இந்தப்போரை பச்சைக் கொடி காட்டி துவக்கி வைத்தது யார்?
நம் நேசப்பிதா..
“ உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்குமிடையே பகையை உண்டாக்குவோம்; அவள் உன் தலையை நசுக்குவாள்; நீயோ அவளுடைய குதிங்காலைத் தீண்ட முயலுவாய் என்றார்.”
ஆதியாகமம் 3 : 15
இரண்டாம் போரின் பின்னனி என்ன?
பிதாவாகிய சர்வேசுரன் தன் சாயலாகவும் பாவனையாகவும் மனிதனைப் படைத்தார்.. தன் உயிர் மூச்சை ஊதி.. அதாவது தன் ஆன்மாவை அவனுக்குள் வைத்து படைத்தார்..
அப்படி படைக்கப்பட்ட முதல் படைப்பான.. அதுவும் அமல உற்பவ படைப்பான ( பாவமில்லாத படைப்பான) பரிசுத்த படைப்பாக படைக்கப்பட்ட முதல் படைப்புகள் ஆதாமும், ஏவாளும்..
எத்தனையோ ஆண்டுகள் கடவுளோடு பேசிக்கொண்டும், உறையாடிக்கொண்டும்.. இனிமையாக.. மகிழ்ச்சியாக.. பரிசுத்தமாக வாழ்ந்து வந்தார்கள் நம் ஆதிப்பெற்றோர்கள்..
அதைப் பார்த்து பிசாசு சும்மா இருக்குமா?
“ தான் அனுபவித்த மோட்சத்தை.. தான் இழந்த மோட்சத்தை.. இந்த மனிதர்கள் எப்படி அனுபவிப்பது..? அதுவும் கடவுளுக்கு மிக அருகில் அவரோடு எப்படி ஒட்டி உறவாடுவது .. விடக்கூடாது” என்று முடிவு செய்தது..
“ஏனெனில் அழியாமைக்கென்றே கடவுள் மனிதனைப் படைத்தார், தமது காலங்கடந்த தன்மையின் சாயலாகவே அவனை உண்டாக்கினார்.
ஆனால் பசாசின் பொறாமையால் சாவு உலகில் நுழைந்தது.”
ஞான ஆகமம் 2 : 23-24
ஆக பிசாசின் பொறாமையால் பாவம் உலகிற்கு வந்தது..
பொறாமை பிடித்த பிசாசு முதலில் ஏவாளை ஏமாற்றி.. அவள் மூலமாக ஆதாமையும் ஏமாற்றி பாவத்தை உலகிற்கு கொண்டு வந்தது..
கடவுள் ஆதாமுக்கும்.. ஏவாளுக்கும்.. 10 கட்டளைகளா கொடுத்தார்..?
ஒரே ஒரு கட்டளை கொடுத்தார்.. சிம்பிள் கட்டளை.. ஆனால் அதைக் கூட அவர்களால் கடைபிடிக்க முடியவில்லை..
பிசாசை நம்பிய ஆதாமும், ஏவாளும்.. கடவுளை நம்பவில்லை..
போச்சு… எல்லாம் போச்சு..
நேற்றைய பகுதியை திருப்பிப் படித்தால் தெரியும்..
அன்று லூசிபர் செய்த அதே வேலையைத்தான் இவர்களும் செய்தார்கள்..
அது கடவுளுக்கு சென்று அதன் அரியணையை அமைக்க முடிவு செய்தது..
ஆதிப்பெற்றோரை கடவுளைப் போல மாறுவீர்கள் என்று ஆசைக் காட்டி கடவுளின் கட்டளையை மீறச்செய்தது.. பழத்தை சாப்பிட்டது.. பிரச்சனையல்ல.. கடவுளின் கட்டளையை மீறியதுதான் பிரச்சனை.. தப்பு.. பாவம்..
அவர்களுக்கு அந்தப்பழத்தை சாப்பிட ஆசை வந்தால் என்ன செய்திருக்க வேண்டும்..
“ அப்பா! பிதாவே! அந்த பழத்தை சாப்பிடக்கூடாதுன்னு சொன்னீர்களே.. எதற்கு சொன்னீங்க.. எங்களுக்கு கொஞ்சம் சொல்லுங்க..எங்களுக்கு அதை விளக்குங்க.” னு கேட்டிருக்கலாம்..
“ பிதாவே.. அந்த பழம் சாப்பிட ஆசையா இருக்கு.. ஒரே ஒரு தடவை சாப்பிடட்டுமா” னு அனுமதி கேட்டிருக்கலாம் அல்லவா..
பசாசின் பேச்சை நம்பியவர்களுக்கு நன்மையே உருவான கடவுளின் பேச்சை நம்ப முடியாமல் போய்விட்டது..
போச்சு எல்லாம் போச்சு..
இப்ப கூட நாம நிறைய நேரம் பிசாசின் பேச்சைத்தான் கேட்கிறோமே தவிர கடவுளின் பேச்சை கேட்பது இல்லை..
ஒரு விதி மீறலால்.. ஒரு கட்டளை மீறலால்.. பாவம் உலகிற்கு வந்ததும்.. பிதாவுக்கு நினைவுக்கு வந்தது யார் ?
தேவ மாதா தானே..
உயிர் வாழ்வோர் அனைவருக்கும் தாயாக இருந்திருக்க வேண்டிய ஏவாள் ( ஆதி 3: 20) அவளுடைய தகுதியை இழந்ததும்.. பிதாவுக்கு நினைவுக்கு அந்த இடத்திற்கு தகுதியாக பிதாவின் சிந்தைக்கு வந்த பெண் யார்?
நம் தேவ மாதா..
பிசாசு செய்த முதல் தப்பிற்கு வானத்திலிருந்து அதை இறக்கி பாதாளத்திற்கு தள்ளி தண்டனை கொடுத்த பிதா.. அது செய்த இரண்டாவது தப்பிற்கு தண்டணையாக அதை எதிர்த்துப் போரிடவும்.. அதன் தலையை மிதிக்கவும்.. அதற்கு இன்னொரு ஆளை ஏற்படுத்தி கூடவே ஒரு ஜென்ம பகையையும் ஏற்படுத்துகிறார்? அப்படி பிதாவால் நியமிக்கப்பட்ட அந்த பெண் யார் ?
நம் தேவ மாதா..
ஆதியாகமத்தில் தொடங்கிய போர்.. திருவெளிப்பாட்டிலும் தொடர்கிறதே..
“பேறு காலமான அப்பெண்முன் பறவைநாகம் நின்றது;”
திருவெளிப்பாடு 12 : 4
“தான் மண்மீது வீழ்த்தப்பட்டதைக் கண்டதும் பறவை நாகம் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த அப்பெண்ணைத் துரத்திச் சென்றது”
திருவெளிப்பாடு 12 : 13
“அப்பெண்ணை வெள்ளம் அடித்துச் செல்லும் பொருட்டு அவள் பின்னால் பறவைநாகம் தன் வாயினின்று ஆறுபோல் தண்ணீர் பாயச் செய்தது.”
திருவெளிப்பாடு 12 : 15..
சண்டை நடக்குதா இல்லையா? ஆதியாகமத்தில் ( தொடக்க நூலில்) ஆரம்பித்த சண்டை திருவெளிப்பாட்டிலும் தொடர்கிறதா இல்லையா?
ஆதியாகமத்திற்கும் திருவெளிப்பாட்டிற்கும் லிங்க் (தொடர்பு) இருக்கா இல்லையா?
பிசாசுக்கும் மாதாவுக்கும் சண்டை..
“ஆனால் பாலைவனத்தில் குறிக்கப்பட்ட இடத்திற்குப் பறந்து செல்லும்படி பெருங் கழுதின் சிறகுகள் அப்பெண்ணுக்கு அளிக்கப்பட்டன. அங்கே அப்பாம்பின் கையில் பிடிபடாமல் மூன்றரை ஆண்டுக்காலம் பேணப்படுவாள்..”
திருவெளிப்பாடு 12 : 14
“அங்கே ஆயிரத்து இருநூற்று அறுபது நாட்கள் அவளைப் பேணும்படி கடவுள் ஓரிடத்தை ஏற்பாடு செய்திருந்தார்.”
திருவெளிப்பாடு 12 : 6
இங்கே மாதாவிற்கு துணை நிற்பது யார்? கடவுள்..
இந்தப் போரை மாதா செய்தாலும்.. பின்னால் இருந்து மாதாவிற்கு அளவற்ற வல்லைமையை கொடுப்பது யார்? கடவுள்..
ஆக..இரண்டாவது சண்டையிலும்.. அதாவது போரிலும் பிசாசுக்கு தோல்வி..
அப்படியென்றால்.. மூன்றாவது போர் யாரோடு.. ?
கடவுளுக்கு சித்தமானால்.. மூன்றாவது போர் அடுத்த பகுதியில்..
நன்றி : விளக்கம், வாழும் ஜெபமாலை இயக்கம்..
நம் நேசப் பிதா வாழ்த்தப்பெறுவாராக!
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !