedee) : இந்த தூய்மை என்ற வார்த்தை புனித சந்தியாகப்பரின் வாழ்க்கை வரலாற்று வலைத்தளங்களில் காண்பது மகிழ்ச்சியாக உள்ளது. தூய்மை என்ற வார்த்தை நம் தேவ மாதாவுக்கு அதிகமாக பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.. அதனால்தான் தேவமாதாவாலும் நேசிக்கப்பட்டிருக்கிறார்.. சேசுவுக்கு அடுத்த மகனுக்கு அடுத்த மகன் ( அருளப்பருக்கு அடுத்த நம் யாகப்பர்தான்)
சந்தியாகப்பர் எப்போதும் ஜெபித்துக்கொண்டே இருக்கும் பழக்கம் கொண்டவர். அவர் கரங்கள் குவிக்கப்பட்ட நிலையில், அவர் கண்கள் ஆகாயத்தை நோக்கி எப்போதும் ஜெபித்தவண்ணமே இருக்கிறது, பெரும்பாலான அவர் படங்கள். ஜெபிக்கும் வேளையிலும், நற்செய்தி அறிவிப்பு பணிக்காக அவர் பயணம் மேற்கொள்ளும் போதும் அவர் அருகே சம்மனசுக்கள் இருந்ததாக பாரம்பரியங்கள் சொல்கின்றன. அவர் யூதேயா தேசத்தில் இருந்து இத்தாலிக்கு போகும்போது 100 சம்மனசுக்கள் அவரை சூழ்ந்துவர வேதம் போதித்துக்கொண்டே சென்றிருக்கிறார். அவர் உள்ளம் எப்போதும் தூய்மையால் நிறைந்திருந்தது.
இப்போது அவரது எழுச்சிமிகு திடமிகு வேத போதனையை பார்ப்போம் : ஸ்பெயின் தேசத்திலும் பிற தேசங்களிலும் இயேசு கிறஸ்துவை அறிவித்து விட்டு மீண்டும் ஜெருசலேமுக்கு அன்னை மரியாளின் ஆனையின்படி திரும்பிய அப்போஸ்தலரின் போதனை எப்படிப்பட்டதாக இருந்ததாம்.மிகவும் வெளிப்படையாகவும், திடமாகவும் குறிப்பாக அவரது போதனை நெருப்புபோல் இருந்துள்ளது. இயேசுதான் மெசியா என்று திடமாக உறுதியாக அறிவித்துள்ளார். பரிசேயர்கள், தலைக்குருக்களை வெளிப்படையாக சாடிய சந்தியாகப்பர் அவர்கள் நெஞ்சத்தில் உள்ள அழுக்கையும், அவர்களின் அவ நம்பிக்கையையும் தைரியமாக எடுத்துரைத்தார். இது நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் தைரியத்தை போன்று உள்ளது.
யூதர்களால் தூய சந்தியாகப்பரை சமாளிக்கவும் முடியவில்லை, கட்டுப்படுத்தவும் முடியவில்லை. அவரை செயல் இழக்க செய்ய அவரைக்கட்டுப்படுத்த மந்திரவாதிகளை அனுப்புகிறார்கள்..
யூதர்கள் திகைக்கிறார்கள்..தூய சந்தியாகப்பருக்கு எதிராக சாதாரண மனிதர்களை அல்ல மந்திரவாதியை வைத்தே ஒன்றும் செய்ய முடியவில்லை ( சென்ற பகுதி). பின்புதான் ஏரோது அகரிப்பாவை அனுகிறார்கள்.
இதற்கிடையே புனித சந்தியாகப்பரின் அற்புதங்களும் தொடர்கிறது..
தூக்கிலிட்டு கொலை செய்யப்பட்ட இளைஞன் ஒருவனை ஐந்து வாரங்கள் கழித்து உயிரோடு எழுப்பினார் நம் சந்தியாகப்பர் ஆண்டவர் இயேசுவின் திருப்பெயரால்..
“ என்னை நீங்கள் விசுவசித்தால் என்னிலும் மேலான காரியங்களை செய்வீர்கள்” என்ற ஆண்டவர் இயேசுவின் உயிருள்ள வார்த்தைகள் நிறைவேறுகிறது..
சிந்தனை & ஜெபம் : அர்ச்சிஷ்ட்ட தூய சந்தியாகப்பரே ஆண்டவர் இயேசு சுவாமி உமக்கு கொடுத்த உரமும், வரமும்தான் உம்மை இந்த அளவுக்கு செயலாற்ற வைத்துள்ளது.. தேவ மாதா ஜெருசலேமில் வாழும் போதே சம்மனசுக்கள் புடை சூழ உம்மை ஸ்பெயின் தேசத்தில் சந்தித்தது உமக்கு மட்டுமே கிடைத்த மாபெரும் பாக்கியம். அதற்கு காரணம் உம் உள்ளத்தூய்மை, அயராத உழைப்பு மற்றும் ஆழ்ந்த ஜெபம். எங்களுக்கு உம்முடைய உள்ளத்தின் தூய்மையை தாரும். தூய உள்ளம் இறைவன் வாழும் ஆலயம் என்பதை உணர செய்தருளும். எங்களுக்காக இறைமகன் இயேசுவிடம் பரிந்து பேசி உம் உள்ளத்தூய்மையை கண்டிப்பாக தாரும் எங்கள் ஆற்றல் மிகு பாதுகாவலரே.
கடவுளுக்குச் சித்தமானால் மீண்டும் வருவேன் ஆற்றல்தரும் அருட்துணையோடு...
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !