மாதா இனை மீட்பர் என்பதற்கு பல காரணங்கள் உள்ளது.. பல புனிதர்கள்.. மறை நூல் வல்லுநர்கள், மற்றும் பெரியவர்கள் பலர் சொல்லியிருக்கிறார்கள்.. நாமும் ஒரு சிலவற்றைப் பார்ப்போம்..
இயேசு ஆண்டவரின் பிறப்பு முதல் இறப்பு வரை நம் தேவமாதா உடன் இருந்தார்கள்.. பிதாவின் திட்டத்திற்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்தார்கள்.. “ இதோ ஆண்டவரின் அடிமை உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும் “ என்று சொல்லிய நேரம் முதல் நம் ஆண்டவரின் கல்வாரி பலிவரை மட்டும் அல்ல.. அதன் பின்பும் திருச்சபையை பாதுகாத்து கிறிஸ்தவம் வளர தன் மரணம் வரை உழைத்தார்கள்; ஜெபித்தார்கள்; ஆலோசனை கூறினார்கள்; உதவி செய்தார்கள்; ஊக்கமூட்டினார்கள்; வளர்த்தார்கள்..
மேலே உள்ள காரணங்களே போதுமானதாக இருக்க மேலும் ஒரு இரண்டு விசயங்களை மட்டும் பார்ப்போம்….
இயேசு ஆண்டவரின் சொல்லொன்னா பாடுகள்.. ஆண்டவர் இரத்தவியர்வை வியர்த்தது, விசாரணைக்காக அலைக்கழிக்கப்பட்டது, கசையடி, இரகசிய உபாதைகள் 15, முள்முடி, சிலுவை சுமத்தல், வேதனையின் சிகரமான சிலுவையில் அறையப்படுதல் அதற்கு மேலும் வேதனைக்களமான மூன்று மணி நேரம் சிலுவையில் தொங்கி பரிகாரம் செய்து நம்மை மீட்டார்..
இயேசுவின் கொடிய சிலுவைப்பாடுகளின் போது ஆண்டவருக்கு மோட்சம் அடைக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே.. மோட்சம் அடைக்கப்பட்ட காரணம் ஆண்டவர் அந்த ஆறுதல் கூட இல்லாமல் அதையும் பரிகாரமாக ஒப்புக்கொடுத்து நம்மை மீட்க வேண்டும் என்பது பிதாவின் சித்தம். ஏனென்றால் நம்முடைய பாவம் அந்த அளவிற்கு மோசமானமும், கொடியதும், அருவறுப்புமானதாக இருந்தது..
ஆனாலும் ஆண்டவர் இத்தகைய கொடுமையான பாடுகளை தாங்க ஏதாவது ஒரு சக்தியில்லாமல் அதைச் செய்ய முடியாது.. அந்த சக்தியை அவருக்கு கொடுக்க பிதாவான நம் சர்வேசுவரன் நம் இயேசு ஆண்டவரின் மீது மனமிரங்கி அவருக்கு இன்னொரு மோட்சத்தைக் கொடுத்தார்.. அந்த மோட்சம் யார் அவர்தான் நம் தேவமாதா.. நம் தாயார் நமக்கு அருகில் இருப்பதே நமக்கு பலமாக தெரிய தெய்வத்தாய்.. நம் தெய்வீகத்தாய் அருகில் இருந்தால் ஆண்டவரால் அந்த அளப்பெரிய சாதனையைச் செய்ய முடியாதா என்ன?
வேதனையின்… விளிம்பில் வேதனையின் உச்சத்தில் நம் ஆண்டவரிடமிருந்து ஒரு ஏக்கக் குரல்…
“ என் கடவுளே ! என் கடவுளே ! ஏன் என்னைக் கைவிட்டீர் “ என்று சொன்ன பின்பும் நம் ஆண்டவரால் எப்படி நம்மை மீட்க முடிந்தது.. “ எல்லாம் நிறைவேறிற்று “ என்று சொல்ல முடிந்தது என்றால் அது யாரால்… யாருடைய உடனிருத்தலால்.. யாருடைய ஜெபத்தால்.அது நடந்தது. அது நம் தெய்வீகத்தாயால் மட்டுமே நிகழ்ந்தது.. அதனால்தான் அவர் இனை மீட்பர்.
நாம் எல்லோருமே நம் இயேசு ஆண்டவரின் சிலுவைப்பாடுகளில் ஒரு பக்கத்தை மட்டுமே பார்க்கிறோம்.. தியானிக்கிறோம்.. உருகுகிறோம்.. ஆனால் ஆண்டவருடைய பாடுகளுக்கு பின்னால் இருக்கும் மறுபக்கத்தை பார்க்க தவறி விடுகிறோம்..
அதுதான் நம் தேவ தாய் அனுபவித்த சொல்லொன்னா வேதனை, ஆண்டவரின் பாடுகளுக்கு கிட்டத்தட்ட சமமான வியாகுல வேதனை சிகரம்.. உலகத்தாய்மார்கள் தன் மகன் கால் கல்லில் மோதி அவன் கீழே விழ பொருக்காமல் அழுகைஇருக்க உலகத்திற்கே தாயான மாதாவின் கண் முன்னே எத்தனை கோர வேதனைகள்; சித்திரவதைகள், ஏளனங்கள், பேச்சுக்கள் ஏச்சுக்கள் அனுபவித்தார் அவர் குமாரன்.. அவர் குமாரனுக்கு அந்த நிலமை என்றால் அவர்கள் அவர்தாயாரை சும்மாவா விட்டிருப்பார்கள்..
ஒருவன் நல்லவன் என்று பெயர் வாங்கினாலும், தீயவன் என்று பெயர் வாங்கினாலும் பாராட்டும், ஏச்சும் யாருக்கு போய் சேரும்..அவன் தாயாருக்குத்தான் போய் சேரும். அதுவும் நம் தேவதாயின் மகனை கடவுளின் துரோகி என்றளவுக்கு நடத்தி இழிவுச்சாவான சிலுவைச்சாவிற்கு அழைத்துச் செல்லும்போது .. நம் தேவமாதாவை எப்படி நடத்தியிருப்பார்கள்.. அதில் அடி, உதை, தள்ளுதல் கேவலமான பேச்சுக்களும் அடங்கியிருக்கலாம்..
நம் நேச ஆண்டவரின் பாடுகளின் மருபக்கத்தை அதாவது நம் நேசத்தாயின் பாடுகளையும் வியாகுலத்தையும் பார்க்கும்போது நம் மீட்பில் மாதாவின் இனை மீட்பரின் பணியை நம்மால் உணர முடியும்..
நம் ஆண்டவரின் ஒரு பக்கம் புனித வெள்ளியோடு முடிவுற்றாலும், மறுபக்கம் இரண்டு மடங்காக ஆண்டவரின் உயிர்ப்புவரை நீடித்தது..
பலி ஆன்மாவும், பரிகார ஆன்மாவும்.. ஆண்டவரின் பிறப்பு முதல் இறப்பு வரை தங்கள் பணிகளை மாற்றி மாற்றி செய்துகொண்டே இருந்தது..
அதனால்தான் மீட்பை மீட்பர் தந்தாலும் அந்த மீட்பில் உடனிருந்து தானும் தன்னுடைய பங்கிற்கு உழைத்து அதை வாங்கி.. தாங்கி.. பெற்றுத்தந்தால் மாதா இனை மீட்பராக ஆகிறார்கள்..
இதை எந்த தயக்கும் இல்லாமல் உறுதியாக கூரை மீது நின்று அறிவிக்க முடியும்..
இரண்டாவது காரணத்தை அடுத்த பகுதியில் பார்க்கலாம்..
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !