அற்புதங்களின் அற்புதர் :
தூக்கிலிட்டு கொலை செய்யப்பட்ட இளைஞன் ஒருவரை ஐந்து வாரங்கள் கழித்து ஆண்டவர் இயேசுவின் பெயரால் உயிரோடு எழுப்பினார் நம் சந்தியாகப்பர். புனித சந்தியாகப்பரால் மனமாற்றப்பட்ட ஒரு மந்திரவாதியை அவன் தலைவனாயிருந்த இன்னொரு மந்திரவாதி ஹெர்மோகன்ஸ் மந்திரத்தால் கட்டிப்போட்டுவிட்டான். செய்தியறிந்த நம் தூயவர் நேரில் சென்று தன் கைக்குட்டையால் அவன் கட்டுக்களை அவிழ்த்தார். பின் ஹெர்மோகனஸ் என்ற மந்திரவாதியையும் மனந்திருப்பினார். இன்னும் பல அற்புதங்கள் புரிந்துள்ளார்
அந்த அளவுக்கு இயேசு இவருக்கு அதிகாரம் வழங்கியிருப்பது தூய சந்தியாகப்பர் ஆண்டவர் இயேசு விண்ணகம் சென்ற பின் கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் வாழ்ந்த புனிதமான, தன்னை 100% இயேசுவுக்கு அர்பணித்து வாழ்ந்த தவமான, வீரமான சாட்சிய வாழ்வே காரணம்..
ஜெபம் : எங்கள் அருமை பாதுகாவலரே எங்களுக்கு எது முடியாது, எது நடக்காது என்று நினைக்கிறோமோ அது உமக்கு மிக எளிது..ஆண்டவராகிய இயேசுவிடம் நீர் செல்வாக்கு பெற்றவர்தான் எங்களுக்கு தெறியும்...இன்று போல என்னை நீர் என்றும் காப்பது போல, உம் பிள்ளைகள் அனைவரையும் காப்பது போல இந்த உலகத்தில் உள்ள எல்லாரையும் காக்க உம்மிடம் மன்றாடுகிறேன்..
மீண்டும் வருவேன் ஆற்றல் தரும் அருட்துணையோடு