போர் புரிவது..
யாருக்கு எதிராக போர் புரிவது??
பிசாசுக்கு எதிராக..!!
ஆனால் இப்போது போர் கொஞ்சம் உக்கிரமாக நடப்பதால் முழுப்பலத்தோடு போர் செய்ய வேண்டும்..
போர் செய்ய வேண்டுமென்றால் அதற்கு தளவாடக் கருவிகள் வேண்டுமல்லவா?
அந்த தளவாடக் கருவிகள் என்ன?
அதற்கு முன் போர் இப்போது உக்கிரமாக நடக்கிறது என்று சொல்லப்பட்டதல்லவா.. அதைப் பார்த்து விடுவோமா?
“வையகமே, பெருங்கடலே உங்களுக்கு ஐயோ கேடு! அலகை கடுங் கோபத்துடன் உங்களிடம் வந்துள்ளது. தனக்கு எஞ்சியிருப்பது சிறிது காலமே" என்று அதற்குத் தெரியும்.”
திருவெளிப்பாடு 12 : 12
பிசாசு கடுங்கோபத்தோடு வந்திருக்கிறதாம்.. அதன் Chapter குளோசாக, அவன் கதை முடிய இன்னும் சில காலம்தான் இருக்காம்.. அதனால அது நரகத்துல இருந்து கிளம்பி பூமிக்கு வந்திருக்காம்..
அதனால பூமியில இருக்கிற நாம உஷாரா இருக்கனும்னு இந்த இறை வார்த்தை சொல்லுது..
இதையேதான் நம்ம இராயப்பரும் சொல்றார்..
“தெளிந்த மனத்தோடு விழிப்பாயிருங்கள்; ஏனெனில், உங்கள் எதிரியான அலகை, கர்ஜிக்கும் சிங்கம்போல் யாரை விழுங்கலாமெனத் தேடித் திரிகிறது.”
1 இராயப்பர் (பேதுரு) 5 : 8
பிசாசு பூமியிலதான் இருக்கு.. ஆன்மாக்களை கெடுக்க..
அப்படின்னா இன்னொரு ஒரு ஆளும் பூமியில இருந்தாகனும் தன் பிள்ளைகளின் ஆன்மாக்களை பிசாசிடம் இருந்து காப்பாற்ற..
அவங்களும் பூமியிலதான் இருக்காங்களானு பார்ப்போம்..
அதற்கும் முன்னால ஒரே ஒரு லிங்கை (தொடர்பு) பார்த்துவிடுவோம்..
இது எதுக்குன்னா எதிரி யாருன்னு தெளிவா தெரிஞ்சாதானே.. அவன் பலம் என்ன ? பலவீனம் என்ன ? என்னனு தெரிஞ்சி நாம அவனுக்கு எதிராக போர் செய்ய முடியும் அவன் யார் என்று சொல்வதை விட அது என்ன ? என்று பார்ப்போம்..
ஆதியாகமத்தில் ஏவாளிடம் பாம்பு வாலாட்டியபோது அதில் பாம்பு என்றே குறிப்பிடப்பட்டுள்ளது..
“பாம்பு பெண்ணை நோக்கி: நீங்கள் உண்மையில் சாகவே மாட்டீர்கள்;”
ஆதியாகமம் 3 : 4
அங்கே பாம்பு என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.. அந்த பாம்புதான் பிசாசு என்பதற்கு ஆதாரம் திருவெளிப்பாட்டில் இருக்கிறது..
“அலகை என்றும் சாத்தான் என்றும் அழைக்கப்படும் அதுவே ஆதியில் தோன்றிய பாம்பு; உலகனைத்தையும் வஞ்சிப்பதும் அதுவே.”
திருவெளிப்பாடு 12 : 9
இப்போ ஆதியாகத்திற்கும் (தொடக்க நூல்) திருவெளிப்பாட்டிற்கும் லிங்க் இருக்கா?
இதைத்தான் இசையாஸ் இறைவாக்கினர்.. தெளிவாகச் சொல்லுகிறார்..
“ஆண்டவரின் நூலில் கவனமாய்த் தேடிப் படியுங்கள், இவற்றுள் ஒன்றும் குறைந்து போகாது; ஒன்றுக்கொன்று துணையின்றிப் போய் விடாது;”
இசையாஸ் (ஏசாயா) 34 : 16
அங்க ஒன்னு எடுத்து இங்க ஒன்னு எடுத்து அதற்கு வாய்க்கு வந்தபடியெல்லாம் விளக்கம் சொல்லக் கூடாது..
இப்போ பாருங்க பிசாசோட சின்சியர் டூட்டி (வேலை) என்னனா.. எப்படியாவது ஆன்மாக்களை கெடுக்க வேண்டும்.. உலகனைத்தையும் வஞ்சிக்க வேண்டும்.. மக்களை கடவுளிடம் இருந்து பிரித்து நரகத்திற்கு கூட்டிச் செல்ல வேண்டும்.. என்பதே அதன் குறிக்கோள்..
இப்போ நாம தெளிவா பார்த்துட்டோம்.. பிசாசு யார்? அதோட வேலை என்ன? அது எங்கே இருக்கிறதுன்னும் பார்த்துட்டோம்.. இன்னொரு நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விசயம்.. பிசாசு தன்னை பிசாசு என்று காட்டிக்கொள்ளாமல் வேறு உருவத்தில்தான் வரும்.. ஏன் சம்மனசு போலக்கூட வரும்.. இப்போ அது பாம்பு உருவத்தில் வந்தால் நாம் கண்டுபிடித்துவிடுவோமல்லவா.. அதனால் அது இப்போது நிறைய இடங்களில் சம்மனசு போலவே அலைகிறது..
அது அதன் கூட்டாளிகளோடு வந்து ஆன்மாக்களை கெடுக்க போர் செய்கிறது என்றால்.. கடவுளின் கேப்டன் ஆன்மாக்களைக் காப்பாற்ற அதற்கு எதிராக போர் செய்ய அவர்களும் பூமியில்தானே இருக்க வேண்டும்?
அதை கடவுளுக்கு சித்தமானால் அடுத்த பகுதியில் பார்ப்போம்..
மேலே பார்த்தோம் போர் உக்கிரமாக நடக்கிறது. நாம் போர் செய்தே ஆக வேண்டும்..
போருக்கு நாம் தளவாடக் கருவியாக பயன்படுத்துகிற முக்கியமான ஆயுதம் ஜெபமாலை..
ஜெபமாலை ஜெபிக்க ஜெபிக்கதான் நம் கேப்டன் மாதா வலிமையடைந்து போர் செய்வார்கள்.. நாமும் வலிமை அடைந்து அவர்களோடு இணைந்து பிசாசுக்கு எதிராக போர் செய்வோம்..
எவ்வளவு உக்கிரமாக எதிரி போர் செய்தாலும், நாமும் அவனை விட அதிகமாக வலிமை அடைந்து போர் செய்ய கண்டிப்பாக ஜெபமாலை ஜெபித்துத்தான் போர் செய்ய வேண்டும்..
மாதா நமக்காக.. தன் பிள்ளைகளுக்காக பூமியில்தான் இருக்கிறார்கள்.. கடவுளுக்கு சித்தமானால் அடுத்த பகுதியில்..
ஜெபமாலை இராக்கினியாய் வந்து ஜெயம் தரும் மாமரி வாழியவே
ஜெபிப்போம்… ஜெபிப்போம் ஜெபமாலை..
நன்றி : விளக்கம் & பாடல், வாமும் ஜெபமாலை இயக்கம்..
நம் நேசப் பிதா வாழ்த்தெப் பெறுவாராக !
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !