தவம் செய்த இயேசு..
“ அங்கு நாற்பது பகலும் நாற்பது இரவும் நோன்பிருந்தபின் பசியுற்றார்”
மத்தேயு 4 : 2
இயேசு ஆண்டவர்தானே, கடவுள்தானே.. பின்பு ஏன் அவர் நோன்பிருக்க வேண்டும்..?
முன்பே நாம் பார்த்தோம்.. இயேசு சுவாமி கடவுளாக இருந்தாலும் ஜெபித்தார் என்று...
மத்தேயு முதல் அருளப்பர் நற்செய்திவரை இயேசு சுவாமி அடிக்கடி ஜெபித்தார் என்று பார்க்கிறோம்
தனியான இடங்களில், தோட்டங்களில், மலைப்பகுதிகளில் ஜெபித்தார்.. சில நேரங்களில் இரவெல்லாம் ஜெபித்தார் என்று பார்த்தோம்..
அதே போல கருக்கலில்.. விழிட்டார்..எழுந்தார்.. ஜெபித்தார் மற்றும் சீடர்களைப்பார்க்க வந்தார் என்று பார்க்கிறோம்..
ஆக இயேசு சுவாமி ஜெபம் இல்லாமல் ஒரு நாள் கூட இருந்ததில்லை..
இப்போது பாருங்கள் இங்கே தவம் இருக்கிறார்..
ஏற்கனவே போன பதிவுகளில் நாம் பார்த்தோம் ஞானத்திலும், அறிவிலும், வரப்பிரசாதத்திலும் வளர்ந்தார் இயேசு என்று ..
இன்னும் கூட ஒரு இறைவசனத்தைப் பார்ப்போம்..
“ பாலனோ வளர்ந்து வலிமை பெற்றார்; ஞானம் நிறைந்தவராக இருந்தார்; கடவுள் அருளும் அவரோடு இருந்தது”
லூக்காஸ் 2 : 40
இயேசு சுவாமியிடம் பாவம் கிடையாது.. ஏனென்றார் அவர் அமலோற்பவர்..
நல்லவர்.. நன்மைத்தனமாவர்.. பரிசுத்தர்.. இப்படி அவர் இருந்தும் ஏன் தவம் செய்ய வேண்டும்.. தவம் ஏன் அவருக்கு தேவைப்பட்டது..
அதற்கு விடை அதற்கு முந்தைய வசனத்தில் இருக்கிறது..
“ பின்னர் இயேசு சோதிக்கப்படுமாறு பாலைவனத்திற்கு ஆவியானவரால் அழைத்துச் செல்லப்பெற்றார்”
மத்தேயு 4 :1
நீங்கள் மேலே பார்த்தது.. இரண்டாவது வசனம்..
ஆக கடவுளாகவே இருந்தாலும் அவர் மனிதராகவும் இருந்ததால் அவருக்கு ஜெபமும், தவமும் தேவைப்பட்டது..
ஏனென்றால் மனிதப் படைப்பு கொஞ்சம் பலவீனமான படைப்புதான்..
கொஞ்சம் அசந்தாலும் நம் ஆன்மா திருட்டுப் போய்விடும்..
இதை டபுள் அண்டர்லைன் செய்க ( Double underline)..
அருளாகவே இருக்கும்.. அருளின் முழுமையாக இருப்பவருக்கே ஜெபமும், தவமும் தேவைப்பட்டது என்றால் இருளாக இருக்கும் நமக்கு அது தேவைப்படுமா? படாதா?
அருளாகவே இருந்தவருக்கு சோதிப்பவன் அதாவது பிசாசு இத்தகைய சோதனையைக் கொடுத்தான் என்றால்..
பாவ இருளில் வாழும் நமக்கு எத்தகையை சோதனையைத் தருவான்…
ஆண்டவரே நமக்கு வார்னிங்க் கொடுத்துள்ளார்..
இந்த வசனத்தை நேரடி வுல்கேட்ஸ் பைபிளிலிருந்து எடுப்போம்..
“ ஆனால் நீங்கள் தபஞ்செய்யாவிடில் எல்லோரும் அப்படியே கெட்டுப்போவீர்கள் “
லூக்காஸ் 13 : 5
அதாவது சீலோவே கோபுரம் இடிந்து 18 பேர் செத்துப்போன சம்பவத்தைப் பற்றி ஆண்டவர் பேசும்போது இப்படி குறிப்பிடும்போது இப்படி பேசுகிறார்..
தவம் செய்யவில்லை என்றால் நீங்கள் கெட்டுப்போவீர்கள்.. அழிந்து போய் வீடுவீர்கள்.. நரகத்தில் செத்துப் போவீர்கள் அதாவது முடிவில்லா மரணமான நரக நெருப்புக்குள் சென்று விடுவீர்கள் என்று சொல்கிறார்..
இங்கே ஒரு செக் வைப்போம்…
சவுக்கியமாகவே இருந்து.. சவுக்கியமாகவே வாழ்ந்து… சவுக்கியமாகவே செத்துப்போவோம் என்று சொல்லும் பிரிவினர் சபையினரின் நிலை என்ன?
அதற்கு அவர்கள் வைத்திருக்கும் பெயர்.. ஆசீர்வாதம்…
கடவுள் அவர்களுக்கு என்ன செய்வாராம்… “ பெருகவே பெருகப் பன்னுவாராம்”
“ முதல்ல ஒரு வீடுதான் இருந்திச்சு இப்ப நாலு வீடாகிட்டு”
“ முதல்ல சொத்தே இல்லாமலிருந்தேன்.. இப்ப ஏகப்பட்ட சொத்து”
“ காசு பணத்திற்கு அளவே இல்லை.. சவுரியத்திற்கு குறைவே இல்லை”
அதற்கு அவர்கள் வைத்திருக்கும் பெயர் ஆசீர்வாதம்..
ஏன் வறுமை இருக்கும் வீட்டில் கடவுளின் ஆசீர்வாதம் இருக்காதா?
கஷ்ட்டம் இருக்கும் வீட்டில் கடவுளின் ஆசீர்வாதம் இருக்காதா?
வேதனை துன்பங்கள் வலி இருக்கும் வீட்டில் கடவுளின் ஆசீர்வாதம் இருக்காதா?
ஆண்டவர் என்ன மாட மாளிகையில் வாழ்ந்தாரா?
புனித சூசையப்பர் குபேரனா?
வேலை வந்து குவிந்து கோடீஸ்வரராக வாழ்ந்தாரா?
ஆட்டுக்குட்டிக்கு கூட வழியில்லாமல் காணிக்கையாக மாடப் புறாக் குஞ்சுகளைத்தானே கொடுத்தது அன்று அந்த திருக்குடும்பம்…
கடவுள் வாழ்ந்த குடும்பம் வறுமையில் உழன்ற குடும்பம்தானே.. சரியான வார்த்தை என்றால் தரித்திரத்தில் வாழ்ந்த குடும்பம்..
அவர்கள் பார்வையில் சொல்லப்போனால் ஆசீர்வாதம் இல்லாத குடும்பம் அப்படித்தானே..
அங்கேயா ஆசீர்வாதம் இல்லை.. பரலோகத்தின் மொத்த ஆசீர்வாதமும் அங்கேதானே இருந்தது.. பரலோகமே அங்கேதானே இருந்தது..
இந்த தரணிக்கு மொத்த ஆசீர்வாதத்தையும் கொடுக்கும் கடவுளே அங்கேதானே இருந்தார்..
அப்படியென்றால் ஆசீர்வாதம் என்பது வீடு வாசல் சொத்து சுகத்தில் இல்லை..
கஷ்ட்டத்திலும், தரித்திரத்திலும் கடவுளின் ஆசீர்வாதம் இருக்கும்..
இப்போது மீண்டும் தவத்திற்கு வருவோம்..
ஏக பரிசுத்தரும்.. பரம யோக்கியருமான பரமன் தவம் செய்தார் என்றால்.. நாம் தவம் செய்துதானே ஆகவேண்டும்..
நாம் தவம் செய்கிறோமா?
நம்முடைய ஆன்மீக வாழ்வில் தவத்தின் பங்கு எத்தனை விகிதம்?
ஏன் தவம் நமக்குத் தேவை.. தவத்தின் வகைகள் என்ன?
என்ற சிந்தனைகளோடு கடவுளுக்கு சித்தமானால் அடுத்த பகுதியில்..
நம் நேசப்பிதா வாழ்த்தப் பெறுவாராக ! பரிசுத்த ஆவியானவர் போற்றி !
சுதனாகவும், வார்த்தையாகவும் இருந்து மனுவுருவான இயேசுவுக்கே புகழ் !
மனுவுருவாக, கடவுளுக்கு தன் சரீரத்தைக் கொடுத்த மா மரியாயே வாழ்க !