எட்டு நூற்றாண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த புனித சந்தியாகப்பரின் கல்லறை கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு..
இயேசு சுவாமியின் கிண்ணத்தில் பருகிய தூய சந்தியாகப்பருக்கு இறைவன் இயேசு அளித்த மகிமை. தூய யாகப்பரின் கல்லறை கிட்டதட்ட எட்டு நூற்றாண்டுகள் மறக்கப்பட்டு மறைக்கப்பட்டு இருந்தன.
சந்தியாகப்பரின் பக்தர் புனித வாழ்க்கை வாழ்ந்த துறவி பிலாகியா (இவர் குருவானவர் அல்லது ஆயராக இருக்க வேண்டும்) சந்தியாகப்பர் புதைக்கப்பட்ட இடத்தை தேடி அலைந்தார் ஜெபத்தோடு. அப்படி அலைந்து திரிந்த அவர் ஒரு இடத்திற்கு வந்தார்.
அங்கு அவர் ஜெபித்துக்கொண்டிருந்த போது திடீரென அந்த இடம் ஒளி வெள்ளத்தால் நிரம்பியது. வானில் ஒரு ஒளி தோன்றியது. அந்த ஒளி நட்சத்திர வடிவில் காட்சி தந்தது. புனித சந்தியாகப்பரை அடக்கம் செய்த இடமும் ஒரு நட்சத்திர வடிவில் காட்சி அளித்தது. தேடியவர் கண்டுபிடித்துவிட்டார். சந்தியாகப்பர் கல்லறை கண்டு பிடிக்கக்கப்பட்ட ஆண்டுதான் கி.பி. 821-ம் ஆண்டு ஜூலை 25. அதனால்தான் புனித சந்தியாகப்பரின் திருவிழா ஜூலை 25 அன்று உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது.
அதன் பிறகு அவர் கல்லறையை திறந்த போது 800 ஆண்டுகளுக்கும் மேலாக அவரது உடலில் சில பாகங்கள் அழியாமல் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்ட்து.. அவரது கல்லறை இருந்த இடம்தான் “ கொம்பெஸ்தெல்லா “என்று அழைக்கப்படுகிறது அதற்கு “ ஒளியின் இடம் “ (Field of light) என்று பொருள். நட்சத்திர இடம் ( Starry Field ) என்றும் பொருள். அவரது கல்லறை இருந்த இடத்தில் அழகான மற்றும் மிகப்பெரிய ஆலயம் கட்டப்பட்டுள்ளது. ஏராளமான அற்புதங்கள் நிகழும் இந்த ஆலயத்திற்கு உலகெங்கிலும் திருப்பயணிகள் கால் நடை பயணமாக வந்து கொண்டிருக்கிறார்கள். வகிக்கிறதுஅந்த இடம் இன்றும் சந்தியாகு த கொம்பெஸ்தெல்லா (Santiago De Compostela) என்று அழைக்கப்படுகிறது. உலகமெங்கும் அதிகமான திருப்பயணிகக் வருவதில் முதல் இடம் வகிக்கிறது ‘Santiago De Compostela’.
Way of St.James என்று google ல் டைப் செய்தால் இதைப்பற்றி இன்னும் விரிவாக தெறிந்து கொள்ளலாம். அவரது கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது அல்பான்சோ-II (Alfonso-II) என்ற மன்னன் ஆட்சி காலத்தில். அப்போதே ஆலயம் கட்டப்பட்டது.
அவரது கல்லறை கண்டுபிடிக்கப்பட்டு ஆலயம் எழுப்பபட்டாலும் அவரது அழியாமல் மிதமிருந்த திருவுடலைப் பற்றிய ஆராய்ச்சி மற்றும் விசாரணை நடந்து கொண்டே இருந்தது...கத்தொலிக்க திருச்சபைக்கு என்று பல விதி முறைகள் உள்ளன. எந்த அற்புதங்கள் யாருக்கு நிகழ்ந்தாலும், இது போன்ற புனிதர்கள் உடல்கள் அழியாத நிலையில் கண்டுபிடிக்கப்பட்டாலும் முழுமையான விசாரணை (Investigation) செய்யப்பட்டு ஊர்ஜிதம் செய்யப்பட்டால்தான் அதை முறையாக போப்தான் அறிவிப்பார்..
இந்த விசாரணையில் அனைத்து புனிதர்களும் அடங்குவர்.. இதில் இயேசுவின் ஐந்து காயங்கள் வரம் பெற்ற தந்தை பியோ மற்றும் அன்னையின் திருக்காட்சிகள் பாத்திமா நகர் திருக்காட்சி, லூர்து நகர் திருக்காட்சியும் அடங்கும்..புனித யாகப்பருக்கும் நடந்தது ஆராய்ச்சி.. இரியா ஃபிளாவியாவின் பிசப் (bishop of Iria Flavia) தியோட்மிரின் விசாரணையின் முடிவில் அது உண்மையாகவே தூய யாகப்பரின் திருவுடல்தான் என்று கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அது அறிவிக்கப்பட்டது கி.பி 1884 – ல் போப் ஆண்டவர் லியோன் XIII காலத்தில்தான் (ஏன் இத்தனை ஆண்டுகள் என்று கேள்விகள் வரலாம். ஒரு சில விஷயங்கள் முடிவு செய்த பின்பும் அறிவிக்கப்படாமல் இருந்திருக்கலாம். இவர் அதை அறிவித்திருக்கலாம்.
மேலும் இந்த போப் ஆண்டவர் மரியியல், ஜெபமாலை மற்றும் உத்தரிய பக்தியை ஊக்குவித்தவர். இவருக்கு “ ஜெபமாலை போப் ஆண்டவர் “ என்ற பெயரும் உண்டு. இப்போது உங்களுக்குத் தெரியும். தேவ மாதாவால் நேசிக்கப்பட்ட சந்தியாகப்பரை பற்றிய கண்டுபிடிக்கப்பட்ட ஆராய்ச்சி உண்மையை இவர் அறிவிக்காமால் இருப்பாரா என்ன)
ஜெபம் : தூய யாகப்பர் இறைவன் இயேசுவுக்காக தன் உதிரம் சிந்தி, உயிரை உயிரையே கொடுத்து இயேசுவுக்கு மகிமை செய்ய, அவர் தூய யாகப்பருக்கு மகிமை செய்கிறார்.. இப்போது எனக்கு குழந்தை இயேசுவின் புகழ் பெற்ற வார்த்தை நினைவுக்கு வருகிறது..” நீ என்னை மகிமை செய்ய செய்ய நான் உன்னை மென்மேலும் ஆசீர்வதிப்பேன் “ என்பது..
எல்லாம் வல்ல இறைவா நாங்களும் தூய யாகப்பரைப்போல உமக்கு மகிமையாய் விளங்க எங்களை ஆசீர்வதியும்...
மேலும் “ ஜெபமாலை போப் ஆண்டவர்” என்று அறிவிக்கப்பட்ட அந்த போப் ஆண்டவர் போல் நாங்களும் ஜெபமாலை மற்றும் உத்தரிய பக்தியில் உறுதியாக இருக்கும் வரத்தையும் எங்களுக்குப் பெற்றுத்தாரும் எங்கள் அருமைப் புனிதரே ! பாதுகாவலரே ! ஆமென்.
மீண்டும் வருவேன் ஆற்றல் தரும் அருட்காவலின் துணையோடு...
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !