மீண்டும் படை மிரட்டியின் அதிரடி..
வெண்குதிரையில் வந்து வழி காட்டுகிறார் நம் சந்தியாகப்பர்..
12-ம் நூற்றாண்டில் திருப்பயணிகளின் எண்ணிக்கை 5 லட்சத்தை எட்டியது.. சண்டியாக டி கொம்பெஸ்தெல்லா செல்லும் திருப்பயணிகளின் எண்ணிக்க அதிகரித்த வன்னம் இருந்தது. அதைப்பொறுக்காமல் பொறாமை அடைந்த திருமறை எதிரிகள் சந்தியாகப்பர் ஆலயத்திற்கு செல்லும் மக்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்று முடிவு செய்தார்கள். அதற்கு ஒரே வழி பாதைகளை அடைத்து விடுவதுதான் என்று முடிவு செய்து சூழ்ச்சி செய்து பாதைகளை அடைத்தும், மறைத்தும் விட்டார்கள். சண்டியாக டி கொம்பெஸ்தெல்லா சென்று தூய யாகப்பரை சந்திக்க வந்த லட்சக் கணக்காண மக்கள் செல்ல வழி தெறியாமல் தவித்தார்கள். வழி எங்கேயிருக்கிறது என்று தேடி அலைந்தார்கள். ஒரு திக்கற்ற சூழ்நிலை. இந்த திக்கற்ற சூழ்நிலையில் சந்தியாகப்பரே தஞ்சம் என்று மக்கள் அனைவரும் ஒரே மனத்தோராய் தூய சந்தியாகப்பரை நோக்கி மன்றாடினார்கள். தங்களுக்கு சரியான வழியை அவரே காட்ட வேண்டும் என்று வேண்டினார்கள்..
அவர் பிள்ளைகள் அழைத்தார் வரமாட்டாரா என்ன ? மீண்டும் வானிலிருந்து வெண் குதிரையில் வாள் ஏந்தியவராய் இறங்கினார், ஆகாயத்தில் தோன்றிய அவர் தன் வாளை மேலே உயர்த்தி தன் ஆலயம் இருக்கும் திசையை காட்ட. ஆகாயத்தில் உள்ள அனைத்து நட்சத்திரங்களும் ஒன்று சேர்ந்து அவர் வாளுக்கு முன்னால் சண்டியாகோ டி கொம்பெஸ்தெல்லா இருந்த திசையை நோக்கி வரிசையாக அணிவகுத்து நின்றன. மக்கள் பேருவுவகையும், மகிழ்ச்சியும் அடைந்தார்கள்.. அவருக்கு நன்றி கூறிக்கொண்டே நட்சத்திரம் இருந்த திசையை நோக்கி நடந்தார்கள் பரிசுத்த சந்தியாகப்பரின் ஆலயத்தை அடைந்தார்கள்..
நட்சத்திரத்தின் தோட்டமான சண்டியாகோ த கொம்பெஸ்தல்லாவிற்கு நட்சத்திரங்களை வைத்தே வழி காட்டி விட்டார் நம் அருமைப் புனிதர் படை மிரட்டி சந்தியாகப்பர்...
அதுமுதல் எந்த கொம்பனாலும் அவர் ஆலயம் செல்லும் வழியை அடைக்கவோ, மறைக்கவ்வோ முடியவில்லை.. அதற்கு மாறாக அவர் ஆலயம் செல்லும் மக்கள் வெள்ளம் அதிகரித்துக்கொண்டே சென்றது..
ஜெபம் : அன்று திருமறையின் எதிரிகள் உம் ஆலயம் செல்லும் வழியை அடைத்து விட்டார்கள்.. இப்போது உம் தலைவரும், எங்கள் தலைவருமான ஆண்டவர் இயேசுவை நோக்கி செல்லும் வழிகளை ஆன்மீக எதிரிகள் பலர் அடைத்து வருகிறார்கள்.. அந்த ஆன்மீக எதிரிகள் யார்? அதில் முக்கியமாக மீடியா, வலைத்தளங்கள், தொலைக்காட்சி, தொலைபேசி, சினிமா, போதை என்று அவர்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்கிறார்கள்.. மொத்ததில் உலகம், சரீரம், பிசாசு ஆகிய மூன்றும் ஆன்மாக்களை வீழ்த்தும், கடவுளுக்கு எதிராக திசை திருப்பி பாவ சகதியில் சிக்க வைக்கும் சக்திகளாக வெகு வேகமாக மாறிவருகின்றன..
அதில் மக்களோடு மக்களாக இனைந்து ஒவ்வொரு வீடுகளிலும் குடும்பத்தில் நிரந்தர குடும்ப உறுப்பினராகிவிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அப்பட்ட அபத்த ஆபாச நிகழ்ச்சிகளாகிவிட்டன. அதில் கலாச்சாரத்தை கெடுக்கும் கேடு கெட்ட நிகழ்ச்சியான ‘பிக் பாஸும்’ ஒளிப்பரப்பாகி சமூகத்தில் ஒழுக்க கேட்டை ஏற்படுத்தி வருகிறது.
அதற்கு நீர்தான்யா சரியான ஆள்.. வெள்ளைக் குதிரையில் வாளோடும் சாட்டையோடும் வந்து கண்ணுக்கு தெரியாமல் பின்னால் இருந்து செயல்பட்டுவரும் பிசாசின் படைகளை அடித்து நொறுக்கி இத்தகைய சீர்கேடுகளை முறியடித்து நிர்மூலமாக்கியருளும்.. அன்பு, ஒழுக்கம், நேர்மை, பிறர் ஸ்நேகம், பண்பு, சமாதானம், அமைதி, பரிசுத்தம் செழித்து மக்கள் எல்லோரும் நேச பிதாவின் நேரடி ஆட்சியின் கீழ் வரவும், கிறிஸ்தவம் அனைத்து நாடுகளில் செழித்து, தழைத்து வளரவும் அருள் புரிய படைமிரட்டி எங்கள் பாசமிகு பாதுகாவலவர் புனித சந்தியாகப்பரே எங்களுக்காகவும், அனைத்து மக்களுக்காகவும் வேண்டிக் கொள்ளும்.
கடவுளுக்கு சித்தமானால் மீண்டும் வருவேன் ஆற்றல் தரும் அருட்துணையோடு..
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !