151. இஞ்ஞாசியார் இயேசுகிறிஸ்துவின் சீடர்களில் யாரிடம் தனிப்ப பக்தி கொண்டிருந்தார்?
திருத்தூதர் பேதுரு.
152. இஞ்ஞாசியாருக்கு ஏற்பட்ட இறையனுபவங்களைப் பற்றிய முதல் சிந்தனை யாது?
நல்ல எண்ணங்கள் இறைவனிடமிருந்தும் தீய எண்ணங்கள் அசுத்த ஆவியிடமிருந்தும் வருகின்றன.
153. இஞ்ஞாசியாரின் இறையனுபவத்தால் விளைந்த இம்முதல் சிந்தனை அவருடைய "ஆன்மிகப் பயிற்சிகள்" நூலில் எதற்கு அடித்தளம் அமைத்துத் தந்தது?
எண்ணங்களைத் தேர்ந்து தெளிதல்.
154. இறைவனின் திருப்பணிக்கு இஞ்ஞாசியரை ஆளாக்கத்தூண்டிய காட்சி எது?
வானத்தில் உலவும் விண்மீன்கள்.
155. மன்ரேசாவிலிருந்தபோது இஞ்ஞாசியார் ஒவ்வொருநாளும் என்ன செய்தார்?
பிச்சையெடுத்து உண்டு ஊன், மது அருந்தாமல் சணல் அங்கி அணிந்து புறஅழகைப் பராமரிக்காமல் துறவியாக வாழ்ந்தார்.
156. இஞ்ஞாசியாரின் எளிய வாழ்வைப் பார்த்த சாதாரண மக்கள் அவரை எவ்வாறு அழைக்கத் தொடங்கினர்?
புனித மனிதன்.
157. இஞ்ஞாசியார் பகட்டான ஆடைகளைக் களைந்து எவ்வகையான ஆடைகளை அணிந்து கொண்டார்?
சாக்குத்துனி.
158. இஞ்ஞாசியார் எவ்வகைக் காலணிகளை அணிந்தார்?
சணல்கயிறால் நெய்யப்பட்ட காலணிகள்.
159. மன்ரேசா குகையில் இருந்தபோது இஞ்ஞாசியார் தான் கொண்டுசென்ற குறிப்பேட்டில் என்ன எழுதினார்?
தமக்குக்கிடைத்த ஆன்மீக அனுபவங்களைக் குறிப்பேட்டில் குறித்துக்கொண்டார்.
160. இஞ்ஞாசியார் எதற்காக குறிப்பேட்டில் தமக்குக்கிடைத்த இறை அனுபவங்களை எழுதினார்? தமக்குக் கிடைத்த அனுபவங்களால் பிறரும் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தால் எழுதினார்.
161. இஞ்ஞாசியாரின் ஆன்மிக அனுபவங்கள் எழுதப்பெற்ற குறிப்பேடு பின்னாளில் எந்த நூலாக வெளியிடப்பெற்றது?
ஆன்மிகப் பயிற்சிகள்.
162. மன்ரேசா குகையில் 11 மாதங்கள் இஞ்ஞாசியார் தங்கியிருக்கும் கட்டாயம் எதனால் ஏற்பட்டது?
பிளேக் என்னும் கொள்ளைநோய் பரவல்.
163. இறைவன் தமக்கு ஆன்மீகத்தை எவ்வாறு உணர்த்தியதாக இஞ்ஞாசியார் குறிப்பிடுகிறார்?
ஓர் ஆசிரியர் தம் மாணவனுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதுபோல.
164. மன்ரேசாவில் புனித லூசியா மருத்துவமனையில் இஞ்ஞாசியார் செய்த பணிகள் யாவை?
ஏழைகளுக்கும், நோயாளிகளுக்கும் உதவிபுரிந்தும், தமது அறிவுரைகளைக் கேட்க வருவோரிடம் ஆன்மீக வழிகாட்டலும் புரிந்தார்.
165. மன்ரேசாவிலிருந்தபோது இஞ்ஞாசியார் யாரிடம் சென்று முறையான வகையில் செபம் செய்வதற்கு கற்றுக்கொண்டார்?
ஜான் சானோன்.
166. இஞ்ஞாசியார் ஆன்மீகப் பயிற்சி முடித்துக்கொண்டு எங்கு சென்றார்?
எருசலேம் நகர்.
167. எதற்காக இஞ்ஞாசியார் எருசலேம் செல்ல விரும்பினார்?
புனித பூமியைப் பார்வையிட.
168. மன்ரேசாவிற்கு அருகே ஓடிய நதியின் பெயர் என்ன?
கார்தோனர்.
169. இஞ்ஞாசியார் உள்ளொளி அனுபவம் பெற்ற இடம் யாது?
கார்தோனர் ஆறு.
170. இஞ்ஞாசியார் தாம் பெற்ற ஆன்மீக அனுபவங்களுள் முதன்மையானதாக எதைக் கருதினார்?
கார்தோனர் ஆற்றில் பெற்ற உள்ளொளி அனுபவம்.
171. கார்தோனர் ஆற்றில் இஞ்ஞாசியார் பெற்ற உள்ளொளி அனுபவங்களில் முதன்மையானவை யாவை?
இறைவன் படைத்தவை இறைவனிடமே திரும்புகின்றன, பாவத்தால் வீழ்ச்சியுற்று திரும்பச் செல்ல இயலாதவற்றிற்கு இறைமகன் இயேசு தம் பாடுகளால் மன்னிப்பளித்து இறைவனையடையும் வலிமையைத் தருகிறார்.
172. மன்ரேசாவைவிட்டு இஞ்ஞாசியார் பார்சலோனாவிற்கு எப்போது புறப்பட்டுச் சென்றார்?
1523 ஆம் ஆண்டின் தொடக்கத்தில்.
173. இஞ்ஞாசியார் பார்சலோனாவில் தங்குவதற்கு இடவசதி செய்து தர முன்வந்த சீமாட்டி யார்?
ஓநெறு பாஸ்குவால்.
174. புனித யுஸ்தோ ஆலயத்தில் மறையுரை கேட்டுக்கொண்டிருந்த இஞ்ஞாசியார் முகத்தில் தெய்வீக ஒளி வீசக் கண்டவர் யார்?
இசபெல் ரோசர்.
175. பார்சலோனாவிலிருந்து இஞ்ஞாசியார் புறப்பட்ட கப்பல் இத்தாலி கெயிட்டாத் துறைமுகத்தை வந்தடைய எத்தனை நாட்கள் ஆயிற்று?
5 நாட்கள்.
176. எருசலேம் செல்ல இஞ்ஞாசியார் எந்த திருத்தந்தையிடம் ஒப்புதல் இது பெற்றார்?
திருத்தந்தை ஆறாம் ஏட்ரியன்.
177. எருசலேம் செல்ல திருத்தந்தையிடம் இஞ்ஞாசியார் ஒப்புதல் பெற்ற நாள் எது?
05.04.1523 (இறை இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழா அன்று).
178. இஞ்ஞாசியார் எருசலேம் சென்ற சமயத்தில் அப்பகுதியில் பரவியிருந்த கொள்ளை நோய் எது?
பிளேக் நோய்.
179. பிளேக் நோய் பரவலால் வெனிஸ் நகருக்குள் செல்ல எது கட்டாயம் பெற வேண்டியிருந்தது?
உடல்நலச் சான்றிதழ்.
180. எந்த நகருக்குச் சென்று இஞ்ஞாசியார் உடல்நலச்சான்றிதழ் பெற்றார்?
பதுவா.
181. பதுவா நகரில் எந்தப் பேராலய வளாகத்தில் இஞ்ஞாசியார் தங்கியிருந்தார்?
புனித மாற்கு பேராலயம்.
182. எந்த நகரிலிருந்து இஞ்ஞாசியார் எருசலேம் செல்லும் கப்பலில் புறப்பட்டார்?
வெனிஸ் நகர்.
183. இஞ்ஞாசியார் எருசலேமிற்கு எவ்வழியில் சென்றார்?
வெனிஸ்-சைப்ரஸ்-லாஸ் சலீனாஸ்- ஜாஃபா- எருசலேம்.
184. இஞ்ஞாசியார் எருசலேமை வந்தடைந்த நாள் எது?
04.09.1523, வெள்ளிக்கிழமை.
185. புலத பூமியைப் பார்வையாட்ட பின் எத்தனை நாட்கள் எருசலேமில் தங்கியிருந்தார்?
செப்டம்பர் 10-22 எழு நாட்கள்
186. எருசலேமிலேயே பிரந்தரமாகத் தங்கிவிட இருஞாசியார் யாரை அணுசி அனுமதி கேட்டார்?
பிரான்சிஸ்கன் சபை அதிகாரிகள்,
187, எருசலேமில் நிரந்தரமாகத் தங்கிட அனுமதிகேட்ட இஞ்ஞாசியாரிடம் பிரான்சின்மகன் சபைத் தலைவர் என்ன கூறினார்?
"அனுமதி தர இயலாது. மீறித் தாங்கினால் உம்மைத் திருச்சபையிலிருந்து நீக்கவும் எமக்கு அதிகாரம் உண்டு" என்றார்.
188. இஞ்ஞாசியார் எருசலேமைவிட்டுத் திரும்பப் புறப்படும் முன் மீண்டும் காண விரும்பிய இடம் எது?
ஒலிவ மலை.
189. எருசலேம் பயணத்தை முடித்துக்கொண்டு இஞ்ஞாசியார் ஜோப்பாவிலிருந்து கப்பலேறிய நாள் எது?
03.10.1523.
190. எருசலேமிலிருந்து பார்சலோனா திரும்பும் வழியில் இஞ்ஞாசியார் எதைப் பற்றிச் சிந்தித்தார்?
பிறருக்குப் பயனுள்ளவகையில் திகழ முறையான கல்வி கற்க வேண்டுமென சிந்தித்தார்.
191. எந்த வயதில் இஞ்ஞாசியார் இலத்தீன் மொழியைக் கற்கத் தொடங்கினார்?
33 வயது.
192. இஞ்ஞாசியாருக்கு இலத்தீன் மொழியைக் கற்றுத் தந்தவர் யார்?
ஜெரோம் ஆர்டேவால்.
193. இஞ்ஞாசியார் எத்தனை ஆண்டுகள் இலத்தீன் மொழியைக் கற்றுத் தேர்ந்தார்?
இரண்டு ஆண்டுகள்.
194. இஞ்ஞாசியாரின் ஆசிரியர் ஜெரோம் அவரை எங்கு சேர்ந்து பயிலுமாறு அறிவுறுத்தினார்?
அல்கலா பல்கலைக்ககத்தில் மெய்யியல் பயில.
195. பார்சலோனாவில் இஞ்ஞாசியாரின் நண்பர்களாகத் திகழ்ந்த மூவர் யாவர்?
கலிக்ஸ்டோ , ஆர்டையாகா, லோப்பே தெ காசெரஸ்.
196. இஞ்ஞாசியார் கற்ற மெய்யியல் நூலின் ஆசிரியர் யார்?
பெரிய ஆல்பர்ட்.
197. எந்த நகரில் இஞ்ஞாசியார் மெய்யியல் கற்றார்?
அல்கலா.
198. எத்தனை ஆண்டுகள் மெய்யியல் நூலை இஞ்ஞாசியார் ஆழ்ந்து கற்றார்?
ஒன்றரை ஆண்டுகள்.
199. அல்கலா பல்கலைக்கழகத்தில் இஞ்ஞாசியார் கற்ற "வாக்கியங்கள்" நூலை எழுதியவர் யார்?
பட்டர் லோம்பர்டு. காதிடர்
200. அல்கலாவில் இஞ்ஞாசியாரையும் அவரது தோழர்களையும் தம் இல்லத்தில் தங்கவைத்த செல்வந்தர் யார்?
டான் தியேகோ தெ கியா.