வினா-விடைகள் 201 முதல் 250 வரை.

201. அல்கலாவில் மக்கள் இஞ்ஞாசியாரையும் அவரது நண்பர்களையும் எவ்வாறு கேலியாக அழைத்தனர்?

என்சயீலாதோஸ், அலும்பிராதோஸ். 

202. "என்சயீலாதோஸ்" என்னும் ஸ்பானியச் சொல்லின் பொருள் யாது?

சாக்குத்துணி அணிவோர். 

203. "அலும்பிராதோஸ்" என்பதன் பொருள் யாது? 

உள்ளொளி பெற்றோர். 

204. அல்கலாவில் தொலீதோ விசாரணை மன்றத்தார் இஞ்ஞாசியாரிடமும் அவரது நண்பர்களிடமும் எவற்றை விசாரித்தனர்? 

வாழ்க்கைமுறை, போதனைகள்.

205. அல்கலாவில் விசாரணை மன்றத்தாரிடம் இஞ்ஞாசியார் மீது சுமத்தப்பட்ட குற்றம் யாது?

இறையியல் கற்காமல் மக்களிடம் ஞான காரியங்களைப் பேசியது குற்றம். 

206. துறவிகளாக இல்லாததால் இஞ்ஞாசியாரையும், அவரது நண்பர்களையும் ஒரே மாதிரியான சாக்குத்துணி ஆடைகளை அணியக்கூடாதென்று தீர்ப்பு வழங்கியவர் யார்?

பேரரசரின் பிரதிநிதி ஃபிகுவேரா. 

207. திருச்சபையின் நீதிமன்றம் அவர்களது உடைகள் குறித்து முதலில் வழங்கிய தீர்ப்பு யாது?

உடைகளை முழுமையாக மாற்றிக்கொள்ள வேண்டும். 

208. உடைகளை கறுப்புநிறச் சாயத்தில் தோய்த்துக்கொள்ள வேண்டுமென்று ஃபிகுவேரா யார் யாருக்குக் கட்டளையிட்டார்? 

இஞ்ஞாசியார், ஆர்டையாகா.

209. உடைகளை பழுப்புநிறச் சாயத்தில் தோய்த்துக்கொள்ள வேண்டுமென்று ஃபிகுவேரா யார் யாருக்குக் கட்டளையிட்டார்?

கலிக்ஸ்டோ , லோப்பே தெகாசெராஸ். 

210. இஞ்ஞாசியாருக்கு அல்கலா விசாரணை மன்றம் வழங்கிய தண்டனை யாது?

42 நாட்கள் சிறை. 

211. இஞ்ஞாசியார் சிறையிலிருந்தபோது அவரை விடுவிக்க முயன்றவர் யார்?

தெரெசா தெ கார்தெனாஸ். 

212. இஞ்ஞாசியார் சிறையிலிருந்தபோது அவரோடு சிறையில் தங்கியவர் யார்?

இஞ்ஞாசியாரது நண்பர் கலிக்ஸ்டோ . 

213. சிறைத்தண்டனை முடிந்த பிறகு விசாரணைமன்றத்தார் என்ன சொல்லி எச்சரித்து இஞ்ஞாசியாரை விடுதலை செய்தனர்? 

நான்கு ஆண்டுகள் படிப்பை முடிக்கும்வரை ஞானகாரியங்களைப் பற்றி யாரிடமும் பேசக்கூடாது என எச்சரித்து விடுவித்தனர். 

214. அல்கலாவில் இஞ்ஞாசியார் எத்தனை ஆண்டுகள் பயின்றார்?

ஒன்றரை ஆண்டுகள். 

215. அல்கலாவில் விடுதலை பெற்ற இஞ்ஞாசியார் எங்கு சென்றார்?

சலமான்கா பல்கலைக்கழகம். 

216. அற்பப்பாவம், கனமான பாவம் பற்றி விளக்கம் தரக்கூடாது என்று இஞ்ஞாசியாருக்குத் தடை விதித்த இடம் எது?

சலமான்கா. 

217. சலமான்காவில் இஞ்ஞாசியாரின் போதனைகளைச் சந்தேகித்தவர்கள் யார்?

தொமினிக்கன் சபைத் துறவிகள். 

218. இஞ்ஞாசியார் சலமான்கா சிறையில் எத்தனை நாட்கள் அடைக்கப்பட்டிருந்தார்?

22 நாட்கள். 

219. தற்கொலை செய்து கொள்வது இறைவனுக்கு விருப்பமில்லாத பெரும்பாவச் செயல் என்றுணர்ந்த இஞ்ஞாசியார் அவ்வெண்ணத்தை விரட்டியடித்த நிகழ்வு எங்கு நடந்தது?

சலமான்காவிலுள்ள தொமினிக்கன் சபைத் துறவியர் மடம். 

220. சலமான்காவில் இஞ்ஞாசியாரை விசாரித்த விசாரணைமன்றத் தலைவர் யார்? 

செவில் நகரப் பேராயர் அலான்சோ மான்ரீக்.

221. இஞ்ஞாசியாரை விசாரணைமன்றத் தலைவர் விடுவிக்கக் காரணம் யாது? 

எராஸ்மஸ் நூல்களிலுள்ள கோட்பாடுகள் போன்று திருச்சபைப் படிப்பினைகளுக்கு முரணானவை ஏதும் இஞ்ஞாசியாரின் ஆன்மிகப்பயிற்சிகள் நூலில் உள்ளதா? என ஆராய்ந்து அவ்வாறு ஏதுமில்லையென்பதால் விடுதலை செய்தார். 

222. சலமான்கா சிறைவாசத்திற்குப் பிறகு பாரீசுக்குச் செல்லும்போது இஞ்ஞாசியார் எவற்றைத் தன்னுடன் எடுத்துச் சென்றார்?

புத்தகங்கள். 

223. பாரீசு பல்கலைக்கழகம் செல்ல இஞ்ஞாசியார் தீர்மானித்ததற்கான காரணங்கள் யாவை? 

பிரெஞ்சு மொழியைக் கற்றுக் கொள்ளவும் ஸ்பெயின், போர்த்துக்கல் மாணவர்களிடம் நட்பைப்பெறவும். 

224. எந்த நாளில் இஞ்ஞாசியார் பாரீஸ் பல்கலைக்கழகம் வந்தார்?

02.02.1528. 

225. இஞ்ஞாசியார் காலத்தில் பாரீசு பல்கலைக்கழகத்தில் பயின்ற மாணவர்கள் எத்தனை பேர்?

நான்காயிரம் பேர். 

226. பாரீசு பல்கலைக்கழகத்தில் கற்றுக்கொடுக்கப்பட்ட கட்டாயப் பாடம் எது?

மெய்யியல். 

227. பாரீசு மொண்டேகியூ கல்லூரியில் இஞ்ஞாசியார் எத்தனை ஆண்டுகள், என்ன கற்றார்?

ஒன்றரை ஆண்டுகளுக்கு இலத்தீன் மொழியைக் கற்றார். 

228. மொண்டேகியூ கல்லூரியில் இஞ்ஞாசியார் எந்த வயதில் சிறு மாணவர்களுடன் சேர்ந்து இலத்தீன் கற்றார்?

37 ஆவது வயதில். 

229. இஞ்ஞாசியார் எந்தக் கல்லூரியில் மெய்யியல் பயின்றார்?

புனித பார்பரா கல்லூரி. 

230. புனித பார்பரா கல்லூரியில் எந்தெந்த நாடுகளைச் சார்ந்த மாணவர்கள் கல்வி பயின்றனர்?

ஸ்பெயின், போர்த்துக்கல். 

231. இஞ்ஞாசியார் தனது ஆன்மிகப் பயிற்சிகளை முதலில் எத்தனை நண்பர்களுக்கு வழங்கினார்? 

3 நண்பர்களுக்கு.

232. இஞ்ஞாசியாரின் ஆன்மிகப்பயிற்சிகள் என்னும் நூலிலுள்ள தியான முயற்சிகளைக் கற்றுக்கொண்ட பார்பரா கல்லூரி நன்பர்கள் யாவர்?

மவான் வகாஸ்டரா, பேத்ரோ தெ பெரால்டா. ஆமடோர் தெ எல்டூயான். 

233. இஞ்ஞாசியாரின் ஆன்மிகப் பயிற்சிகளைக் கற்ற அவரது நண்பர்கள் என்ன செய்தனர்? 

தங்களிடமிருந்த எல்லாவற்றையும் ஏழைகளுக்கு அளித்துவிட்டு விழைப்பிற்குப் பிச்சையெடுத்து புனித யாக்கோபு மருத்துவமனையில் தங்கி ஆன்மீகப்பணியில் ஈடுபட்டனர். 

234. பாசில் இஞ்ஞாசியார் தங்கியிருந்த புனித யாக்கோபு விடுதி அருகேயிருந்த ஆலயம் எது?

மாசில்லாக் குழந்தைகள் ஆலயம். 

235 இஞ்ஞாசியார் பயின்ற காலத்தில் புனித பார்பரா கல்லூரி முதல்வர் யார்?

மவோகோ தெ கூவயா. 

236 யோகோ தெ கூவயா எந்த நாட்டைச் சார்ந்தவர்?

போர்த்துக்கல், 

237.தம் மாணவர்களின் நடவடிக்கைகள் மாறியதைக் கேள்வியுற்ற கல்லூரி முதல்வர் டியோகோ இஞ்ஞாசியாருக்கு அறிவித்த தண்டனை யாது? 

எனை மாணவர்களுக்கும் முன்பாக இஞ்ஞாசியாரை மேலாடையின்றி நிறுத்தி ஆசிரியர் ஒருவர் சவுக்கடி தரவேண்டும். 

238. சவுக்கடி தண்டனையிலிருந்து இஞ்ஞாசியாரைக் காப்பாற்றி இஞ்ஞாசியாரை நிரபராதி என நிரூபித்தவர் யார்?

பார்சு விசாரணைமன்ற உறுப்பினர் மேத்யூ ஓரி. 

239. விசாரணைக்குப்பிறகு இஞ்ஞாசியார் எவ்வாறு வரவேண்டும் என புனித பார்பரா கல்லூரி நிர்வாகம் அறிவித்தது? 

இஞ்ஞாசியார் பார்பரா கல்லூரியில் இனி வெளிமாணவராகப் படிக்க இயலாது. ஏதேனுமொரு விடுதியில் தங்கிப் படிக்க வேண்டும். 

240. இஞ்ஞாசியார் யாருடைய விடுதியில் தங்கியிருந்து புனித பார்பரா கல்லூரியில் படிக்க உத்தரவு பெற்றார்?

பேராசிரியர் யூவான் பேஞா. 

241 பேராசிரியர் யூவான் பேஞா இல்லத்தில் தங்கிப்படித்த மாணவர்களில் இஞ்ஞாசியாரின் நெருங்கிய நண்பர்களாகத் திகழ்ந்த இருவர் யாவர்? 

டேர் ஃபேபர், பிரான்சிஸ் சவேரியார்

242. தனது 12 ஆம் வயதிலேயே தமது கற்பை இறைவனுக்கு அர்ப்பணித்த இஞ்ஞாசியாரின் நண்பர் யார்?

பீட்டர் ஃபேபர். 

243. தன்னிடம் கேட்காமலேயே பண உதவியை எந்த நண்பருக்கு இஞ்ஞாசியார் செய்தார்?

பிரான்சிஸ் சவேரியாருக்கு. 

244. "ஒருவன் உலகமெலாம் தனதாக்கிக் கொண்டாலும் தன் ஆன்மாவை இழப்பானாயின் அவனுக்கு வரும் பயனென்ன?" என்னும் இயேசுகிறிஸ்துவின் வார்த்தையை யார் யாருக்குக் கூறினார்? 

இஞ்ஞாசியார் சவேரியாருக்கு. 

245. இஞ்ஞாசியார் தம் இறையனுபவங்களை எப்பெயரில் நூலாக்கம் செய்தார்? 

ஆன்மிகப் பயிற்சிகள். 

246. இஞ்ஞாசியாரின் கண்காணிப்பில் ஒருமாதம் ஞான ஒடுக்கம் செய்தவர் யார்? 

பீட்டர் ஃபேபர். 

247. சவேரியார் ஞான ஒடுக்கம் பெறத் தாமதமானது ஏன்? 

போர்மான்ஸ் பூவே கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியதால். 

248. இஞ்ஞாசியாரின் தோழர்கள் அறுவர் யாவர்? 

பீட்டர் ஃபேபர், பிரான்சிஸ் சவேரியார், டியேகோ லெயினஸ், அல்போன்சா சால்மல்ரோன், நிக்கோலாஸ் தெ பொபடில்லா, சைமன் ரொட்ரீகுவஸ். 

249. இஞ்ஞாசியாரின் ஆன்மிகப்பயிற்சிகளை முடித்த இஞ்ஞாசியாரின் நண்பர்கள் எத்தனைபேர்?

ஆறு பேரும்.

250. ஆன்மீகப்பயிற்சிகளை ஒரு மாத அளவில் செய்து முடித்த இஞ்ஞாசியாரின் நண்பர்கள் தங்களை எவ்வாறு அழைத்துக்கொண்டனர்?

ஆண்டவரில் நண்பர்கள் (Friends in the Lord).